Skip to main content

விடை 3458

இன்று காலை வெளியான வெடி:
வாசம் வீசும் அம்பில் செய்யுளை நீக்கிய அறிவில்லாதவன் குழம்பினான் (5) 
இதற்கான விடை:  மணக்கும்  =  (பா) ணம் + மக்கு

Comments

Raghavan MK said…

A peek into today's riddle!
********************
*_வாசமில்லா மலரிது_* _வசந்தத்தைத் தேடுது வைகையில்லா_ _மதுரையிது_ _மீனாட்சியைத் தேடுது_ _வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது_
🌼🌼🌼🌼🌼🌼🌼
_ஆசைய காத்துல தூதுவிட்டு_
_ஆடிய பூவுல வாடை பட்டு_
*_வாசம் பூவாசம்_* _வாலிப காலத்து நேசம்_
_மாசம் தை மாசம்_
_மல்லிகை பூ மனம் வீசும்__
🌸🌸🌸🌸🌸🌸🌸
_வாசம் வீசும் அம்பில் செய்யுளை நீக்கிய அறிவில்லாதவன் குழம்பினான் (5)_ 

_அம்பில்_ = *பாணம்*
_செய்யுளை_ = *பா*
_அம்பில் செய்யுளை நீக்கிய_ = *பாணம்-பா=ணம்*
_அறிவில்லாதவன்_ = *மக்கு*
_குழம்பினான்_
= *மக்கு+ணம்* when rearranged
= *மணக்கும்*
= _வாசம் வீசும்_

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_மல்லிகை மல்லிகை பந்தலே_
_அடி *மணக்கும்*_ _மல்லிகை பந்தலே_ __என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே_
_கண்கள் மயங்கி__
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

_*அறிவில்லாதவன்* அடுத்தவனை மாற்ற முயற்சிக்கும் கதை_

ராமுவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். ராமு இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை. ”என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,” என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார். பின் திருப்தியாக,’ ‘இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார். மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விஷயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம். பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய ராமுவை போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!. நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்க்க வேண்டும்.
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (40):

1) 6:02:06 சுந்தர் வேதாந்தம்
2) 6:02:31 இரா.செகு
3) 6:06:01 ரவி சுந்தரம்
4) 6:06:27 கேசவன்
5) 6:07:48 கி மூ சுரேஷ்
6) 6:07:55 அம்பிகா
7) 6:08:01 KB
8) 6:11:22 ராமராவ்
9) 6:24:58 ராஜா ரங்கராஜன்
10) 6:26:40 முத்துசுப்ரமண்யம்
11) 6:35:59 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:37:25 மீ பாலு
13) 6:39:02 நாதன் நா தோ
14) 6:39:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:41:50 சதீஷ்பாலமுருகன்
16) 6:42:05 மீனாக்ஷி
17) 6:46:38 ஆர்.நாராயணன்.
18) 6:51:22 மீ கண்ணன்
19) 6:52:11 ராஜி ஹரிஹரன்
20) 6:59:18 லதா
21) 7:05:38 வானதி
22) 7:20:56 Siddhan Subramanian
23) 7:35:21 சுபா ஸ்ரீநிவாசன்
24) 7:51:15 மாலதி
25) 8:06:17 ஹரி பாலகிருஷ்ணன்
26) 8:40:43 Sandhya
27) 9:03:12 பாலா
28) 9:14:29 மு க பாரதி
29) 9:20:26 மடிப்பாக்கம் தயானந்தன்
30) 9:20:28 மாதவ்
31) 9:25:33 தேன்மொழி
32) 9:57:33 ராதா தேசிகன்
33) 10:23:55 ருக்மணி கோபாலன்
34) 12:23:08 மு.க.இராகவன்.
35) 13:18:57 ஆர். பத்மா
36) 14:07:35 மீனாக்ஷி கணபதி
37) 15:45:01 சங்கரசுப்பிரமணியன்
38) 17:52:32 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
39) 17:57:05 கோவிந்தராஜன்
40) 20:13:53 ரங்கராஜன் யமுனாச்சாரி
**********************
Muthu said…
முதலிலேயே, வாசம் வீசும் பார்த்ததுமே "மணக்கும்" தோன்றிற்று. ஆனால் குறிப்புக்குப் பொருத்தம் பிடி படவில்லை. அம்புக்கு நாணும், அறிவில்லாதவனுக்கு முட்டாள், மூடன், மண்டு, மடையன் எல்லாம் வந்தன. கடைசியாக மக்கு வும், பாணமும் நினைவுக்கு வந்து புதிர்க் குறிப்புக்குப் பொருத்தம் பளிச்சிட்டது!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்