இன்று காலை வெளியான வெடி: முகத்திலிருப்பதுக்கு முன் அங்கே உள்ளிருப்பது போக்குவரத்து சாதனம் (3) அதற்கான விடை: நாவாய் = நா + வாய், வாய் = முகத்திலிருப்பது; நா = வாயிலிருப்பது. நாவாய் = படகு ஏற்கனவே இப்பாடலை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். வெண்ணிக் குயத்தியார் எழுதியது, "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழிலாண்ட உரவோன் மருக ...", புறநானூற்றில் உள்ள பாடல். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.