Skip to main content

விடை 3470

இன்று காலை வெளியான வெடி:
காட்டில் மாடோட்டிய ஆண்டி பூமேயும் ஜாதி (5)
அதற்கான விடை: வண்டினம்  = வனம் + (ஆ) ண்டி

ஆண்கள் எழுதும் கவிதைகளில் காதல் பற்றி என்று சொன்னாலும் அதில் பெண்கள் பற்றிய வர்ணனைதான் அதிகமாக  இருக்கும் என்பது தாமரை எழுதிய சில பாடல்கள் கேட்ட பிறகுதான் எனக்குப் புரிந்தது.  பெரிதாக சிலாகிக்கப்படும் கண்ணதாசனை எடுத்துக் கொள்ளுங்கள். பல தத்துவப் பாடல்களில் நல்ல கருத்துகளை அவர் அழகாகக் கூறியிருக்கிறார். ஆனால் காதலி  என்றால்  கொடியிடையே, தேனிதழே என்று ஒரு வழக்கமாய்  பதிந்த சுவட்டிலேயே சென்றிருப்பார். இதுபோல் புளித்துப்போன உவமைகள் எல்லோருக்கும் அதிகம் கேட்டுப் பதிந்ததுதான் நான் புதிராக அமைக்கிறேன். அதனால்தான் முடிவிலா/முடிவில் என்ற அதிகம் புழங்காத, ஆனால் சரியான  பயன்பாட்டைப் பற்றி இவ்வளவு விவாதம் வருகிறது.

இன்று இதுபோல் "வண்டினம்" என்ற வழக்கமான பயன்பாட்டைப் பற்றியும் அதோடு எதுகை மோனையாக வரும் ஃபார்முலா உவமைகளையும் வைத்து ஒரு வெண்பா:

கெண்டைபோல் கண்ணும் கிளியதன் பேச்சழகும்
வண்டினம் மொய்க்கும் வனப்புடைக் கூந்தலுங் 
கொண்டவள் என்று கவிதையில் கூறுவர்
கண்டிடார் காதல் மனம்.

எனக்கு புதிரமைக்க இது போல் அரைத்தமாவு உவமைகள் மாட்டும். அந்த அறிவைச் சோதிக்கும் வண்ணம் அவ்வப்போது வெடியை வீசிவருவேன்!

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (63):

1) 6:10:12 எஸ்.பார்த்தசாரதி
2) 6:10:35 ரவி சுப்ரமணியன்
3) 6:11:20 அம்பிகா
4) 6:11:33 ரவி சுந்தரம்
5) 6:11:38 திருமூர்த்தி
6) 6:11:48 ராமராவ்
7) 6:12:21 மைத்ரேயி
8) 6:12:24 முத்துசுப்ரமண்யம்
9) 6:12:32 சுபா ஸ்ரீநிவாசன்
10) 6:13:08 லட்சுமி சங்கர்
11) 6:13:47 சாந்தி நாராயணன்
12) 6:14:03 ராதா தேசிகன்
13) 6:14:15 சங்கரசுப்பிரமணியன்
14) 6:14:19 சாந்தி நாராயணன்
15) 6:14:31 சதீஷ்பாலமுருகன்
16) 6:15:51 K.R.Santhanam
17) 6:16:02 சுந்தர் வேதாந்தம்
18) 6:16:10 ரங்கராஜன் யமுனாச்சாரி
19) 6:16:13 மீ கண்ணன்
20) 6:16:16 ராஜி ஹரிஹரன்
21) 6:18:28 உஷா
22) 6:20:24 Sandhya
23) 6:25:17 மீனாக்ஷி
24) 6:30:52 கி மூ சுரேஷ்
25) 6:32:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
26) 6:34:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
27) 6:35:18 மு க பாரதி
28) 6:36:18 ஸௌதாமினி
29) 6:38:29 ஆர். பத்மா
30) 6:42:11 மீனாக்ஷி கணபதி
31) 6:44:22 கேசவன்
32) 6:45:11 Siddhan Subramanian
33) 6:47:33 ஆர்.நாராயணன்.
34) 6:47:46 பூமா பார்த்த சாரதி
35) 6:51:54 லதா
36) 6:54:00 மாதவ்
37) 6:57:42 பானுமதி
38) 6:57:46 நாதன் நா தோ
39) 6:59:47 கு. கனகசபாபதி, மும்பை
40) 6:59:50 ரமணி பாலகிருஷ்ணன்
41) 7:04:03 ராஜா ரங்கராஜன்
42) 7:22:04 எஸ் பி சுரேஷ்
43) 7:23:37 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
44) 7:28:29 ருக்மணி கோபாலன்
45) 7:33:31 KB
46) 8:11:45 வி ன் கிருஷ்ணன்
47) 8:17:20 பத்மாசனி
48) 8:17:47 ஏ.டி.வேதாந்தம்
49) 8:27:39 இரா.செகு
50) 8:44:24 லக்ஷ்மி மணியன்
51) 8:54:47 பாலா
52) 8:59:13 வானதி
53) 9:00:40 பா நடராஜன்
54) 9:06:49 பினாத்தல் சுரேஷ்
55) 9:16:41 பா நிரஞ்சன்
56) 9:21:40 மு.க.இராகவன்.
57) 10:06:25 சந்திரசேகரன்
58) 11:50:10 மடிப்பாக்கம் தயானந்தன்
59) 11:58:38 கோவிந்தராஜன்
60) 13:41:39 மாலதி
61) 14:37:22 தேன்மொழி
62) 18:10:48 ஹரி பாலகிருஷ்ணன்
63) 19:36:31 மாயா
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_பனி விழும் மலர் *வனம்*_
_உன் பார்வை ஒரு வரம்_

_இனிவரும் முனிவரும்_
_தடுமாறும் கனிமரம்_

_சேலை மூடும் இளஞ்சோலை_ , _மாலை சூடும் மலர்மாலை_

_பனி விழும் மலர் *வனம்*_
_உன் பார்வை ஒரு வரம்_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_காட்டில் மாடோட்டிய ஆண்டி பூமேயும் ஜாதி (5)_
_காடு_ = *வனம்*

_மாடோட்டிய ஆண்டி_
= _ஆண்டி -ஆ_ = *ண்டி*

_*காட்டில்* மாடோட்டிய ஆண்டி_
= *வனம்* _உள்ளே_ *ண்டி*
= *வண்டினம்*

_பூமேயும் ஜாதி_
= *வண்டினம்*
🌹🐝🌹🐝🌹🐝🌹🐝

*_வண்டினம் முரலும் சோலை,_*

திருமாலவனை வணங்கும் நான் மற்ற தேவரை வணங்கமாட்டேன் என்ற கற்புநெறியோடே இருப்பது பக்தர்களின் இயல்பென்று பேசும் வைணவம். _அரங்கனை பாடிய நான் குரங்கனைப் பாட மாட்டேன் என்று அரங்கநாதனைத் தவிர்த்து திருமலையானையும் பாடாத பெரும் கற்புடன் இருந்தவர் *தொண்டரடிப்பொடி ஆழ்வார்.*_ விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் கொண்ட இந்த ஆழ்வார் திருவரங்க நகரப்பனுக்குத் திருமாலை தொடுத்துத் தரும் தொண்டினைச் செய்து வாழ்ந்து வந்தார்.

அவர் அருளிச்செய்த பாசுரத்தை நம் உதிரிவெடி குழுவினருக்காக இங்கு பதிவிடுகிறேன்.
அரங்கனினன்
அருள் கிட்டட்டும்
அனைவருக்கும்!

_*வண்டினம்* முரலும் சோலை,_
_மயிலினம் ஆலும் சோலை,_
_கொண்டல் மீது அணவும் சோலை,_
_குயிலினம் கூவும் சோலை,_
_அண்டர் கோன் அமரும் சோலை_
_அணி திருவரங்கம் என்னா_
_மிண்டர் பாய்ந்து_ _உண்ணும் சோற்றை_
_விலக்கி நாய்க்கு_ _இடுமின் நீரே_

" *வண்டினங்கள்* இசை பாடும் சோலை. மயிலினங்கள் நடனமாடும் சோலை. மேகங்கள் தவழ்ந்து வரும் சோலை. குயிலினங்கள் கூவும் சோலை.
தேவர்களின் தலைவனான அரங்கன் அமரும் சோலை. அழகிய சோலையாகிய அந்தத் திருவரங்கம் என்னும் பெரியவர்கள் மிக விரும்பி உண்ணும் உணவை இந்த சிறிய நாயேனுக்கும் நீங்கள் இடவேண்டும்."

அவருடைய பாசுரங்களில் சிலவற்றை பங்குனி உத்திரத் திருநாளில் திருமதி. எம்.எஸ். அவர்கள் தம் இனிய குரலில் பாடியுள்ளார்

பங்குனி உத்திரத் திருநாள் திருவரங்கத்தில் ஒரு மாபெரும் திருநாளாகும். இந்தத் திருநாள் தான் அரங்கநாதனும் அரங்கநாயகியும் இணைந்து காட்சி தரும் ஒரே திருநாளாகும். வருடத்தில் வேறு எந்த நாளிலும் கிட்டாத திருக்காட்சி அது. திருமகளுடன் இணைந்த மாலவனே பரம்பொருள் என்று கூறும் வைணவத்தின் அணிவிளக்காம் இராமானுஜர் இந்தத் திருநாளில் தான் திவ்ய தம்பதிகளின் முன்னர் சரணாகதி செய்து மூன்று கத்யங்களைப் பாடி அருளினார்.

(இப்பாசுரத்தை தோடி ராகத்தில் MS அவர்களின் குரலில்கேட்க விரும்பும் அன்பர்கள் கீழுள்ள
இனைப்பை சொடுக்கவும்! )

https://youtu.be/pY9NFFV2T8E

அரங்கனின்
அருள் கிட்டட்டும்
அனைவருக்கும்!
💐🙏🏼💐

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்