விடை 3452
இன்றைய வெடி:
பெருமாளுக்கு முன் பணி செய்பவன் பின் மரம் சுற்றுபவன் (5)
இதற்கான விடை:
பிரம்மன் =மரம் + பின்
இன்றைய வெடி:
பெருமாளுக்கு முன் பணி செய்பவன் பின் மரம் சுற்றுபவன் (5)
இதற்கான விடை:
பிரம்மன் =மரம் + பின்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1) 6:02:24 ராமராவ்
2) 6:02:40 ரங்கராஜன் யமுனாச்சாரி
3) 6:20:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
4) 6:30:31 கேசவன்
5) 6:52:54 Sandhya
6) 7:45:04 ருக்மணி கோபாலன்
7) 8:10:07 ஹரி பாலகிருஷ்ணன்
8) 8:42:52 எஸ் பி சுரேஷ்
9) 9:41:05 மீனாக்ஷி கணபதி
10) 10:21:19 ஆர். பத்மா
11) 16:36:36 அம்பிகா
12) 16:42:29 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
13) 17:11:37 மு.க.இராகவன்.
14) 18:17:17 எஸ்.பார்த்தசாரதி
15) 18:49:17 ராஜா ரங்கராஜன்
16) 19:14:51 மு க பாரதி
17) 20:40:22 KB
**********************
******************
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மும்மூர்த்தி அல்லது திரிமூர்த்தி என்று குறிப்பிடுகின்றார்கள்.
*பிரம்மன்* ஹிரணிய கர்ப்பத்திலிருந்து தோன்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஹிரண்யம் என்பது பொன்னையும் கர்ப்பம் என்பது கருவையும் குறிப்பதாகும். பிரம்மன் விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து வந்த தாமரை மலரின் மீது தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
_*இவர் இந்துக் கடவுளர்களில் முதன்மையானவர்* ._ பிரபஞ்சத்தின் படைப்புக்குக் காரணமானவர். படைப்புத் தொழிலினை மேற்கொண்டவர். இவர் தானாகத் தோன்றியவர் எனவே இவர் பிரபஞ்சத்தின் *முதல்வர்* என்றும் பிதாமகன் என்றும் அழைக்கப்படுவார். இவரைப் பற்றி வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவர் என்ற கருத்து தோன்றியது. இந்த வேளையில் ஒளிப்பிழம்பு வடிவத்தில் இருவரின் முன் ருத்திரன் தோன்றினார். பிரம்மன் சிவனின் சிரசைக் காண (தலை) ஹம்சவடிவில் (அன்னப்பறவை) உச்சியைக் காண மேல்நோக்கிப் பறந்தார். வழியில் கேடகியைச் (தாழம்பூ) கண்டார். சிவனின் உச்சியைத் தாம் கண்டதாகப் பொய்யுரைக்குமாறு பிரம்மன் கேட்டுக்கொண்டார். கேடகியும் அவ்வாறே சிவனிடம் கூறினார். சிவனிடம் பொய்யுரைத்ததால் சிவபூஜையில் கேடகி பூ இடம்பெறக் கூடாது என்ற சாபத்திற்கு ஆளாகினார். விஷ்ணு, வராக வடிவில் பூமியைத் துளைத்துக் கொண்டு ருத்ரனின் அடியைக்காண முனைந்தார். இறுதியில் திரும்பி வந்து ருத்ரன் தான் பெரியவர் என்று இருவரும் உணர்ந்தனர்.
ரூபமந்தனம் பிரம்மனுக்கு நான்கு சாந்தமான முகங்கள் உள்ளன என்று கூறுகின்றது. இது நான்கு யுகங்களையும், நான்கு வேதங்களையும், நான்கு வர்ணங்களையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
இந்து சமயத்தில் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு கோயில்கள் காண்பது அரிது.
💐🙏🏼💐
*****************
_பெருமாளுக்கு முன் பணி செய்பவன் பின் மரம் சுற்றுபவன் (5)_
_மரம் சுற்றுபவன்_
= *மரம்* _சுற்றியபின்_
= *ரம்ம*
_பின் மரம்_
= *பின்+ரம்ம*
= *பி+ரம்ம+ன்*
= *பிரம்மன்*
_பெருமாளுக்கு முன் பணி செய்பவன்_
= *பிரம்மன்*
_(மும்மூர்த்திகளில் பெருமாளுக்கு முன் படைத்தல் பணி செய்பவர் பிரம்மன்)_
🌸🌸🌸🌸🌸🌸🌸
_நிலவை படைத்து முடித்த கையில்_
_அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்_
_என்னை படைத்து முடித்த கையில்_
_அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்_
🌺🌺🌺🌺🌺🌺
_பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி_ 💃🏼