இன்று காலை வெளியான வெடி:
ஒரு துளி குற்றமற்ற பாண்டியனுடன் இடைத் தலைவன் எதிர்ப்பு (3)
இதற்கான விடை: திவலை (வழுதி - வழு + லைவ)
ஒரு துளி குற்றமற்ற பாண்டியனுடன் இடைத் தலைவன் எதிர்ப்பு (3)
இதற்கான விடை: திவலை (வழுதி - வழு + லைவ)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1) 6:03:52 திருமூர்த்தி
2) 6:04:52 கேசவன்
3) 6:06:54 அம்பிகா
4) 6:07:16 வி ன் கிருஷ்ணன்
5) 6:07:21 ரவி சுந்தரம்
6) 6:08:19 கோவிந்தராஜன்
7) 6:08:24 இன்னமுதம்
8) 6:08:46 ஆர்.நாராயணன்.
9) 6:09:03 சாந்தி நாராயணன்
10) 6:09:41 சாந்தி நாராயணன்
11) 6:09:42 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:09:56 மைத்ரேயி
13) 6:10:13 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:10:45 சுந்தர் வேதாந்தம்
15) 6:10:48 மீனாக்ஷி
16) 6:12:12 சுபா ஸ்ரீநிவாசன்
17) 6:13:55 எஸ்.பார்த்தசாரதி
18) 6:21:23 நாதன் நா தோ
19) 6:21:33 ராஜி ஹரிஹரன்
20) 6:22:08 மு.க.இராகவன்.
21) 6:25:30 மீனாக்ஷி கணபதி
22) 6:33:50 உஷா
23) 6:36:33 ராமராவ்
24) 6:41:57 தி. பொ. இழாமநாதன்
25) 6:45:44 Siddhan Subramanian
26) 6:45:47 KB
27) 7:10:15 கு. கனகசபாபதி, மும்பை
28) 7:15:56 லட்சுமி மீனாட்சி
29) 7:36:19 மீ.பாலு
30) 7:46:15 கலாராணி
31) 7:57:31 மாலதி
32) 8:06:31 பிரசாத் வேணுகோபால்
33) 8:13:53 சங்கரசுப்பிரமணியன்
34) 8:20:50 எஸ் பி சுரேஷ்
35) 8:44:55 ருக்மணி கோபாலன்
36) 8:51:42 ஆர். பத்மா
37) 8:55:15 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
38) 9:10:08 மு க பாரதி
39) 9:27:23 தேன்மொழி
40) 9:48:19 கி மூ சுரேஷ்
41) 9:55:33 மாதவ்
42) 10:11:16 சதீஷ்பாலமுருகன்
43) 14:56:50 லதா
44) 15:03:09 வித்யா ஹரி
45) 15:56:36 பானுமதி
46) 18:21:32 செந்தில் சௌரிராஜன்
47) 18:36:05 பாலா
48) 19:33:07 திருக்குமரன் தங்கராஜ்
49) 19:34:16 ராஜா ரங்கராஜன்
50) 19:43:04 ரவி சுப்ரமணியன்
**********************
*************************
_சில்லென ஒரு மழைத் *துளி*_
_என்னை நனைக்குதே பெண்ணே!_
_சிறகுகள் யார் கொடுத்தது_
_நெஞ்சம் பறக்குதே முன்னே!_
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
_சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்_
_நீதி *வழுவா* நெறிமுறையின் - மேதினியில்_
_இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்_
_பட்டாங்கில் உள்ள படி_ .
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
_ஒரு துளி குற்றமற்ற பாண்டியனுடன் இடைத் தலைவன் எதிர்ப்பு (3)_
_குற்றமற்ற_ = *வழு* _அற்ற_
( *வழு* :-
குறிப்பிட்ட ஒழுங்கு, முறை போன்றவற்றிலிருந்து விலகுவதால் ஏற்படும் தவறு)
_பாண்டியனுடன்_ = *வழுதி*_யுடன்_
( *வழுதி* என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.)
_குற்றமற்ற பாண்டியனுடன்_ = *வழுதி-வழு= தி*
_இடைத் தலைவன்_ = *லைவ*
_இடைத் தலைவன் எதிர்ப்பு_
= *வலை*
_ஒரு துளி_
= *தி+வலை*
= *திவலை*
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
*சங்க இலக்கியம்*
காதல்மொழி நானூறு அகநானூற்றுப் பாடல்.
***🌸***
_இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து_
_வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி_
_உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,_
_வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்_
_பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,_
_தனியன் வருதல் அவனும் அஞ்சான்;_
_பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,_
_எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;_
_யாங்குச்_ _செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்_
_துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்_
_தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,_
_எறி திரைத் *திவலை* தூஉம் சிறு கோட்டுப்_
_பெருங் குளம் காவலன் போல,_
_அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?_
பொருள்:-
"வேட்டையில் தோல்வியறியாத
வாள்போல் வரிகள் கொண்ட புலியும் நடுங்குமாறு
சிங்கமொன்று யானையின் முகத்தைத் தாக்கி தந்தத்தை உடைக்கும்.
பெரிய மலையோரத்தில் குளிர்ந்த மலர்சூழ்ந்த அவ்விடத்தில்
ஒற்றை வேலை ஏந்தித் தனியே வரும் அவனும் அஞ்சான்!
காதல்நோயால் நான் வாட கண்ணீர் பெருகுகிறது!
அவனைக் காணாது இருத்தலைத் தாங்கமுடியவில்லை.
என்ன செய்வேனடி தோழி!
இண்டஞ்செடிப் பூவின் இதழ்களை நுட்பமாய் அவிழ்த்து
கீழே உதிர்க்கும் குளிர்காற்று வீசுகிறது.
பெருமழை பொழியும் இரவு
சிற்றலைகள் மோதும் பெருங்குளத்துச் சிறுகரைக் காவலன்போல்
தாயும் தூங்காது கடுங்காவல் காக்கிறாள்!"
இந்தப்பாடலில் காதலனின் வீரத்தைப் போற்றும் காதலி மறைமுகமாக தன் இயலாமையை வெளிக்காட்டுகிறாள். இது ஒருவகையில் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு பொருமலாகவே பதிவாகிறது. பெருங்குளத்தின் சிறுகரை என்றது அவள் காதலை அணைபோட அந்தச் சிறுகரையாலோ, காவலாலோ முடியாது என்பதைக் குறிக்கிறது. அணை கட்டும்போதுதான் அழுத்தம்கூடுகிறது. காவலில் இருக்கும்போதுதான் காதலின் தீவிரமும் அதிகரிக்கிறது!
💐🙏🏼💐