Skip to main content

விடை 3463

இன்று காலை வெளியான வெடி:
தண்ணீரை வெளிவரச் செய் அல்லது உறிஞ்சிக் கொள்  (2)
இதற்கான விடை: ஊறு

  காவிரியில் வெள்ளம் வந்ததும் காய்ந்து போயிருந்த கொல்லைப் பக்கத்துக் கிணற்றில் தண்ணீர் ஊறத் தொடங்கியது.

சுண்டலுக்குக்காக இரவில் தண்ணீர் ஊற்றி வைத்த கொண்டைக் கடலை
காலையில் ஊறிப் பெருத்திருந்தது.


Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
உலகம் காய்ந்துவிட்டதே!
எல்லோரும் மழைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வரட்டும்!
*தண்ணீர்* இல்லாமல்
கிணற்றுத் தவளைகள்கூட
கதறுவதில்லை!
மனிதர்கள் மட்டும்
ஏன்?
-பாலமுருகன்
மலேசியா
********************
*தண்ணீர்* கூட
அரசியலாகி
விட்டதேயென
ஆண்டவன்
அழுத கண்ணீர்-
மழையாக...!

அரசியல் கழிவு
கலக்காத வரை
தூய்மையாக இருந்தது
ஆறு...!
வீ.விஷ்ணுகுமார்
*************
மானிடமே!
பாதையின் தூரத்தால்
பாதம் சலித்தாலும்
மனம் சலித்திடாதே,

மானிடமே!
உன் உழைப்பை *உறிஞ்சும்*
ஒவ்வொரு நொடியும்
உன் வெற்றியை உமிழும்
வேளைக்கான படியாகுமே!
மேடை உயரவே,
படிகளும் கூடுமே!


*************
_தண்ணீரை வெளிவரச் செய் அல்லது உறிஞ்சிக் கொள் (2)_

_தண்ணீரை வெளிவரச் செய்_
= *ஊறு*

ஊறு1
வினைச்சொல்ஊற, ஊறி
1
(நீர், எச்சில் முதலியன) வெளிவருதல்; சுரத்தல்.

‘கிணற்றில் நீர் ஊறட்டும், பிறகு தண்ணீர் இறைக்கலாம்’
‘மசாலாவின் வாசனையால் வாயில் நீர் ஊறுகிறது’


_அல்லது உறிஞ்சிக் கொள்_
= *ஊறு*


காகிதம், துணி முதலியவற்றில் (நீர், மை போன்றவை) பரவுதல்.

‘இந்தக் காகிதத்தில் மை ஊறுகிறது

*****************
தேநீர் அருந்தையில்
உதட்டின் மேலிருக்கும் ஒரு சொட்டு
உன்னை நினைக்க வைக்கும்
பனியை *உறிஞ்சும்* சூரியனாய்!
************
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! *ஊறு சுவையே* ! கண்ணம்மா!

பாரதியார்
💐🙏🏼💐
Vanchinathan said…
சரியான விடையளித்தவர்கள் 9 பேர்:


1) 6:41:17 கி மு சுரேஷ்
2) 7:24:59 ரவி சுந்தரம்
3) 10:56:22 ராஜி ஹரிஹரன்
4) 17:21:59 மாயா
5) 18:22:34 பாலா
6) 18:26:53 அம்பிகா
7) 19:30: 39 கோவிந்தராஜன்
8) 20:25:19 நாதன் நா.தோ.
9) 20:34: 06 மு.க.ராகவன்


Muthu said…
ஊறு என் மனத்தில் ஊறவே இல்லை; க்ரியா சொல்படி ஈர் அல்லது வடி வரலாம் என்று தோன்றி இரண்டு விடைகள் அனுப்பினேன். இப்பொழுது என் மூக்கைத்தான் *உறிஞ்சுகிறேன்!
http://crea.in/search.php?startwort=ஈர்
ஈர்
1 வினைச்சொல் (ஈர்க்க, ஈர்த்து)
1. (பொருள்களைத் தன்னை நோக்கி) இழுத்தல்; pull towards; attract. பொருள்களை ஈர்க்கும் சக்தி பூமிக்கு இல்லையென்றால் நாம் மிதக்க வேண்டியதாகிவிடும்.
2. (பூமி நீரை) உறிஞ்சுதல்; (of earth) absorb; take in (water). வறண்டு கிடந்த நிலம் மழைநீரை உடனே ஈர்த்துக்கொண்டது.

http://crea.in/search.php?startwort=வடி
அ. (நீர் வெளியேறுதல் தொடர்பான வழக்கு)
1. (திரவம்) கோடாக அல்லது சொட்டுச்சொட்டாக வெளியேறுதல்; ஒழுகுதல்; வழிதல்; (of liquid) drip; trickle. காயத்திலிருந்து இரத்தம் வடிந்தது./ எருக்கஞ்செடியில் வடிந்த பாலை எடுத்து முள் தைத்த இடத்தில் தடவினான்.
2. (நீர் கொஞ்சம்கொஞ்சமாக வெளியேறி) குறைதல்; (of water) drain. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் வெள்ளம் வடியவில்லை.
ஆ. (அளவில் சிறுத்தல் தொடர்பான வழக்கு)
3. (வீக்கம்) அளவில் சிறிதாதல்; (of swelling) get reduced; subside. கால் வீக்கம் கொஞ்சம் வடிந்திருக்கிறது.
உஷா said…

ஊறு என்று தோன்றவேயில்லை. இழு என்று நினைத்தேன். கிணற்றிலிருந்து (வாளியில்) இழுத்து வெளிவரத் செய்கிறோம். மூச்சை உள்ளிழுத்து (உறிஞ்சி) விடுவதால் இழு சரியாக இருக்கும் என்று தோன்றியது
உஷா said…

எனக்கு முழு உடன்பாடு இல்லை. ''தண்ணீரை வெளியே வரச் செய்' என்ற குறிப்புக்கு 'தோண்டு' என்ற சொல் சரியாக இருக்கலாம். தோண்டினால் ஏற்படும் செயலே தண்ணீர் ஊறுதல். எனவே முழுமையாக ஏற்புடையதாக இல்லை
இழு என்பது மேலும் பொருத்தமாகத்தோன்றினாலும் யாரையும் நான் .வாதத்துக்கு இழுக்க விரும்பவில்லை. அது இடையூறாத்தோன்றலாம். ​
Chittanandam said…
ஊறு என்பது இப்புதிருக்கு உகந்த சொல். .குறை சொல்ல ஏதுமில்லை

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்