Skip to main content

விடை 3451

இன்று காலை வெளியான வெடி:
இரண்டாக்கி நடுக்குளம் இறங்கி தாமதமாக வா (4)
இதற்கான விடை: பிளந்து = பிந்து + ள

சத்திமுத்தப் புலவர் பாடலில் பிளந்து என்ற சொல் ஓர் அழகான உவமையை ஒட்டி வருகிறது. தனியே குளிரில் வாடிய புலவர் ஆகாயத்தில் பறந்து செல்லும் நாரையைக் கண்டு தன் மனைவிக்குத் தூது சொல்லும் விதமாக அமைந்த பாடல்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் 
........

நாரையின்  அலகைப் பனங்கிழங்கைப் பிளந்தது போல் இருக்கும் என்று கவிஞர் கூறுகிறார்.  ஒப்பிட்டிப் பார்க்க வேண்டும் என்று இரண்டின் படங்களையும் வலையில் தேடினேன்:

விக்கிபீடியாவில் கிடைத்த நாரை




தினத்தந்தியில் கிடைத்த பனங்கிழங்கு
இக்காலத்தில் திரைப்படங்களுக்கு "ஸ்ட்ராபெர்ரி கண்ணே" என்று பாட்டெழுதுபவர்கள் ஒரு நல்ல கண் மருத்துவரிடம் சென்றால் நல்லதாய்ப் போகும்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (56):

1) 6:02:04 முத்துசுப்ரமண்யம்
2) 6:02:55 எஸ்.பார்த்தசாரதி
3) 6:03:46 அம்பிகா
4) 6:03:52 மீனாக்ஷி
5) 6:05:25 ராஜா ரங்கராஜன்
6) 6:05:58 லக்ஷ்மி ஷங்கர்
7) 6:06:33 ராமராவ்
8) 6:06:40 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:07:27 சாந்தி நாராயணன்
10) 6:07:38 சதீஷ்பாலமுருகன்
11) 6:08:36 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:09:04 விஜி ஶ்ரீனிவாசன்
13) 6:11:34 ஆர்.நாராயணன்
14) 6:12:31 ராதா தேசிகன்
15) 6:13:04 மைத்ரேயி
16) 6:17:27 இரா.செகு
17) 6:21:24 உஷா
18) 6:27:05 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
19) 6:31:37 K.R.Santhanam
20) 6:33:00 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
21) 6:34:09 தி. பொ. இராமநாதன்
22) 6:34:51 மீ கண்ணன்
23) 6:35:24 KB
24) 6:40:37 லதா
25) 6:46:48 மீனாக்ஷி கணபதி
26) 6:48:39 சங்கரசுப்பிரமணியன்
27) 6:54:45 மு க பாரதி
28) 6:56:25 சுந்தர் வேதாந்தம்
29) 7:00:37 ரவி சுந்தரம்
30) 7:00:52 ஶ்ரீவிநா
31) 7:02:42 விஜி துரை
32) 7:06:41 ராஜி ஹரிஹரன்
33) 7:12:45 ஹரி பாலகிருஷ்ணன்
34) 7:26:35 மாதவ்
35) 7:31:30 தேன்மொழி
36) 7:36:06 நாதன் நா தோ
37) 7:46:53 ஆர். பத்மா
38) 7:55:17 கேசவன்
39) 8:04:51 திருக்குமரன் தங்கராஜ்
40) 8:26:54 கோவிந்தராஜன்
41) 8:36:26 மாலதி
42) 9:05:16 மடிப்பாக்கம் தயானந்தன்
43) 9:13:06 கி மூ சுரேஷ்
44) 9:20:18 ரமணி பாலகிருஷ்ணன்
45) 9:27:31 வி ன் கிருஷ்ணன்
46) 9:35:31 Siddhan Subramanian
47) 10:19:45 பினாத்தல் சுரேஷ்
48) 14:08:51 வானதி
49) 14:11:40 மு.க.இராகவன்.
50) 14:21:37 கு. கனகசபாபதி, மும்பை
51) 15:58:03 V.R. Balakrishnan
52) 17:01:33 எஸ் பி சுரேஷ்
53) 17:05:22 பிரசாத் வேணுகோபால்
54) 20:02:11 ஏ.டி.வேதாந்தம்
55) 20:03:11 அனுராதா ஜெயந்த்
56) 20:03:37 பத்மாசனி
**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
************************
நடுக் *குளத்து* நாயகனாய் நானும் இறங்கினேன் வாவியுள்
விடுகதையின் முடிச்சை
அவிழ்த்திட முயன்றேன்
சடுதியில் கிட்டாத
எட்டாத புதிரை துரத்தி பயனிலையென
தும்பிக்கையானின்
துணை நாடி
நம்பிக்கையுடன் அழைத்தேன் கஜமுகனை

" _முந்தி முந்தி_ _விநாயகரே! வந்து வந்தெம்மைக் கண்_ _பாருமே! எப்போதும்_ _உம் துணை வேண்டுமைய்யா! "_

முந்தி விநாயகரே
உதவிக்கரம் நீட்டுவதில்
*பிந்து* வதில்லை நீரென நன்றறிவேன் என உரைத்து
கரையேறி
வாய் *பிளந்து* அண்ணாந்து
பார்க்கையில்
சத்திமுத்தப் புலவர் மனைவிக்கு தூது
விடுத்த
செங்கால் நாராய் தாமதமின்றி
பறக்க கண்டேன்
*பிளந்த* பனங்கிழங்கினை
யொத்த நாரையின்
மூக்கைக் கண்டதும்
விடுகதையும் விடுபட்டதே
என் கதையும்
முடிவுற்றதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸
சத்திமுத்தப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்
_நாராய் நாராய்_ _செங்கால் நாராய்_ _பழம்படு பனையின்_ _கிழங்கு பிளந்தன்ன_ _பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்_
_நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி_ _வடதிசைக்கேகுவீராயின்_
_எம்மூர்ச் சத்திமுத்த_ _வாவியுள் தங்கி_
_நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி_
_பாடு_ _பார்த்திருக்குமென்_ _மனைவியைக் கண்டு_
_"எங்கோன்_ _மாறன்வழுதி கூடலில்_
_ஆடையின்றி வாடையின் மெலிந்து_
_கையது கொண்டு மெய்யது பொத்திக்_
_காலது கொண்டு மேலது தழீஇப்_
_பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்_
_ஏழையாளனைக் கண்டனம் எனுமே"_
என்ற பாடலைப் பாடினார். அச்சமயம் அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான்.
இவர் பின்னர் களத்தூர் குடிதாங்கி முதலியார் என்பவரால் ஆதரிக்கப்பட்டார். இதனை
_" வெறும்புற்கையும்_ _அரிதாங்_
_கிள்ளைச் சோறும்_
_என்வீட்டில் வரும்,_
_எறும்புக்கும்_ _ஆர்பதமில்லை_
_முன்னாள் என்னிருங் கலியாம்,_
_குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச்_
_சென்று கூடிய பின்_ ,
_தெறும்புற் கொல்_ _யானை கவளம்_
_கொள்ளாமற் றெவிட்டியதே."_
என்ற செய்யுளால் அறியலாம்
************************
_இரண்டாக்கி நடுக்குளம் இறங்கி தாமதமாக வா (4)_

_தாமதமாக வா!_
= *பிந்து*
_நடுக்குளம்_
= ~கு~*ள*~ம்~
= *ள*
_இறங்கி_
= *பிந்து* வில் *ள*
_இரண்டாக்கி_
= *பிந்து+ள*
= *பிளந்து*
************************
_*பந்திக்கு முந்து படைக்கு பிந்து*_
இது ஒரு பழமொழி. இதற்கு நாம் அறிந்த அர்த்தம் பந்திக்கு முந்திக் கொண்டு முதலிலேயே சாப்பிட செல்ல வேண்டும். இல்லையெனில் அடுத்த பந்தியில் சாப்பாட்டில் குறைவு ஏற்படலாம். படைக்கு பிந்து. போர் நடக்கும் இடத்தில் இருந்து ஒளிந்துக் கொள்.
உண்மையில் இது பழமொழி அல்ல. ஓர் *விடுகதை* .
பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் அது என்ன?
*விடை "வலது கை"*
பந்தியில் சாப்பிடும் போது வலது கை முந்திக் கொண்டு (முன்னோக்கி) வர வேண்டும். போர் படையில் சண்டை இடும் போது வில்லில் அம்பை வைத்து வலது கை பிந்தி கொண்டு(பின்னோக்கி சென்று) அம்பை எய்த வேண்டும்.
இதைத் தான் நம் முன்னோர்கள் பந்திக்கு முந்தவும் படைக்கு பிந்தவும் வேண்டும் என்றார்கள். 😀
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_நெடும்பகல் நீண்ட கனவு நிஜமாகுமா..._
_ஒரு நிலா ஒரு குளம்_
_ஒரு மழை ஒரு குடை_
_நீ நான் போகும் ஒரு விழா_
_ஒரு மனம் ஒரு சுகம்_
_ஒரு இமை ஒரு கனா_
_நீதான் போதும் ஒரு_ _யுகம்_
💐🙏🏼💐
Muthu said…
<> அருமையான விளக்கம் - பகிர்வுக்கு மிக்க நன்றி!!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்