Skip to main content

விடை 3981

விடை 3952
இன்று காலை வெளியான வெடி:
மற்றவர்களைவிடப்  பணக்காரர்களுக்கு செல்வமளிக்கும் பல்லில் புரண்ட குறை (4)

அதற்கான விடை: பணிதல் = பல் + ணித;
ணித  = புரண்ட "தணி";  தணிவது என்றால் குறைவது: (காய்ச்சல் தணிந்த பின்னர் பள்ளிக்குச் செல்லலாம்.)

 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

 என்ற குறளில் பணிவான குணம் எல்லாருக்கும் நல்லதுதான் என்றாலும் செல்வந்தர்களுக்கு அதுவும் ஒரு செல்வமாகும் என்கிறார் வள்ளுவர்.


தணி = குறை என்பதுடன், இக்குறளைச் சுட்டிக் காட்டி விளக்கமளித்தவர்கள்தான்  இந்தவெடியை முழுதும் உணர்ந்தவர் எனலாம். 

முத்துசுப்ரமணியம்  திருக்குறளைக் குற்ப்பிடாமல் ஒரு குறளுண்டு என்ற சொன்னதற்கு 90 மதிப்பெண்.

அதன் படி 7.22க்கு உஷா அவர்கள் மட்டும்தான் முழுவிடையுணர்ந்தவராகத் தகுதி பெறுகிறார், 100/100. அவருக்குப் பாராட்டுகள்.

அதற்கு முன்பு பதிலளித்த கு. கனகசபாபதி, லட்சுமி மீனாட்சி இருவரும் இக் குறளைப் பிடித்துவிட்டாலும் "தணியை"ப் பிடித்ததாக விளக்கத்தில் காட்டவில்லை. அவர்களுக்கு 80 மதிப்பெண்கள்.
 
"பணிதல் " என்ற விடையளித்த மற்றவர்களுக்கு 70 மதிப்பெண்கள்.

பணிதலே பதிலென் றுரைத்தனர் பாங்காய்
மணிபல சிந்தித்து மாந்தர்  எனினும்
துணிந்து திருக்குறளைத் தொட்டுரைத்தோர் மட்டும்
அணிந்திடலாம் வெற்றிக்கு அழகு


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…

**********************
எல்லார்க்கும் நன்றாம் *பணிதல்* எனக் கூறிய வள்ளுவர், செல்வர்களுக்கு பணிதலே  ஒரு செல்வம் போன்றது என்கிறார். ஆமாங்க நிறையப் படித்தவன் அடக்கமாக இருப்பதும், அதிகாரம் இருப்பவன் அமைதியாக இருப்பதும், பெரும் பணக்காரன் ஆடம்பரம் செய்யாதிருப்பதும் அவர்களுடைய மதிப்பைப் பன்மடங்கு கூட்டுமல்லவா?
**********************
_குறை_

வினைச்சொல் குறைய, குறைந்து,குறைக்க
குறைத்து

1.எண்ணிக்கை, அளவு, தன்மை போன்றவை முன்பிருந்த நிலைக்கும் கீழே வருதல்.
2.(ஒன்றின் வேகம், தீவிரம் முதலியன) *தணிதல்* ; கட்டுப்படுதல்.
******************
_மற்றவர்களைவிடப்  பணக்காரர்களுக்கு செல்வமளிக்கும் பல்லில் புரண்ட குறை (4)_

_குறைதல்_
= *தணிதல்*
(இன்று வெப்பம் சற்று தணிந்தது

‘அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் புயலின் வேகம்
தணிந்தது ')

_குறை_ = *தணி*
_புரண்ட குறை_
= _தணி->ணித_
= *ணித*

_பல்லில் புரண்ட குறை_
= _பல்லின் உள்ளே ணித_
= *பணிதல்*

_மற்றவர்களைவிடப்  பணக்காரர்களுக்கு செல்வமளிக்கும்_
= *பணிதல்*
******************
உஷா said…
இன்ப அதிர்ச்சி. நன்றி
தணி+பல் தெரிந்தும் போட விட்டு விட்டோம்
எங்கள் பிழைதான்
மீனா, கனகசபாபதி

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்