இன்று காலை வெளியான விடை:
அளவின்றிப் படிக்க பிடிவாதம் பிடித்தும் அளவில் சிறியது (5)
(முதலில் அளவின்றிப் படிக்க பிடிவாதம் பிடிக்கும் எளிமை என்று இருந்ததை மாற்றினேன்).
இதற்கான விடை: அடக்கம்
(கைக்கு அடக்கமான குறிப்புப் புத்தகத்தில் எல்லோருடைய முகவரிகளையும் அவர் எழுதி வைத்திருந்தார்).
அளவின்றிப் படிக்க பிடிவாதம் பிடித்தும் அளவில் சிறியது (5)
(முதலில் அளவின்றிப் படிக்க பிடிவாதம் பிடிக்கும் எளிமை என்று இருந்ததை மாற்றினேன்).
இதற்கான விடை: அடக்கம்
(கைக்கு அடக்கமான குறிப்புப் புத்தகத்தில் எல்லோருடைய முகவரிகளையும் அவர் எழுதி வைத்திருந்தார்).
Comments
A peek into today's riddle!
**********************
_பழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே_
_பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ உணர்ந்து_
_பழகத் தெரிய வேணும்_
_*பிடிவாதமும்* எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது_
_பேதமில்லா இதயத்தோடு_
_பெருமையோடு பொறுமையாக_
_பழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே_
🌺🌺🌺🌺🌺🌺🌺
_அழ வைப்பது நீதான்_ _என_
_தெரிந்தும்_ ..,
_*அடம்* பிடிக்கிறது என்_ _கண்கள்..,_
_உன்னையே காண வேண்டும் என்று..,_
எழுதியவர் : M SAKTHI
🌺🌺🌺🌺🌺🌺
_அளவின்றிப் படிக்க பிடிவாதம் பிடித்தும் அளவில் சிறியது (5)_
_அளவின்றிப் படிக்க_
= *படிக்க- படி*
= *க்க*
_(படி என்பது இங்கு_
_முகத்தலளவை)_
_பிடிவாதம்_ = *அடம்*
_பிடிவாதம் பிடித்தும்_
= *அடம்+க்க*
= *அடக்கம்*
= _அளவில் சிறியது_
_(கைக்கு அடக்கமாயுள்ளது)_
★***★***★***★***★
*குறள் 121:*
_*அடக்கம்* அமரருள் உய்க்கும் அடங்காமை_
_ஆரிருள் உய்த்து விடும்_ .
*அடக்கம்* ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; *அடக்கம்* இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
🌺🌺💐🌺🌺🌺🌺🌺
*_ஒளவையார் அருளிச்செய்த மூதுரை_*
_*அடக்கம்* உடையார் அறிவிலர்_ _என்றெண்ணிக்_
_கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்_ _தலையில்_
_ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்_
_வாடி இருக்குமாம் கொக்கு._
*விளக்கம்*
நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் *அடக்கமும்* . அதைக் கண்டு அவர்களை அலட்சியம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது 🙏🏼
************************
நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையைப் பார்க்க வேண்டும் என்று *பிடிவாதம்* பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று *பிடிவாதம்* பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது!
உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.
*எடை 0 என்று!!* 😀😀
சரியான விடை அளித்தவர்கள் (52):
1) 6:01:20 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:53 திருமூர்த்தி
3) 6:03:37 சுந்தர் வேதாந்தம்
4) 6:03:38 ராஜா ரங்கராஜன்
5) 6:04:10 ரவி சுந்தரம்
6) 6:05:50 ஆர் .பத்மா
7) 6:07:08 கி மூ சுரேஷ்
8) 6:07:19 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9) 6:08:17 பிரசாத் வேணுகோபால்
10) 6:08:58 கோவிந்தராஜன்
11) 6:13:12 KB
12) 6:14:24 வி ன் கிருஷ்ணன்
13) 6:15:50 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:20:19 Sandhya
15) 6:22:16 சங்கரசுப்பிரமணியன்
16) 6:23:21 ராமராவ்
17) 6:29:58 உஷா
18) 6:36:32 Siddhan Subramanian
19) 6:36:37 எஸ் பி சுரேஷ்
20) 6:41:10 கேசவன்
21) 7:05:32 ஆர்.நாராயணன்.
22) 7:11:09 கு. கனகசபாபதி, மும்பை
23) 7:38:46 ஹரி பாலகிருஷ்ணன்
24) 7:42:54 மு க பாரதி
25) 8:05:27 புவனா சிவராமன்
26) 8:05:54 சுபா ஸ்ரீநிவாசன்
27) 8:11:53 பினாத்தல் சுரேஷ்
28) 8:18:40 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
29) 8:29:24 அம்பிகா
30) 8:37:55 ருக்மணி கோபாலன்
31) 8:45:45 லட்சுமி சங்கர்
32) 9:05:39 மைத்ரேயி
33) 9:45:06 லதா
34) 10:03:46 வித்யா ஹரி
35) 10:32:40 ரவி சுப்ரமணியன்
36) 10:51:12 வானதி
37) 11:02:50 சதீஷ்பாலமுருகன்
38) 11:03:36 பானுமதி
39) 11:56:08 ராஜி ஹரிஹரன்
40) 14:19:03 மீ கண்ணன்
41) 14:25:21 மாலதி
42) 14:50:25 மடிப்பாக்கம் தயானந்தன்
43) 15:01:12 மு.க.இராகவன்.
44) 15:01:12 மீனாக்ஷி கணபதி
45) 15:40:08 ஸௌதாமினி
46) 16:40:00 ரங்கராஜன் யமுனாச்சாரி
47) 16:44:39 மீனாக்ஷி
48) 18:48:45 நாதன் நா தோ
49) 19:15:27 முத்துசுப்ரமண்யம்
50) 19:15:29 சாந்தி நாராயணன்
51) 19:16:33 மீ.பாலு
52) 20:03:55 R.kousik
**********************
Please note.
அளவில் சிறியது
எளிமை
என மாறியுள்ளது
"கற்றதுகைம் மண்ணளவு கல்லாததுலகளவென்
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்தயம் கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன்கையால் எண் சாண்"
எத்துணைதான் கற்றாலும் (அளவின்றிப் படித்தாலும்) அது (மேலும் கற்க வேண்டியவற்றோடு நோக்குங்கால்) கைக்குள் "அடக்க"மாகிவிடும் அளவேயாம்.