Skip to main content

விடை 3483

இன்று காலை வெளியான வெடி:
இன்பத்தைத் தருவது நலந்தானா? மனது முதலில் ஒட்டவில்லை (5)
இதற்கான விடை: சுகமானது  = சுகமா (நலந்தானா?)  +   னது (மனது -ம)
-------------------------

தீபாவளிக்கான விநோதப்புதிர்.  இப்புதிரில் உதிரிவெடியின் தெளிவு இல்லை என்பதை விடையாக வந்திருக்கும் பல சொற்களிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.
அதனால் குறிப்புகளில் விவரங்கள் போதாதென்பது தெரிகிறது.

அதனால ஒரு விவரம் அதிகப்படியாக அளித்து (அதாவது முத விடைச் சொல்)  இன்னமும் 24 மணிநேரம் அவகாசத்தை இப்புதிருக்கு நீட்டிக்கிறேன். அதோடு பலருக்கு தீபாவளிக் கொண்டாட்டத்தில் வழக்கம்போல நேரம் ஒதுக்கியிருக்க முடியாது.


முதலாவதாக வரவேண்டிய சொல் "நாமக்கல்லிலிருக்கும்". சாதாரணமாகத் தமிழ்ச் சொற்களில் இல்லாத அமைப்பு இதில் காணலாம்.  மற்ற விடைகளும்  இந்த  குணாம்சத்தை கொண்டிருக்க வேண்டும். "நாமக்கல்லிலுள்ள" என்று எழுதினால் அது தவறாகிவிடும்.  இப்போது மீண்டும்  அப்புதிரை  எட்டிப் பாருங்கள்!

இதுவரை அந்த குணாம்சத்தைக் கண்டு விடையளித்தவர்கள் இரண்டு பேர்:
1. அம்பிகா   2. ஹரி பாலகிருஷ்ணன் 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (30):

1) 6:01:55 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:46 கேசவன்
3) 6:05:52 சதீஷ்பாலமுருகன்
4) 6:18:44 நாதன் நா தோ
5) 6:23:54 மு.க.இராகவன்.
6) 6:27:13 மாதவ்
7) 6:31:03 ஆர்.நாராயணன்.
8) 6:31:09 பிரசாத் வேணுகோபால்
9) 6:43:10 ஶ்ரீவிநா
10) 6:44:12 ராஜா ரங்கராஜன்
11) 6:45:02 KB
12) 6:50:28 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
13) 6:52:27 உஷா
14) 6:55:47 எஸ் பி சுரேஷ்
15) 7:15:01 ரவி சுப்ரமணியன்
16) 7:16:52 ஹரி பாலகிருஷ்ணன்
17) 7:35:57 வி ன் கிருஷ்ணன்
18) 7:40:12 நங்கநல்லூர் சித்தானந்தம்
19) 7:59:49 கி மூ சுரேஷ்
20) 8:01:25 பா நடராஜன்
21) 8:17:36 முத்துசுப்ரமண்யம்
22) 8:24:18 மீ கண்ணன்
23) 8:54:18 பாலு மீ
24) 9:11:45 மீனாக்ஷி
25) 9:54:52 மு க பாரதி
26) 10:15:38 ஆர். பத்மா
27) 13:16:45 ராஜி ஹரிஹரன்
28) 14:27:11 அம்பிகா
29) 15:51:54 சங்கரசுப்பிரமணியன்
30) 17:41:51 மீனாக்ஷி கணபதி
**********************
Raghavan MK said…

*_நலந்தானா வென_* _நயம்பட விளித்த_

_நல்லாசிரியருக்கு நவில்வோம் நன்றி பல!_

_அகமகிழ்ந்தோம் இத் தீபத்திருநாளில்_

_*சுகமானது* , பெற்ற_
_இதம்தரும் அனுபவங்கள்!_

💐🙏🏼💐
Raghavan MK said…



Msg from
M K பாரதி.

*புதிரும் எதிரும்*

திருநாளில் உருவானது,
*புதிரானது* அழகானது
பதிலானது *சுகமானது*
துயருக்கு *எதிரானது*

பாரதி.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்