Skip to main content

விடை 3461

இன்று காலை வெளியான வெடி:
குட்டை நீர்நிலையில் காற்றில்லாமல் வள்ளி புகுந்தாள் (4)
இதற்கான விடை: குள்ளம் = குளம் + வள்ளி - வளி

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (60):

1) 6:01:25 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2) 6:01:41 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:43 ராமராவ்
4) 6:01:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5) 6:02:20 இரா.செகு
6) 6:02:44 திருமூர்த்தி
7) 6:02:52 முத்துசுப்ரமண்யம்
8) 6:04:19 மீனாக்ஷி கணபதி
9) 6:06:10 மீனாக்ஷி
10) 6:06:13 KB
11) 6:09:02 அம்பிகா
12) 6:09:53 மு.க.இராகவன்.
13) 6:09:57 மீ கண்ணன்
14) 6:10:14 லட்சுமி சங்கர்
15) 6:10:22 ஆர். பத்மா
16) 6:12:25 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:13:46 கு. கனகசபாபதி, மும்பை
18) 6:17:20 கேசவன்
19) 6:18:58 பிரசாத் வேணுகோபால்
20) 6:20:49 வானதி
21) 6:24:47 சதீஷ்பாலமுருகன்
22) 6:27:56 மும்பை ஹரிஹரன்
23) 6:30:08 உஷா
24) 6:30:42 ரமணி பாலகிருஷ்ணன்
25) 6:32:51 சுந்தர் வேதாந்தம்
26) 6:33:19 வி ன் கிருஷ்ணன்
27) 6:34:06 லதா
28) 6:38:57 சாந்திநாராயணன்
29) 6:42:05 K.R.Santhanam
30) 6:42:20 Siddhan Subramanian
31) 6:52:10 தி. பொ. இராமநாதன்
32) 6:55:44 ரவி சுந்தரம்
33) 6:57:07 நாதன் நா தோ
34) 6:57:11 எஸ் பி சுரேஷ்
35) 7:01:33 ராதா தேசிகன்
36) 7:08:19 மீ பாலு
37) 7:11:13 ஹரி பாலகிருஷ்ணன்
38) 7:14:39 ராஜா ரங்கராஜன்
39) 7:17:13 சுபா ஸ்ரீநிவாசன்
40) 7:28:03 புவனா சிவராமன்
41) 7:28:23 மு க பாரதி
42) 7:29:21 சங்கரசுப்பிரமணியன்
43) 7:29:57 மடிப்பாக்கம் தயானந்தன்
44) 7:35:19 ரங்கராஜன் யமுனாச்சாரி
45) 7:55:02 திருக்குமரன் தங்கராஜ்
46) 8:12:33 பாலா
47) 8:13:55 பினாத்தல் சுரேஷ்
48) 8:46:14 பானுமதி
49) 8:48:01 மாதவ்
50) 8:58:14 ஆர்.நாராயணன்.
51) 9:37:01 விஜி துரை
52) 10:52:47 வைத்தியநாதன்
53) 11:29:27 கி மூ சுரேஷ்
54) 11:45:07 கோவிந்தராஜன்
55) 12:44:40 ஸ்ரீஜா
56) 13:15:47 தேன்மொழி
57) 13:40:39 ராஜி ஹரிஹரன்
58) 16:03:41 விஜி ஶ்ரீனிவாசன்
59) 18:45:46 செந்தில் சௌரிராஜன்
60) 19:25:15 மாலதி
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
ஒர் விடுகதை!
காலையிலும் மாலையிலும் நெட்டை,
மதியம் *குட்டை_*,
நான் யார்?
(விடை........ _நிழல்_ )😀

ஓர் பழமொழி !
மொட்டைத்தாதன் *குட்டையில்* விழுந்தால் எடுப்பார் இல்லை, பிடிப்பார் இல்லை

ஓர் குழந்தைப் பாட்டு !
( _For your kids_ )
_*குட்டை குட்டை* கத்திரிக்காய்_
_குண்டு குண்டாய் சுண்டைக்காய்_
_நெட்டை நெட்டை முருங்கைக்காய்_
_நீண்டு தொங்கும் புடலங்காய்_
_சட்டி பானை போலவே தடித்திருக்கும் பரங்கிக்காய்_
_பட்டை போட்ட வெண்டைக்காய்_
_பச்சை நிற பாவற்காய்_ _சொட்டையில்லா சுரைக்காய்_
_சொக்கும் நல்ல தக்காளி_
_கொடியில் தொங்கும் அவரைக்காய்_ _கொவ்வை நிற மிளகாய்_
_வாட்ட சாட்ட வாழைக்காய்_
_வந்துபார் என் தோட்டதில்!_
******************* *வளி* என்றால் காற்று. வளிமம் என்றால் காற்று போன்ற வடிவம் கொண்ட பொருள். சூறாவளி என்றால் புயல்காற்று அல்லது சுழல்காற்று (இதில் *_வளி_* என்றால் காற்று). வளிமண்டலம் என்றால் பூமியைச் சூழ்ந்து உள்ள காற்று மண்டலம். பொதுவாக கடல் மட்டத்தில் உள்ள நில வெப்ப, அழுத்த நிலைகளில் ஆக்ஸிஜன் என்னும் உயிர்வளி ஒரு வளிமம்.
***********************
_குட்டை நீர்நிலையில் காற்றில்லாமல் வள்ளி புகுந்தாள் (4)_ 

_நீர்நிலையில்_
= *குளம்*

_காற்றில்லாமல் வள்ளி_
= *வள்ளி-வளி* = *ள்*
_புகுந்தாள்_
= *ள்---->குளம்*
= *குள்ளம்*
= _குட்டை_
***********************
ஓர் திரைப்பாடல்
*_வள்ளி வள்ளி_* என வந்தான் வடிவேலன்தான்..... புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான் சொல்லித்தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான் ..
🌺🌺🌺🌺🌺
*_நெப்போலியன் சிண்ட்ரோம்_*
உடலின் குறைபாடுகளை மிகப்பெரிய சிக்கலாக கருதுகிற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால்,எல்லாம் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் என்று உணரவேண்டியது மட்டும் தான் முக்கியம். தான் *குள்ளம்* என்று எண்ணிக்கொண்டு இருப்பதை _நெப்போலியன் சிண்ட்ரோம்_ என்பார்கள் . நெப்போலியன்  ஐந்தடி ஆறங்குலம். அது அன்றைய பிரான்ஸ் நாட்டில் சராசரி உயரம் தான். பாவம் மனுஷனுக்கு காவலாக நின்ற ஆட்கள் செம உயரம் ; அதனால் தான் *குள்ளம்* என்று நெப்போலியன் குமைந்தார். தன்னுடைய மனைவியின் வயதை உரக்க சொல்ல சொல்வார் அவர். அப்படியாவது தான் பெரியவன் என்று ஊர் எண்ணாதா என்று ஏக்க பெருமூச்சு விட்டார் அவர். எக்கச்சக்க பேருக்கு இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் தான்
***********************
🙏🏼💐🙏🏼
Muthu said…
அக்பர் சக்ரவர்த்தியும் குள்ளம் என்று படித்திருக்கிறேன். தான் குள்ளம் என்ற “காம்ப்லெக்ஸ்” இவர்களை வெற்றியாளர்களாக்கியது போலும்1
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே என்பது வழக்கில் உள்ள பழமொழி . இது குள்ள மனிதனையா குறிக்கிறது?
Raghavan MK said…
“கள்ளன் ,குள்ளன்.”

கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பாதே! இது பழழொழி.
இதன் உண்மை பொருள்.

கள்ளன் என்பது, கண்ணபிரானையும். குள்ளன் என்பது, கண்ணனின் வாமன அவதாரத்தையும் குறிக்கும்.

கிருஷ்ண அவதாரம் நம்பிய யாரையும் கைவிடாமல் காப்பாற்றியது.
வாமன அவதாரம் அப்படி அல்ல… மகாபலி, உனது காலடியால் மூன்றடி அளந்து எடுத்துக்கொள் என்று சொன்னபோது, மகாபலிக்கு தன் விஸ்வரூபத்தை காட்டாமல் ஏமாற்றியது. முதலில் விஸ்வரூபத்தை காட்டி இருந்தால் மகாபலி சக்ரவர்த்தி மூன்று அடி கொடுத்திருக்க மாட்டார். இறைவனும், அவர் கர்வத்தை அடக்கி இருக்கமாட்டார்.

விஸ்வரூபத்தை காட்டாமல் “குள்ளன்” உருவத்தில் ஏமாற்றியதால் தான் அந்த பழமொழி வந்தது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்