Skip to main content

விடை 3469

இன்று காலை வெளியான வெடி:
கண்ணுக்குத் தெரிவதில், காதில், விழுந்த ராகம் அசைகிறது  (5)
இதற்கான விடை:  காண்பதில் (பண் = ராகம்)

சரி இன்றைய புதிர் குறித்து ஒரு குறள் வெண்பாவும் நாலடி  வெண்பாவும்:

பண்ணோ டிணைந்தளித்தால் பாட்டும் இனித்திடுமே

கண்வேண்டாம் தோய்ந்துணரக்  காண்.


காதில் விழுந்தது காட்சியெனும் விந்தையும்
மேதினியில் உள்ள வெடியாம் உதிரியிதில் 
சோதித்துப் பார்த்திடுவீர் சொற்றிறனை செய்பணியும்
பாதித்தால் உங்களது  பாடு

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (40):

1) 6:06:40 ராதா தேசிகன்
2) 6:08:05 வி ன் கிருஷ்ணன்
3) 6:08:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
4) 6:09:29 கி மூ சுரேஷ்
5) 6:15:06 ஆர்.நாராயணன்.
6) 6:22:51 நாதன் நா தோ
7) 6:23:00 உஷா
8) 6:26:45 மு.க.இராகவன்.
9) 6:27:13 கேசவன்
10) 6:45:08 ருக்மணி கோபாலன்
11) 6:46:30 ரங்கராஜன் யமுனாச்சாரி
12) 6:47:39 KB
13) 6:56:35 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 6:58:59 ரவி சுந்தரம்
15) 7:10:56 மீ கண்ணன்
16) 7:12:27 சுந்தர் வேதாந்தம்
17) 7:14:44 லட்சுமி சங்கர்
18) 7:22:01 மு க பாரதீ
19) 7:22:23 முத்துசுப்ரமண்யம்
20) 7:33:23 மீ.பாலு
21) 7:40:03 K.R.Santhanam
22) 7:40:30 அம்பிகா
23) 7:42:33 மீனாக்ஷி
24) 7:51:56 மாலதி
25) 7:53:20 ராமராவ்
26) 8:17:01 எஸ்.பார்த்தசாரதி
27) 9:12:13 ராஜி ஹரிஹரன்
28) 10:47:10 தேன்மொழி
29) 11:09:39 ராஜா ரங்கராஜன்
30) 11:35:17 ஶ்ரீஜா
31) 12:03:59 Siddhan Subramanian
32) 12:46:05 சங்கரசுப்பிரமணியன்
33) 13:07:19 மடிப்பாக்கம் தயானந்தன்
34) 13:35:54 ரமணி பாலகிருஷ்ணன்
35) 13:55:59 ஸௌதாமினி
36) 16:06:45 ரவி சுப்ரமணியன்
37) 17:41:13 கு. கனகசபாபதி, மும்பை
38) 18:10:43 கோவிந்தராஜன்
39) 18:55:43 சாந்தி நாராயணன்
40) 18:58:39 சதீஷ்பாலமுருகன்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
கடவுள் இருக்கின்றார் அது உன் *கண்ணுக்குத்* *தெரிகின்றதா?*
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
*************************
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை *காதில் விழுகிறது* !
************************
‘ செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ கவிதைக்கு மூன்றாம் இடம் அளித்த கவிதைப் போட்டி!

_செந்தமிழ் நாடெனும்_ _போதினிலே - இன்பத்_
_தேன் வந்து பாயுது *காதினிலே*_ - _எங்கள்_
_தந்தையர் நாடென்ற_ _பேச்சினிலே_ - _ஒரு_
_சக்தி பிறக்குது மூச்சினிலே_

என்று துவங்கும் *மகாகவி பாரதியார்* கவிதையின் இனிமையையும் தனித்துவத்தையும் ரசித்து பாராட்டாதவர்களும் இல்லை; வியக்காதவர்களும் இல்லை. பாரதியாருக்குப்பின் எத்தனையோ உலகம் போற்றும் தமிழ் கவிஞர்களும் கவிதைகளும் படைக்கப்பட்ட போதிலும், இன்றும் அவரது கவிதைகளும், அதில் அவர் கையாண்ட அழகியலும் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது.
ஆனால், அவர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்துக்கொண்டு, இந்த கவிதையைச் சமர்ப்பித்தபோது, அவருக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்! 1900-க்களில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில்தான் இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

“இந்த கவிதைக்கு ரூ.100 பரிசாக வழங்கப்பட்டது. அப்போது, இந்த முடிவு குறித்து வி.வி.எஸ் ஐயர் வருந்தினார். ஆனால், இதனை பாரதியார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அந்த போட்டியின் முடிவுகளை முன்னரே முடிவு செய்திருப்பார்கள் என்று எங்களுக்கு ஆறுதல் கூறினார்”, என்று மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியாரின் மகள் யதுகிரி அம்மாள் நினைவுகூர்கிறார்.
**********************
_அதிசய *ராகம்*_ _ஆனந்த ராகம்_
_அழகிய ராகம் அபூர்வ ராகம்_
_வசந்த காலத்தில் மழை தரும் மேகம்_ - _அந்த_
_மழை நீரருந்த_ _மனதினில் மோகம்_ ....
**********************
_யார் அழுது யார் துயரம் மாறும்_
_யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்_
_உன் *காதில்* *விழாதோ*_
_என் கண்ணே என் நெஞ்சின் சோக *ராகம்*_
*************************
_கண்ணுக்குத் தெரிவதில், காதில், விழுந்த ராகம் அசைகிறது (5)_

_ராகம்_ = *பண்*

_அசைகிறது_
= *பண்* -> *ண்ப*

_காதில், விழுந்த ராகம்_
= *ண்ப----->காதில்*
= *காண்பதில்*

_கண்ணுக்குத் தெரிவதில்_
= *காண்பதில்*
*************************
ஒரு மடத்தில் நான்கு துறவிகள் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். திடிரென கம்பத்தின் மீது இருந்த மடத்தின் கொடி வேகமாக *அசையத்* தொடங்கியது.
அவர்களில் இளைய துறவி தியானம் கலைந்து, " *_கொடி_* *_அசைகிறது_* " எனக் கூறினார். அவரை விட அனுபவம் வாய்ந்த துறவி " *_காற்று_* *_அசைகிறது_* " எனக் கூறினார்.
இருபது வருடங்களாக அந்த மடத்தில் இருக்கும் மூன்றாவது துறவி அவர்களைப் பார்த்து, " *_மனம் அசைகிறது_* " என்று கூறினார்.
இவர்களின் பேச்சினைக் கேட்டு பொருமையிழந்த நால்வரில் மூத்த துறவி கடுமையுடன், " *_உதடுகள் அசைகின்றன_* " என்றார்.
**********************
பூமிப்பந்து தங்கு தடை இல்லாமல் சூரியனை வலம் வந்து இரவையும், பகலையும் உண்டாக்குகிறது. இந்த இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது சிவ பெருமானின் திருநடனம் தான். *_ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது_*. அவன் அசைவை நிறுத்தி விட்டால் சிறிய அணு கூட அசையும் சக்தியை இழந்து விடும். மனிதன் கருவில் இருக்கும் போதே தொடங்கும் இருதய இயக்கம், அதன் இயக்கத்தை நிறுத்தியதும் மனிதன் இறப்பதைப் போல, நடராஜர் தன் நடனத்தை நிறுத்தினால், உலகம் அழிந்து போகும்.

_அசையும் பொருளில் இசையும் நானே_
_ஆடும் கலையின் நாயகன் நானே_
_எதிலும் இயங்கும் இயக்கம் நானே_
_என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.._
_நான் அசைந்தால் அசையும்_ _அகிலமெல்லாமே.._
_அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?_
💐🙏🏼💐

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்