Skip to main content

விடை 3972



இன்று காலை வெளியான வெடி:
முதல்வர்கள் வாரிசுகளால் தாக்கப்பட்ட  பிரதமர்  அடைந்த கர்நாடக கர்நாடக நகரம் (3)
அதற்கான விடை: வாதாபி, சாளுக்கியர்களின் தலைநகரம். இக்காலத்தில்  பாதாமி என்ற பெயரில் கர்நாடகாவில் உள்ளது.

"வாரிசுகளால், தாக்கப்பட்ட,  பிரதமர்" என்ற சொற்களின் "முதல்வர்கள்"  இச்சொல்லைத் தருகிறது. வெடியில் பின்னே வந்த  கர்நாடகா ஒரு மாநிலத்தின் பெயரையும் முன்னது பழைய என்ற பொருளையும் குறிக்கிறது.

இன்று காலையில் சுட்டிக்காட்டிய பின்னும் பிழையில்லாததாக நினைத்து 25 நிமிடங்கள் கழித்துதான் திருத்தினேன்.  இருந்தாலும் பலரும் சரியாகக் விடையளித்துவிட்டீர்கள். பாராட்டுகள்.

குறிப்பு: இன்றைய பிரதமர் தன்னைத்  தாக்குபவர்களின் அடியைத் தாங்கிக் கொள்ள சூரிய நமஸ்காரம் செய்யவிருப்பதாக இரண்டு நாட்கள் முன்பு சொல்லியிருக்கிறார். அதற்கும் இன்றைய புதிருக்கும் தொடர்பில்லை!


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.