இன்று காலை வெளியான வெடி:
முகத்திலிருப்பதுக்கு முன் அங்கே உள்ளிருப்பது போக்குவரத்து சாதனம் (3)
அதற்கான விடை: நாவாய் = நா + வாய்,
வாய் = முகத்திலிருப்பது; நா = வாயிலிருப்பது.
நாவாய் = படகு
ஏற்கனவே இப்பாடலை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். வெண்ணிக் குயத்தியார் எழுதியது, "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழிலாண்ட உரவோன் மருக ...", புறநானூற்றில் உள்ள பாடல்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
கரைவருவேன் வேண்டாம் கவலை! - உரைத்தேனென்
பாவாய்! உனக்குப் பயமேன்? தொலைவிலில்லை
நாவாயில் நான்திரும்பும் நாள்.
எல்லா வளமும் இறைவன் திருவருளால்
இல்லம் கொணர்ந்திடுவேன் என்னுயிரே!- செல்லமாய்ப்
பூவாய் மலர்ந்தேநீ புன்னகைப்பாய் தூரமில்லை
நாவாயில் நான்திரும்பும் நாள்.