Skip to main content

விடை 3965


இன்று காலை வெளியான வெடி:
 
மேற்காகப் பிடுங்கி நட்ட மரம் அந்தியில் வானத்தில்   காணப்படும் (5) 

அதற்கான விடை:  அருந்ததி = அந்தி + த ரு


"தரு" எதிர்ப்புறமாக (மேற்காக)   எழுத்துகள் தனித்தனியாக (பிடுங்கி )
"அந்தி"யில் நடப்பட்டுள்ளது.




அருந்ததி நட்சத்திரம் சப்தரிஷி மண்டலத்தில் ஆறாவதாக இருக்கும் வசிஷ்டருக்கு மிகவும் அருகில் லேசாகப் புலப்படும். மாலையும் கழுத்துமாய் அம்மியில் ஏறி நின்று பார்த்தல் தெரியுமென்று உறுதியில்லை.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.


Comments

M k Bharathi said…
தரை சேர்ந்த தாரகைப்போல்வந்த

புதிர்க் கண்டு உவந்தேனின்று!

வாஞ்சியின் மனவானில்

மலர்கின்ற பலத் தாரகையில்

அழகான அருந்ததிக்கு என்றும்

அழியாத ஓரிடமுண்டு!!
Vanchinathan said…
ஸ்வாஹா தேவி எவ்வளவு முயன்றும் அக்னி தேவனின் மனவானில் அருந்ததி வரமுடியவில்லை. அதனால் அருந்ததிக்கு இடமுண்டு என்பதெல்லாம் நடக்கிற காரியமாகத் தெரியவில்லை.
M k Bharathi said…
நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
−கண்ணதாசன்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.