Skip to main content

உதிரிவெடி 3976

உதிரிவெடி 3976 (பிப்ரவரி 13, 2020)
வாஞ்சிநாதன்
*********************

பலரும் எழுதுவதில் இப்படி அடிப்படை அறிவில்லாமல் பிழையுடன் எழுதுகிறார்களே என்று நான் நினைப்பதுண்டு. தெரிந்தவர்களிடம் அதைச் சுட்டிக் காட்டியதுமுண்டு. ஆனால்  அதே தவறை நேற்று   புதிரில் செய்திருக்கிறேன் என்பது இரவு வந்த கருத்துரையிலிருந்து தெரிந்து கொண்டேன்.

"கத்தி கேட்பது" என்று  நான் எழுதியிருந்தேன். அதைக், "கரடியாகக் கத்துவதாய்ப்" பொருள் கொண்டால்  விடை வருகிறது.

ஆனால் "கத்திக் கேட்பது" என்றால்தான் அப்பொருள் வரும்.

"கத்தி கேட்பது" என்றால் அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர் உதவியாளரிடம்  சொல்வதாயிருக்கலாம். அல்லது சமையலின் போது கத்திரிக்காயை
 நறுக்குவதற்காகக் கேட்பதாயிருக்கலாம்.
 

இதனால் பலர் விடையை அடைய முடியாததற்கு வருந்துகிறேன்.
பிழையைச் சுட்டிக் காட்டிய டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரனுக்கு நன்றி.

இன்றைய வெடி:

உறவில்  புலவர் இடையிட்டது விருப்பத்திற்கெதிராகச் செயல்படும் போக்கு (6)



Comments

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்