Skip to main content

விடை 3501

இன்று காலை வெளியான வெடி
கண்ணைத் திறந்து இரண்டாம் நாழிகை வெளியே சென்ற தாவரத்தின் கரு (4)

இதற்கான விடை: விழித்து  = ழி இருக்க, வெளியே சென்றது வித்து.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (64):

1) 6:01:15 ராதா தேசிகன்
2) 6:01:30 ரவி சுப்ரமணியன்
3) 6:02:06 முத்துசுப்ரமண்யம்
4) 6:02:17 உஷா
5) 6:02:22 அம்பிகா
6) 6:02:48 இரா.செகு
7) 6:03:39 K.R.Santhanam
8) 6:03:50 வி ன் கிருஷ்ணன்
9) 6:04:43 ரமணி பாலகிருஷ்ணன்
10) 6:04:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:05:27 லட்சுமி சங்கர்
12) 6:05:58 ரவி சுந்தரம்
13) 6:06:20 சாந்திநாராயணன்
14) 6:07:03 ஶ்ரீவிநா
15) 6:07:08 ஆர்.நாராயணன்.
16) 6:08:08 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 6:10:35 வானதி
18) 6:10:58 ராஜா ரங்கராஜன்
19) 6:11:54 Sandhya
20) 6:13:06 சுந்தர் வேதாந்தம்
21) 6:15:10 லதா
22) 6:15:51 Siddhan Subramanian
23) 6:16:09 KB
24) 6:18:11 மு.க.இராகவன்.
25) 6:21:19 கேசவன்
26) 6:21:22 மடிப்பாக்கம் தயானந்தன்
27) 6:28:44 சதீஷ்பாலமுருகன்
28) 6:31:22 பாலு மீ
29) 6:36:12 ராஜி ஹரிஹரன்
30) 6:37:06 நாதன் நா தோ
31) 6:40:22 ராமராவ்
32) 6:54:00 ஸௌதாமினி
33) 6:57:29 பா நடராஜன்
34) 6:59:28 எஸ் பி சுரேஷ்
35) 7:04:50 பிரசாத் வேணுகோபால்
36) 7:08:57 மு க பாரதி
37) 7:09:57 மீ கண்ணன்
38) 7:14:10 வி.ஜயா
39) 7:16:22 மாதவ்
40) 7:18:04 மும்பை ஹரிஹரன்
41) 7:25:30 ரங்கராஜன் யமுனாச்சாரி
42) 7:28:12 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
43) 7:43:41 கி மூ சுரேஷ்
44) 7:51:37 மாலதி
45) 8:09:02 பினாத்தல் சுரேஷ்
46) 8:19:11 திருக்குமரன் தங்கராஜ்
47) 8:22:27 தி. பொ. இராமநாதன்
48) 8:34:30 பூமா பார்த்த சாரதி
49) 8:46:56 கு.கனகசபாபதி, மும்பை
50) 8:49:11 கலாராணி
51) 8:50:20 மீனாக்ஷி
52) 8:58:21 Suba Srinivasan
53) 9:02:40 செந்தில் சௌரிராஜன்
54) 9:16:43 மீனாக்ஷி கணபதி
55) 9:18:33 சங்கரசுப்பிரமணியன்
56) 10:11:53 கோவிந்தராஜன்
57) 11:05:54 தேன்மொழி
58) 11:29:53 ஆர். பத்மா
59) 12:31:02 ஏ.டி.வேதாந்தம்
60) 12:31:23 பத்மாசனி
61) 12:32:00 அனுராதா ஜெயந்த்
62) 16:33:10 புவனா சுவராமன்
63) 18:23:18 பாலா
64) 20:33:49 ஹரி பாலகிருஷ்ணன்
**********************
Ambika said…
Both tamil and english clue has seeds in it today ;)
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*வித்து* அல்லது விதை (Seed) என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும்.
🌱🌱🌱🌱🌱🌱🌱
*_வித்து_*

முயற்சிகள் யாவும் வெற்றி தருவதில்லை ஆனால்
வெற்றியின் வித்து முயற்சியின்றி வேறில்லை

சொற்கள் யாவும் கவிதை ஆவதில்லை ஆனால்
கவிதையின் வித்து
சொற்களின்றி வேறில்லை

பார்வைகள் யாவும் காதல் கொள்வதில்லை ஆனால்
காதலின் வித்து பார்வையின்றி வேறில்லை

அணுக்கள் யாவும் கரு ஆவதில்லை ஆனால்
கருவின் வித்து அணுவின்றி வேறில்லை

பக்தி யாவும் முக்தி பெறுவதில்லை ஆனால்
முக்தியின் வித்து பக்தியின்றி வேறில்லை
(ச. சந்திரசேகரன்)
************************
_கண்ணைத் திறந்து இரண்டாம் நாழிகை வெளியே சென்ற தாவரத்தின் கரு (4)_

_இரண்டாம் நாழிகை_
= *ழி*

_தாவரத்தின் கரு_
= *வித்து*

_வெளியே சென்ற_
= *(நா)ழி(கை)--->ழி*

_கண்ணைத் திறந்து_
= *வித்து+ழி*
= *விழித்து*
************************
_நெடுஞ்சாலையில்_ 
_எம் கல்லூரி சோலை._

_சிட்டுக்கள் சிறகடிப்பதும்_ 
_மொட்டுக்கள் மலரதுடிப்பதும்_ 
_இங்கேதான்_

_*வித்துக்களே* வாருங்கள்_ 
_நல் விளைநிலம் இங்கே._ 

_நல் எண்ணம் விதைப்போம்,_ 
_பார் எங்கும் உயர்வோம்._ 
_நாளைய பாரதத்தின்_ 
_ஒலியாவோம்_ .

_வன் களை எடுப்போம்,_ 
_நல் கலையோடு_ 
_பல்கலை கற்போம்._ 

_வாருங்கள்_ 
_வழிகாட்டுகிறோம்._ 
_*விழித்து* எழுங்கள்_ 
_உயர்வை காட்டுகிறோம்._

( ரா .ஸ்ரீனிவாசன் )
********************
_' விழித்து எழு, வெளிச்சம் வரும்!_

_மனக்குப்பைகளை வெளியேற்று!_

_நிம்மதி உன்னில்.!_

(Shiva Lachiya)
💐🙏🏼💐
M k Bharathi said…
*விழித்து*எழும்போது
தழைத்து நிற்கும் புதிரில்
செழித்து நிற்கும் எம்தமிழ்
செந்தமிழில் செதுக்கும்
*புதிர் சிற்பியே* வாழி, வாழி!
Raghavan MK said…


TOP SEED PUZZLES!
Chittanandam said…
அது எப்படீங்க ஒரு நிமிடத்திற்குள் புதிரைக் கைப்பற்றி சரியான விடையையும் அளிக்கிறீர்கள்?

உங்கள் வெற்றியின் ரகசியம்தான் என்ன?

நங்கநல்லூர் சித்தானந்தம்
Raghavan MK said…


*விழித்துக் கொள்*


அழித்து வாழ நினைப்போர் பலர்
அவனியில் நிறைந்தார் இன்று

பேராசைக்கொண்டு பிழைப்பதற்கே
ஆளாய்ப் பறக்கிறார் அசுரா் பலர்

மண் அழித்து, நீர் அழித்து,
வனம் அழித்து, வளி அழித்து

வாழும் உயிர்க்கு வரமாய் வாழும்
வளம் அழிக்கும் வன்மம் கண்டு

எது நிகழ்ந்தால் எனக்கென்ன
எனும் போக்கை புறம் தள்ளி

*விழித்து* க்கொள்ளுங்கள் மாந்தரே
வீணர்களை வதைத்து வீசுங்கள்

மறுத்தால் பழித்துவிடும் நம் பண்பை
அடுத்து வரும் அரும்புத் தலைமுறை!
Raghavan MK said…



[11/24, 21:44] ‪+91 97394 87774‬: இரண்டாம் நாழிகை - ழி

தாவரத்தின் கரு - வித்து

வெளியே சென்ற - வித்து இரு புறமாக வெளியே சென்றது - வி - ழி - த்து

கண்ணைத் திறந்து - விழித்து

இவ்வாறு தான் நான் விளங்கிக் கொண்டேன் ஐயா
[11/24, 22:24] Ravi Sundaram: கண்ணைத் திறந்து = விழித்து. இரண்டாம் நாழிகை = ழி. விழித்து, அதிலிருந்து ழி வெளியே செல்ல வித்து = தாவரத்தின் கரு. எனவே மூன்று எழித்து விடையோ என்ற ஐயம் நேற்று சிலருக்கு தோன்றியது. விடை நான்கெழுத்து என்று சொல்லப்பட்டுள்ளதால் விழித்து என்ற விடை மட்டுமே சரி என்று சொல்லப்பட்டது. எனக்கு இந்த புதிருக்கு 4 எழுத்து விடை மட்டுமே சரி என்று தோன்றுகிறது. _கண்ணைத் திறந்து இரண்டாம் நாழிகை வெளியே *செல்ல* தாவரத்தின் கரு ​​​ _ என்று இருந்தால் வித்து விடை ஆகும் என நினைக்கிறேன்.
[11/24, 22:27] ‪+91 97394 87774‬: உண்மை ஐயா... முதலில் இவ்வாறு தான் குழம்பினேன்...

பிறகு தான் வெளியே சென்றவுக்கும், வெளியே செல்லவுக்குமான வித்தியாசம் விளங்க நான்கெழுத்து மட்டுமே சரி என ஊர்ஜிதம் செய்து கொண்டேன்
[11/24, 22:34] chithanandam: Mr.Ravi Sundaram,

தாவரத்தின் கரு = வித்து

இரண்டாம் நாழிகை = ழி

That's all. It's as simple as that.
[11/24, 22:38] ‪+91 97394 87774‬: கண்டுபிடிக்க வேண்டியது வாக்கியத்தின் முதல் என முடிவெடுத்திருந்தால் இவ்வாறு எளிமையாக எடுத்திருக்கலாம் ஐயா...

கண்டுபிடிக்க வேண்டியது, வாக்கியத்தின் கடைசியாகவும் இருக்கலாம் என்னும் போது, பிற வார்த்தைகள் வெளியே சென்ற அல்லது வெளியே செல்ல முக்கியத்துவம் பெறுகிறது என்பது எனது எண்ணம் ஐயா
[11/24, 22:38] Ravi Sundaram: வித்து + ழி = விழித்து (4). விழித்து - ழி = வித்து (3). இந்த வெடிக்கு எது மிகவும் சரியான விடை? இந்த ஐயம் நெற்று சிலருக்கு வந்தது.
[11/24, 22:55] M K Raghavan: இரண்டாம் நாழிகையில் (ழி) வெளியே சென்றது என்று நான் புரிந்துகொண்ட விதம்!
[11/24, 22:59] M K Raghavan: இரண்டாம் நாழிகையில் (ழி) விழித்திலிருந்து வெளியே சென்றது என்றால் வித்து விடையாக வரும்!
வித்தா, விழித்தா என தீர்மானித்தது 4 என்ற எண்ணிக்கையே!
Raghavan MK said…


👆by Bharathy M.K

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

உதிரிவெடியின் வலையுலக அவதாரம்

வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன். நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள். இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது. குடிப்போர்க்கு  போதை விடிந்தால் குறையும் வெடிதரும் இன்பமோ வேரிட்டு  நின்றிடும் பாங்கான ஆட்டம்  படித்தறிந்த மாந்தர்க்கு நீங்கா நினைவாம் புதிர் கொஞ்சம் பழங்கதை என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி  7x7 அளவிலான  கட்டங்களில் அமைத்து நான்கைந்து  நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.  சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில்  ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்)  1998 டிசம்பரில் தொடங்கினர்.  அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது. பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சு...