இன்று காலை வெளியான வெடி:
சிறிய அளவில் பாயும், இடறும் (5)
இதற்கான விடை: தடுக்கும்
ஒருவர் உட்காருமளவுக்குச் சிறிய அளவில் ஓலையால் பின்னப்பட்ட பாய்தான் தடுக்கு.பெரும்பாலும் விருந்தினர் தரைமேல் உட்காரக் கூடாதென்று விரிக்கப்படும். அல்லது சாப்பிடும் போது விரிக்கப்படும்.
தடுக்கில் அமர்ந்திட்லி தட்டில் பலவைத்
தடுக்கி விழுங்கிய அந்நாள்போய் இன்று
தடுக்கிடுங் கால்கள் தளர்ந்திடினுஞ் சாதல்
தடுக்கவெண்ணுந் தன்மை இயல்பு
மனிதர்களுக்கு முதுமையிலும் நீண்டு உயிர் வாழும் எண்ணமிருப்பதைப் பற்றி தத்துவமாக யோசித்து எழுதவில்லை. சும்மா யமக வெண்பா (ஆமாம் இது உரை நடையில்லை!) எழுத வேண்டும் என்று தோன்றியது. அதனால் பல தடுக்குகளை வைத்துப் பின்னினேன்.
சிறிய அளவில் பாயும், இடறும் (5)
இதற்கான விடை: தடுக்கும்
ஒருவர் உட்காருமளவுக்குச் சிறிய அளவில் ஓலையால் பின்னப்பட்ட பாய்தான் தடுக்கு.பெரும்பாலும் விருந்தினர் தரைமேல் உட்காரக் கூடாதென்று விரிக்கப்படும். அல்லது சாப்பிடும் போது விரிக்கப்படும்.
தடுக்கில் அமர்ந்திட்லி தட்டில் பலவைத்
தடுக்கி விழுங்கிய அந்நாள்போய் இன்று
தடுக்கிடுங் கால்கள் தளர்ந்திடினுஞ் சாதல்
தடுக்கவெண்ணுந் தன்மை இயல்பு
மனிதர்களுக்கு முதுமையிலும் நீண்டு உயிர் வாழும் எண்ணமிருப்பதைப் பற்றி தத்துவமாக யோசித்து எழுதவில்லை. சும்மா யமக வெண்பா (ஆமாம் இது உரை நடையில்லை!) எழுத வேண்டும் என்று தோன்றியது. அதனால் பல தடுக்குகளை வைத்துப் பின்னினேன்.
Comments
*************************
_சிறிய அளவில் பாயும், இடறும் (5)_
_சிறிய அளவில் *பாய்*_ = *தடுக்கு*
_சிறிய அளவில் *பாயும்*_ = *தடுக்கும்*
_இடறும்_ = *தடுக்கும்*
++++++++++++++++++++
*_Decoding the புதிர்_ !*
*சிறிய அளவில்* தேடக் கிடைத்த
*_அணு, துரும்பு, நொடி, நெல்_* போன்றவைகளால் *_இம்மி_* யளவும் பயனற்று போனது.
அடுத்து *பாயும்* புலியுடன் போராட்டம்!
*_குதித்து, தாவி,எகிறி, பரவி , தாக்கி,_* என்றெல்லாம் போராடியும் பயனில்லை!
*இடறி* விழுந்ததுதான் கண்ட பலன்! ஆயினும்
மீசையில் மண் ஒட்டததால் மீண்டெழுந்தேன்!
*_தடுமாறி, துன்புற்று,_ _தயங்கி, அலைபாய்ந்து,_* *_தடுக்கும் இடறுகளை_* கடந்து கரைகாணாமல் மனம் நொந்து களைத்து பின் உணவருந்த
தரையில் அமரத் தயாரானவனை
தடுத்து நிறுத்தியது
தாயின் குரல்.
"கீழே உட்காராதே! _*தடுக்கு*_ எடுத்துப் போட்டு உட்கார் "
அமரச்சென்றவனுக்கு
அதிர்ஷ்டம் அடித்தது!
கால் தடுக்காமல் ஓடி, *தடுக்கும்* என்று
பதிவிட்டேன் விடையை!
😀😀😀
_பாயும் = பாய்+உம்_
_தடுக்கும் = தடுக்கு + உம்_
_பாய், தடுக்கு = பெயர்சொற்கள்_
_உம் = இடைச்சொல்_
உம் என்னும் இடைச்சொல் 8 பொருளில் வரும்
_எச்சம் சிறப்பே ஐயம்_ _எதிர்மறை_
_முற்றே எண்ணே_ _தெரிநிலை ஆக்கம்_ -
_என்று அப்பால் எட்டே_ *_உம்_*_மைச்_ _சொல்லே_
(தொல்காப்பியம் இடையியல் 7)
1.எச்சம்
2.சிறப்பு
3.ஐயம்
4.எதிர்மறை
5.முற்று
6.எண்
7.தெரிநிலை
8.ஆக்கம்
இப்புதிரில் இடைச்சொல் எண் எனும் பொருளில் வந்துள்ளது என்று கருதுகிறேன்.(பிழையாயின் திருத்தவும்).
ஏதோ! , கோலத்தில் நுழையாமல் தடுக்கில் நுழைந்தாவது விடையளித்த திருப்தி உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும்!
💐🙏🏼💐
1) 6:02:16 நங்கநல்லூர் சித்தானந்தம்
2) 6:09:40 மீனாக்ஷி
3) 6:10:16 சங்கரசுப்பிரமணியன்
4) 6:11:51 உஷா
5) 6:12:52 கி மூ சுரேஷ்
6) 6:16:47 எஸ்.பார்த்தசாரதி
7) 6:21:56 ரவி சுப்ரமணியன்
8) 6:28:22 பாலு மீ
9) 6:41:22 சுந்தர் வேதாந்தம்
10) 6:41:50 ரவி சுந்தரம்
11) 6:43:32 மீ கண்ணன்
12) 6:44:09 மாலதி
13) 7:00:04 வி.ஜயா
14) 7:16:10 முத்துசுப்ரமண்யம்
15) 7:43:12 ராஜி ஹரிஹரன்
16) 7:58:02 பூமா பார்த்த சாரதி
17) 8:37:36 KB
18) 9:22:39 கு. கனகசபாபதி, மும்பை
19) 9:59:26 தி. பொ. இராமநாதன்
20) 10:24:44 கோவிந்தராஜன்
21) 11:03:28 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
22) 11:08:03 மு.க. இராகவன்.
23) 11:11:47 புவனா சிவராமன்
24) 14:21:55 அம்பிகா
25) 15:00:21 பத்மாசனி
26) 15:02:37 வி. பார்த்தசாரதி
27) 15:03:17 ஏ.டி.வேதாந்தம்
28) 17:38:53 மீனாக்ஷி கணபதி
29) 20:49:57 ஶ்ரீவிநா
**********************
யமகம் என்பது ஒரே எழுத்துகளை பல்வேறு பொருள்பட அமைப்பதாகும். வாஞ்சி அவரது வெண்பா அருமையான எடுத்துக்காட்டு. கவி காளிதாஸர் இவ்வுத்தியை அருமையாக கையாண்டவர்.
தடுக்கல் வெண்பா அருமை