Skip to main content

விடை 3491

இன்றைய வெடி:
சுட்டு சிறுத்து உள்ளிருப்பது போய்விட்டது (2)
இதற்கான விடை:  குறி = குன்றி - ன்  (வினைசொல்லாக சுட்டு என்பதுடன் ஒத்த பொருளுடையது குறி. ஆங்கிலத்தில் indicate)

இன்று வந்த பலவிதமான விடைகளில் மிகவும் நெருக்கமானது: "இது". இவ்விடை இளைத்து (சிறுத்து) என்பதில் உள்ளிருப்பது போகப் பெறப்பட்டது இதன் அழகு. "இது" என்பது சுட்டுப்பெயர்.

மொத்தம் வந்த 61 விடைகளில் 25 சரியானவை.  வந்த மற்ற விடைகள்:
வாடி, உளி, சூடு,
சுடு, நீர், ஓடு,
காய், உது, வறு,
மதி, சிதை, எது,
திரி, ரவை

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (25):

1) 6:12:27 நங்கநல்லூர் சித்தானந்தம்
2) 6:12:59 எஸ்.பார்த்தசாரதி
3) 6:13:17 ராஜி ஹரிஹரன்
4) 6:13:30 சங்கரசுப்பிரமணியன்
5) 6:17:58 Sandhya
6) 6:27:42 கோவிந்தராஜன்
7) 6:32:52 மடிப்பாக்கம் தயானந்தன்
8) 6:33:47 ஆர்.நாராயணன்.
9) 6:54:00 சுந்தர் வேதாந்தம்
10) 7:08:20 ராதா தேசிகன்
11) 7:08:49 ரவி சுந்தரம்
12) 7:23:53 பிரசாத் வேணுகோபால்
13) 7:25:38 அம்பிகா
14) 8:00:09 கு.கனகசபாபதி, மும்பை
15) 8:41:55 உஷா
16) 8:48:54 ருக்மணி கோபாலன்
17) 8:57:21 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
18) 9:16:09 தி. பொ. இராமநாதன்
19) 9:32:08 மு க பாரதி
20) 9:36:12 தேன்மொழி
21) 10:58:29 சதீஷ்பாலமுருகன்
22) 12:58:01 ஆர். பத்மா
23) 15:13:58 KB
24) 18:04:21 மு.க.இராகவன்.
25) 19:38:17 பாலா
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
தனது காதலியின் இடை ஒடிந்து விழும் அளவு *சிறுத்து* அழகு தருவது என்பதைக் காதலன் தெரிவிப்பதாக உள்ள கவிதை.

_அனிச்சப்பூக்_ _கால்களையாள்_ _பெய்தாள் நுசுப்பிற்கு_
_நல்ல படாஅ பறை_

(குறள் எண்:1115)
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய *சிறுத்த* இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

இடை *சிறுத்த* உடுக்கை போன்ற உடலமைப்புக் கொண்டவள் அவனது காதலி. இல்லை என்ற அளவு சிறுத்தது அவள் இடை. ஆதலால் அவளது உடலின் மேற்பகுதியின் சுமையை அந்த மெல்லிடை தாங்குவது இயலாது என்று எண்ணுகிறான் அவன். ஆனால் இதைப்பற்றி கொஞ்சம்கூட நினையாமல், அனிச்ச மலரின் காம்பைக் கிள்ளாமல் தன் கூந்தலில் அணியப் போகிறாள். இதைக் காணநேர்ந்த காதலன் காம்பின் சுமையைத் தாங்க முடியாமல் அவளது இடை ஒடிந்து விழுந்து அவள் உயிர் நீங்கும் நிலை ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சுகிறான். ஐயோ! இனி எப்படி நல்ல பறை ஒலிக்கும். சாப்பறை அல்லவா ஒலிக்கும் என்று வருந்துகிறான்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

_சுட்டு சிறுத்து உள்ளிருப்பது போய்விட்டது (2)_

_சிறுத்து_
= *குன்றி*

உள்ளிருப்பது போய்விட்டது
= *கு ~ன்~ றி*
= *குறி*

_சுட்டு_ = *குறி*

***********************
J.P.Fabricius Tamil and English Dictionary

*சுட்டு*
வினைச்சொல்
= mark, distinction, *குறி*

_Oxford Dictionaries_

1. *சுட்டு*
வினைச்சொல்
சுட்ட, சுட்டி

_குறிப்பிடுதல்;_ (குறிப்பிட்ட ஒன்றை) உணர்த்துதல்.

2. *குறி*

ஒன்று மற்றொன்றை) *_சுட்டுதல்_* ; (எது எங்கு உள்ளது என்று) *_சுட்டிக்காட்டுதல்_* ; (துல்லியமாக) தெரிவித்தல்.

‘இந்தப் படம் எதைக் *குறிக்கிறது* ?’
‘பூவின் படம் வரைந்து பாகங்களைக் *குறிக்கவும்’*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

_*சுட்டும்* விழிச் சுடர் தான் கண்ணம்மா_ _சூரிய சந்திரரோ_

_வட்டக் கரிய விழி கண்ணம்மா_ _வானக்கருமை கொலோ_

_பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்_

_நட்ட நடுநிசியில் தெரியும்_ _நட்சத்திரங்களடீ_

( *பாரதியார்* )

💐🙏🏼💐
Raghavan MK said…


முதலில்
இளைத்து --ளைத் = *இது* ( சுட்டு ச்சொல்)
என விடை அனுப்பினேன்.
பின்னர் *குறி* எனும் சொல் ஒருபடி அதிகமான பொருத்தமாக தோன்றியதில் மாற்றி அனுப்பினேன்.
உஷா said…

இன்றைய புதிர் ஆசிரியர் நேற்று 'குறி'ப்பிட்டபடியே சற்று சவாலாகவே இருந்தது.
Raghavan MK said…


இது
என்ற விடையும் பொருந்தியுள்ளதாகவே தோன்றுகிறது!
ஆசிரியர் ,அவர்கள் பட்டியலையும் வெளியிடலாமே !
Ramiah said…
வாடி = வாட்டி - ட். இது பொருந்துவதில்லையே ? விளக்கச்சொல் ( definition is ) சுட்டு, அல்லவா ?
சிறுத்து, சுட்டு உள்ளிருப்பது போய்விட்டது (2)என்று புதிர் அமைந்திருந்தால் , வாடி என்ற விடையும் . பொருந்துமா ? யாரேனும் சொல்லுங்கள் ! மற்ற உளி, முதல் ரவை வரை உள்ள வாதம் புரியவில்லை.
மிக மிக ரசிக்கும்படியான புதிர். பல நல்ல சிந்தனைகள் தோன்ற வைத்த புதிர்.
Muthu said…
சுட்டு சிறுத்து உள்ளிருப்பது போய்விட்டது (2) இதற்கு வாடி என்று விடையிறுத்தவர்களில் நானும் ஒருவன். சுட்டு என்பத்ற்குக் "குறி" என்ற இணைச் சொல் எனக்கும் எங்கள் "consortium" (என் இரு தம்பிகள், இரு தங்கைகள்) யாருக்கும் தோன்றவில்லை. புதிரைப் பலவிதம் பிரித்தேன்: சுட்டு (3) - உள்ளிருப்பது போய்விட்டது (1) =சிறுத்து (2)? (அ) சுட்டு (2) = சிறுத்து (3) -உள்ளிருப்பது போய்விட்டது (-1)? (அ) சுட்டு சிறுத்து = உள்ளிருப்பது போய்விட்டது (2)? இவற்றில் [ (அ) சுட்டு (2) = சிறுத்து (3) -உள்ளிருப்பது போய்விட்டது (-1)? ] என்பத்ற்கு விடை வாடி (சுட்டு = வாட்டி) என்று (சந்தேகத்துட்னேயே) அனுப்பி வைத்தோம்!
Muthu said…
திருத்தம்: இவற்றில் [ (சுட்டு (3) - உள்ளிருப்பது போய்விட்டது (1) =சிறுத்து (2)] என்பத்ற்கு விடை வாடி (சுட்டு = வாட்டி) என்று (சந்தேகத்துடனேயே) அனுப்பி வைத்தோம்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்