இன்று காலை வெளியான வெடி:
மேற்காகப் பிடுங்கி நட்ட மரம் அந்தியில் வானத்தில் காணப்படும் (5)
அதற்கான விடை: அருந்ததி = அந்தி + த ரு
"தரு" எதிர்ப்புறமாக (மேற்காக) எழுத்துகள் தனித்தனியாக (பிடுங்கி )
"அந்தி"யில் நடப்பட்டுள்ளது.
அருந்ததி நட்சத்திரம் சப்தரிஷி மண்டலத்தில் ஆறாவதாக இருக்கும் வசிஷ்டருக்கு மிகவும் அருகில் லேசாகப் புலப்படும். மாலையும் கழுத்துமாய் அம்மியில் ஏறி நின்று பார்த்தல் தெரியுமென்று உறுதியில்லை.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
புதிர்க் கண்டு உவந்தேனின்று!
வாஞ்சியின் மனவானில்
மலர்கின்ற பலத் தாரகையில்
அழகான அருந்ததிக்கு என்றும்
அழியாத ஓரிடமுண்டு!!
நடக்காதென்பார் நடந்துவிடும்
−கண்ணதாசன்.