Skip to main content

விடை 3978



இன்று காலை வெளியான வெடி:
இவருக்கு முன் கால் போன திசை சண்டித்தனம் (4)
அதற்கான விடை:   இடக்கு (சண்டித்தனம்) = இ + டக்கு
இ = இவருக்கு முன் (எழுத்து)
டக்கு  = வடக்கு (திசை) என்பதில்   வ (1/4)   போய்விட்டது

இடக்கு செய்யும் காளை மாட்டை வாங்கி அல்லலுற்ற ஒருவரின் சோகக்கதை:


வண்டியில்  பூட்டினால்  வாலை மறைத்துபின்
நொண்டிபோல்  செல்லும் நுகத்தடியில்   முண்டிடும்
சண்டித் தனத்தால்    சறுக்கிடும் முன்காலை
கண்டதுண்டோ  இப்படியோர் காளை


இன்றைய வெடிக்கு விளக்கங்களுடன் அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்




Comments

Raghavan MK said…


*இடக்கு மடக்கான புதிர் இன்று!*

மனம் போன போக்கில், *கால் போன திசையில்* நிறைய பேரை அலைய வைத்து வேடிக்கைப் பார்த்ததில்
*இவருக்கு* (ஆசிரியருக்கு) என்ன ஆனந்தமோ?
*ஒரு திசை* என்று கோடிட்டு காட்டியிருக்கலாம் ...
ம்ம்ம்ம்...😧
**********************
_இவருக்கு முன் கால் போன திசை சண்டித்தனம் (4)_ 

_முன்_ = _முன் எழுத்து_

_இவருக்கு முன்_
= *இ[வருக்கு] = இ*

_கால்_ = _1/4_ = *வ* _( தமிழ் எண்)_

_திசை_ = *வடக்கு*
( _*ஒரு* திசை_ என்று இருந்திருக்கலாம் ! )

_கால் போன திசை_
= *வடக்கு - வ = டக்கு*

_சண்டித்தனம்_
= *இ+டக்கு*
= *இடக்கு*
***********************
தமிழ் *இடக்கு* யின் அர்த்தம்

_இடக்கு_

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

(செய்துகொண்டிருந்த ஒன்றைச் செய்ய மறுக்கும்) முரண்டு; *சண்டித்தனம்.*

‘பள்ளிக்கூடத்துக்குப் போக ஏன் இடக்கு பண்ணுகிறான்?’

‘ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த ஜட்கா வண்டிக் குதிரை திடீரென்று இடக்குசெய்கிறது!
🐎🐎
************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்