Skip to main content

விடை 3494

இன்று காலை வெளியான வெடி
களையெடுக்க உத்தரவு நாம் வேலியிட ஈடுபாடு (4)  
இதற்கான விடை: நாட்டம்  = நாம் + கட்டளை - களை

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (59):

1) 6:04:00 எஸ்.பார்த்தசாரதி
2) 6:12:13 லதா
3) 6:20:35 மு.க.இராகவன்.
4) 6:25:37 அம்பிகா
5) 6:26:17 லட்சுமி சங்கர்
6) 6:47:21 கேசவன்
7) 6:47:49 ராஜி பக்தா
8) 6:48:25 பா நடராஜன்
9) 6:48:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:49:34 ராமராவ்
11) 6:49:51 பாலா
12) 6:54:46 Siddhan Subramanian
13) 6:59:45 ரவி சுந்தரம்
14) 7:00:48 நாதன் நா தோ
15) 7:01:13 ரவி சுப்ரமணியன்
16) 7:01:44 முத்துசுப்ரமண்யம்
17) 7:02:40 ராஜா ரங்கராஜன்
18) 7:03:02 சுந்தர் வேதாந்தம்
19) 7:11:08 மு க பாரதி
20) 7:11:14 மீ கண்ணன்
21) 7:11:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
22) 7:13:20 சங்கரசுப்பிரமணியன்
23) 7:16:39 பிரசாத் வேணுகோபால்
24) 7:19:57 ருக்மணி கோபாலன்
25) 7:23:53 ரமணி பாலகிருஷ்ணன்
26) 7:25:54 இரா.செகு
27) 7:31:19 கல்யாணி தேசிகன்
28) 7:32:56 கலாராணி
29) 7:36:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 7:39:20 சதீஷ்பாலமுருகன்
31) 7:51:14 ஶ்ரீதரன்
32) 7:51:22 பாலு மீ
33) 7:54:44 ஆர்.நாராயணன்.
34) 8:04:36 பானுமதி
35) 8:04:55 உஷா
36) 8:11:55 ஸௌதாமினி
37) 8:26:25 திருக்குமரன் தங்கராஜ்
38) 8:27:09 வி ன் கிருஷ்ணன்
39) 8:33:02 கு.கனகசபாபதி, மும்பை
40) 8:33:07 மடிப்பாக்கம் தயானந்தன்
41) 8:43:21 அனுராதா
42) 8:47:45 வானதி
43) 8:54:10 தேன்மொழி
44) 9:07:01 மீனாக்ஷி கணபதி
45) 9:07:46 KB
46) 9:21:46 ஏ.டி.வேதாந்தம்
47) 9:22:07 பத்மாசனி
48) 9:41:11 மீனாக்ஷி
49) 9:41:49 வி,ஜயா
50) 10:23:39 ஆர். பத்மா
51) 10:49:19 ஶ்ரீவிநா
52) 11:09:48 செந்தில் சௌரிராஜன்
53) 11:37:49 மாலதி
54) 11:57:36 கோவிந்தராஜன்
55) 12:38:12 ராதா தேசிகன்
56) 13:08:44 கி மூ சுரேஷ்
57) 13:12:18 ராஜி ஹரிஹரன்
58) 15:28:03 சாந்தி நாராயணன்
59) 19:06:48 Sandhya
**********************
Raghavan MK said…


A peek into today's _*உதிரிவெடி* !_
*************************
_இன்று காலையில் திருத்தி களையெடுத்த_ _பின் புதிருக்கு களைகட்டியுள்ளது!!_

*_உத்தரவின்றி உள்ளே வா_*
என்றழைக்க இயலாமல் நமக்கு *வேலி* யிட்டுள்ளார் புதிரில்.

ஆயினும் நாம்
*_வாட்டம்_* அடையாமல் ,
ஆடும் வரை *_ஆட்டத்தில்_* ஈடுபட்டு ,
பின் ஆயிரத்தில் *_நாட்டம்_* கொண்டு ,
கூடி வரும் *_கூட்டத்துடன்_* , உத்தரவுடன் புதிருக்குள்ளே புகுவோம் வாரீர்!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_களையெடுக்க உத்தரவு நாம் வேலியிட ஈடுபாடு (4)_  

_உத்தரவு_
= *கட்டளை*
_களையெடுக்க_
= *_கட்டளை--களை_*
= *ட்ட*
_நாம் வேலியிட_
= *ட்ட ---->* *நாம்*
= *நா+ ட்ட +ம்* = *நாட்டம்*
= _ஈடுபாடு_
*************************
*ஈடுபாடு*
உறவுகள் எதற்காக?
ஆண், பெண் இடையிலான உறவு முறைக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகளை, அவர்கள் தேவதைகளையும் கடவுளையுமே திருமணம் செய்து கொண்டால்கூட அவர்களாலும் நிறைவேற்ற முடியாது, தோற்றுப்போவார்கள். உங்களது இயல்பான தன்மையே மகிழ்ச்சியாக இருக்குமானால், உறவுகள் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் இருக்குமே தவிர, மகிழ்ச்சியைத் தேடி இருக்காது. உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு நீங்கள் அடுத்தவரிடமிருந்தும் அவர் உள்ளங்களில் இருந்தும் மகிழ்ச்சியைப் பிழிந்தெடுக்க முனைந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு உறவுகள் துன்பம் ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும். எங்கே *ஈடுபாடு* இல்லையோ, அங்கே வாழ்க்கைக்கான வாய்ப்பே இல்லை.

(சத்குரு ஜகி வாசுதேவ்)
🌺🌺🌺🌺🌺🌺🌺
பத்தாம் திருமுறை
மூன்றாம் தந்திரம் -         பாடல் எண் : 7

_*நாட்டம்* இரண்டும்_ _நடுமூக்கில் வைத்திடில்_

_வாட்டமும் இல்லை மனைக்கும்_ _அழிவில்லை_

_ஓட்டமும் இல்லை உணர்வில்லை_ _தானில்லை_

_தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே_                                                      
*பொழிப்புரை:*
ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்!
---------------------------------------
[ஆஞ்ஞை - ஆக்கினை (நெற்றி) இரண்டு புருவங்களின் மத்தியில் இருக்கும் இரண்டு இதழ் தாமரை போன்ற சக்கரம்.]
💐🙏💐
M k Bharathi said…

நற்றமிழ் கற்று, நயம்பட பேச

*நாட்டம்* கொண்டோர்க்கு

ஊட்டம், ஊக்கம் நல்கவே

உதித்த புதிர்க் குழுவில்

நாள்தோறும் வெடியாட்டம்

விடைக்கண்டால் கொண்டாட்டம்!
Raghavan MK said…


விடை கிடைக்கவில்லையெனில்
திண்டாடட்டம்!!😃

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்