Skip to main content

விடை 3500



இன்று காலை வெளியான வெடி:
திரும்பப் பெற்றது மேல் நாட்டம் நடுவில் குறைந்து கொள்ளும் (4)
இதற்கான விடை:  மீட்டது 

விடைக்கான விளக்கத்தை ஆர்வமுள்ளவர்கள்  கருத்துரையாக இடலாம்.

தமிழில் "ள்" என்ற எழுத்தில் முடியும் வினைச் சொற்கள் எளிதில் புலப்படாதவிதமாய் மாற்றமடைகின்றன.  நீள், வறள், புறள் என்பவை நீண்டு, வறண்டு, புரண்டு என்று என்றும், பெயர்ச்சொல்லாகும்போது  நீட்சி, வறட்சி, புரட்சி என்றும்  உருமாறுகின்றன.  ஏற்கனெவே தோசையைப்  புரட்சியால் (புரளவைத்து) விளைந்த தின்பண்டம் என்று புதிரமைத்திருக்கிறேன்.

இன்றைய வெடிக்கு வேரான வினைச்சொல் "மீள்". அது மீண்டு, மீட்டு (தன்வினை, பிறவினை)  என்று  இறந்தகால எச்சமாக வரும். மீட்சி என்ற சொல்லை பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் அழகாகக் கையாண்டுள்ளார்கள். ("மீட்பர் ஏசு").

  மீட்டு என்பது வினையாக வீணையின் கம்பிகளில் விரலால்  அதிரவைப்பதைக் குறிக்கும். என்றாவது அதை வைத்தும் உங்களை  மீளாத் தொல்லையில் ஆழ்த்தும்படி ஒரு புதிர் செய்துவிட வேண்டும். 


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (35):

1) 6:07:37 முத்துசுப்ரமண்யம்
2) 6:08:45 அம்பிகா
3) 6:10:28 கேசவன்
4) 6:16:30 K.R.Santhanam
5) 6:17:15 எஸ்.பார்த்தசாரதி
6) 6:21:46 லட்சுமி சங்கர்
7) 6:37:02 உஷா
8) 6:42:12 மடிப்பாக்கம் தயானந்தன்
9) 7:01:42 பிரசாத் வேணுகோபால்
10) 7:12:49 சுபா ஸ்ரீநிவாசன்
11) 7:14:52 ரவி சுப்ரமணியன்
12) 7:19:25 ராதா தேசிகன்
13) 7:24:28 ஆர்.நாராயணன்.
14) 7:50:36 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 7:51:09 Siddhan Subramanian
16) 8:02:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 8:12:04 மீ கண்ணன்
18) 8:23:26 சங்கரசுப்பிரமணியன்
19) 8:53:45 தி. பொ. இராமநாதன்.
20) 8:57:08 KB
21) 9:39:24 மீனாக்ஷி
22) 10:45:38 இரா.செகு
23) 10:58:09 கோவிந்தராஜன்
24) 11:17:24 ஆர்.பத்மா
25) 11:52:44 மாலதி
26) 12:16:05 மு க பாரதி
27) 13:29:22 மு.க.இராகவன்.
28) 15:00:49 ராஜி ஹரிஹரன்
29) 15:49:13 ரமணி பாலகிருஷ்ணன்
30) 17:40:21 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
31) 19:55:07 கேசவன்
32) 20:22:28 ரவி சுந்தரம்
33) 20:33:23 சுந்தர் வேதாந்தம்
34) 20:43:29 ஏ.டி.வேதாந்தம்
35) 20:43:52 பத்மாசனி
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_பாரதியார் பக்தி பாடல் பராசக்தி_

_ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்-_
_அதை அன்னை எனப்பணிதல் ஆக்கம்;_
_சூதில்லை காணுமிந்த நாட்டீர்!மற்றத்_ _தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்._
_மூலப் பழம்பொருளின் *நாட்டம்* -_
_இந்த மூன்று_ _புவியுமதன் ஆட்டம்;_ _காலப் பெருங்கள்ததின் மீதே எங்கள் காளி_ _நடமுலகக் கூட்டம்_

💐💐💐💐💐💐💐💐
_திரும்பப் பெற்றது மேல் நாட்டம் நடுவில் குறைந்து கொள்ளும் (4)_

_மேல்_ = *மீது*

_நாட்டம் நடுவில் குறைந்து_

=[நா] *ட்ட* [ம்] = *ட்ட*

_கொள்ளும்_
= *மீது <--- ட்ட*
= *மீட்டது*

= _திரும்பப் பெற்றது_
************************
" _அன்பே_ 
_நம் வீட்டு மூலையிலே_ 
_அமைதியான இரவின்_
_இன்ப நினைவுகளைப்​ போலும்_ 
_அழிக்க முடியாத அமைதியின்_ 
_ஆழமானதோர் புத்தொளிபோலும்_ 
_வந்தமர்திருக்கும்_ 
_அந்தப்​ பேர்யாழை உன்_ _மடியெடுத்து_ *_மீட்டு_* 
_உலகில் மறைந்து_ _கிடக்கும் பேரிசையை_ 
_அது *மீட்கட்டும்* ... "_ 

_(தேவதேவன்)_
********************
வர வர எதிலுமே ஆசை குறைகிறது
வயதானதாலா? அனுபவத்தாலா?

நாடியது நல்காமல் நசுங்கியே வாழ்ந்தால்
நாட்டம் குறைந்து தான் விடுமோ?🤔🤔🤔
************************
Muthu said…
நன்றி!
மார்வாடியிடம் நகை அடகு வைத்த ஏழைகள் வட்டி முதல் கட்டி மூழ்காமல் மூட்டது என்பார்கள்!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்