Skip to main content

Posts

Showing posts with the label நாரை

விடை 3451

இன்று காலை வெளியான வெடி: இரண்டாக்கி நடுக்குளம் இறங்கி தாமதமாக வா (4) இதற்கான விடை: பிளந்து = பிந்து + ள சத்திமுத்தப் புலவர் பாடலில் பிளந்து என்ற சொல் ஓர் அழகான உவமையை ஒட்டி வருகிறது. தனியே குளிரில் வாடிய புலவர் ஆகாயத்தில் பறந்து செல்லும் நாரையைக் கண்டு தன் மனைவிக்குத் தூது சொல்லும் விதமாக அமைந்த பாடல். நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்  ........ நாரையின்  அலகைப் பனங்கிழங்கைப் பிளந்தது போல் இருக்கும் என்று கவிஞர் கூறுகிறார்.  ஒப்பிட்டிப் பார்க்க வேண்டும் என்று இரண்டின் படங்களையும் வலையில் தேடினேன்: விக்கிபீடியாவில் கிடைத்த நாரை தினத்தந்தியில் கிடைத்த பனங்கிழங்கு இக்காலத்தில் திரைப்படங்களுக்கு "ஸ்ட்ராபெர்ரி கண்ணே" என்று பாட்டெழுதுபவர்கள் ஒரு நல்ல கண் மருத்துவரிடம் சென்றால் நல்லதாய்ப் போகும்.