இன்று காலை வெளியான வெடி:
ஒளி குறையக் குறைய வைக்கோலிடம் குற்றம் (5)
அதற்கான விடை: களங்கம் = களம் + ங்க
களம் = வைக்கோலிடம், அதாவது வைக்கோலை வைக்கும் இடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை!)
ங்க = மங்க - ம (மங்க = ஒளி குறைய)
"ஒளி குறையக் குறைய வைக்கோலிடம் கலங்க குற்றம்" என்று எழுதினேன். பிறகு "களங்கம்" என்ற விடை இருக்கும்போது "கலங்க" என்பது வேண்டாமென்று நீக்கினேன். எதைப் போட்டால் பொருத்தமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தபோது மணி 6.05 ஆகிவிட்டதல், சுருக்கமாக இருந்துவிடட்டும் என்று விட்டுவிட்டேன். இப்போதுதான் "ஒளி குறையக் குறைய வைக்கோலிடம் ஒளிய குற்றம்" என்று எழுதியிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். இந்த ஞான ஒளி தோன்றுவதற்குள் சூரிய ஒளி ஒளிந்து ராத்திரி விடை போடும் தருணமாகிவிட்டது!
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments