சில நாட்களுக்கு முன் மனதைக் கலக்கும் நாவல் ஒன்றைப் படித்தேன். நிலக்கரி தோண்டுவதற்காக ஜார்கண்டில் (பீஹாரில்?) ஓரிடத்தில் அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்தும்போது எழும் சிக்கல்கள் இதன் மையக்கரு. பல வருடங்களாக இது போன்ற தீவிரமான எதையும் படிக்காமல் பொழுதுபோக்குக் கதைகளே படித்திருக்கிறேன் என்று குற்ற உணர்வு தோன்றியது. அல்லது இது போன்ற கதைகள் தமிழில் வருவதில்லையா? அதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எவ்வாறு நடக்கிறார்கள், எளிய மக்களின் வாழ்வு எப்படி இதில் திண்டாடுகிறது என்பதெல்லாம் மிகவும் சங்கடப்படுத்துகிறது. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த எரின் ப்ரோக்கொவிச் என்ற படம் பார்த்தால் ஒருவரை ஹீரோவாக்கும் முயற்சி தெரியும். இக்கதையில் ஆசிரியர் அது போல் செய்யாமல் எவ்வாறு எல்லோரது வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறார். இவர் விவரங்களை ஆசிரியராக அதிகம் எழுதாமல், கதைப் பாத்திரங்களின் உரையாடல்களிலேயே வருமாறு ஒரு பாணியைக் கையாண்டிருக்கிறார். இது அந்நூலை இன்னமும் விரிவாக எழுதாமல் விட்டாரோ என்று எண்ணவைத்தது. ஆனால் அப்படி எழுதியிருந்தால் என்ன இது வளவளவென்று எழுதியிருக்க...