Skip to main content

விடை 3471

இன்று காலை வெளியான வெடி:
நட்ட நடு மறியல் இறைச்சிக்குப் பின்னர் (4)
இதற்கான விடை: ஊன்றிய =  ஊன் றியல் 

அரசியல் தலைவர் ஒருவர் சாலையில் நட்ட நடுவில் மறியல் செய்ய கூட்டம் திரட்ட ஏற்பாடு செய்யும்போது கேட்டது:

கையில் கொடியேந்திக் கத்திடுவேன் கோஷங்கள்

வெய்யிலில் சாலையில் வீசிடுவேன் கற்களை
பையில் பணத்தோடு கோழிக் கறிதந்தால்
நையப் புடைத்திடுவேன் நான்.

 


 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
_*நட்டநடு* கானகம்_ _நாற்புரமும் சாகரம்_

_எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை_

_விட்டுவிட_
_புத்தியில்லை_ , _வெற்றிபெற_ _சக்தியில்லை_

_சத்குருவே_
_பித்தனிவன்_ _பேதமையைப் போக்கு_

🌹🌹🌹

_*நட்ட நடு* கடல் மீது நான் பாடும் பாட்டு_

_சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து_

_நித்தம் உனை காணாது_
_நித்திரையும் தோணாது_

_சித்திரமே முத்துரதமே_
_எட்டி எட்டிப் போனாலும்_

_கெட்டு மனம் போகாது_
_அற்புதமே அன்னக்கிளியே_
***********************
(தமிழ் இறைச்சி யின் அர்த்தம்
_இறைச்சி_
பெயர்ச்சொல்
1. *ஊன்* .
உணவாகும் (ஒருசில விலங்குகளின், பறவைகளின், மீன்களின்) சதைப் பகுதி; கறி.

2. (பழந்தமிழ் இலக்கியத்தில்) _வெளிப்படையாகக் கூறப்படாமல் உணர்த்தப்படும் பொருள்._ )

*********************
_நட்ட நடு மறியல் இறைச்சிக்குப் பின்னர் (4)_

_நடு மறியல்_ = *றிய*

_இறைச்சி_ = *ஊன்*

_இறைச்சிக்குப் பின்னர்_ =
*ஊன்றிய*

_நட்ட_ = *ஊன்றிய*
*************************
_விதை *ஊன்றிய* நெஞ்சம்_
_விளைவானது மஞ்சம்_
_கதை பேசுது கவி பாடுது_
_கலந்தால் சுகம் மிஞ்சும்_
_உயிர் உன் வசம் உடல் என் வசம்_
_பயிரானது உன் நினைவுகள்_

_சிறு பொன்மணி அசையும்_
_அதில் தெறிக்கும் புது இசையும்_
_இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*இருபொருள் வெண்பா!*

_*பம்பரமும், செக்கும்!*_

_ஓரச்சில் *ஊன்றி* உழலுதலால்;_ _கொண்டபொருள்_
_கூரச்சாற் தாக்கிக் குளைத்தலால்;_ _பாரப்பா!_
_சாட்டைக்கே சுற்றுதலால்_ _சாய்ந்தாடும் பம்பரம்_.
_காட்டுமரச் செக்கின்நேர் காண்!_

(அகரம்.அமுதா)
**********************
குறள்:983
_அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு_

_ஐந்துசால் *ஊன்றிய* தூண்_

குறள் விளக்கம்:
அன்புடைமை, நாணம், உதவி செய்தல், கண்ணோட்டம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்களாகும்.
💐🙏🏼💐
**********************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (53):

1) 6:05:43 எஸ்.பார்த்தசாரதி
2) 6:06:28 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:09:18 வானதி
4) 6:11:28 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:11:49 ரவி சுப்ரமணியன்
6) 6:11:53 ரவி சுந்தரம்
7) 6:12:32 இரா.செகு
8) 6:13:44 சங்கரசுப்பிரமணியன்
9) 6:16:28 நாதன் நா தோ
10) 6:16:58 ராஜி ஹரிஹரன்
11) 6:16:59 சாந்தி நாராயணன்
12) 6:18:56 உஷா
13) 6:21:27 ஆர். பத்மா
14) 6:21:28 K.R. Santhanam
15) 6:22:20 மீ கண்ணன்
16) 6:23:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
17) 6:24:12 ராமராவ்
18) 6:32:24 மடிப்பாக்கம் தயானந்தன்
19) 6:33:39 ஆர்.நாராயணன்.
20) 6:33:48 மும்பை ஹரிஹரன்
21) 6:34:04 மீ.பாலு
22) 6:35:35 முத்துசுப்ரமண்யம்
23) 6:35:56 கு. கனகசபாபதி, மும்பை
24) 6:37:16 எஸ் பி சுரேஷ்
25) 6:39:46 ஹரி பாலகிருஷ்ணன்
26) 6:41:14 லக்ஷ்மி ஷங்கர்
27) 6:43:49 மீனாக்ஷி
28) 6:47:40 ரமணி பாலகிருஷ்ணன்
29) 6:49:36 KB
30) 6:52:04 சதீஷ்பாலமுருகன்
31) 6:57:28 ரங்கராஜன் யமுனாச்சாரி
32) 7:19:14 ராதா தேசிகன்
33) 7:21:26 மாதவ்
34) 7:26:10 மாலதி
35) 7:46:22 திருக்குமரன் தங்கராஜ்
36) 8:00:00 மு க பாரதி
37) 8:02:08 கேசவன்
38) 8:03:47 சுந்தர் வேதாந்தம்
39) 8:12:26 செந்தில் சௌரிராஜன்
40) 8:17:46 சுபா ஸ்ரீநிவாசன்
41) 8:19:35 பினாத்தல் சுரேஷ்
42) 8:24:54 கி மூ சுரேஷ்
43) 8:36:30 மீனாக்ஷி கணபதி
44) 9:10:18 லதா
45) 9:13:25 கோவிந்தராஜன்
46) 9:40:48 Siddhan Subramanian
47) 9:41:47 அம்பிகா
48) 13:13:32 தேன்மொழி
49) 17:55:21 மு.க.இராகவன்.
50) 19:09:46 ஏ.டி.வேதாந்தம்
51) 19:10:07 பத்மாசனி
52) 20:30:13 வி ன் கிருஷ்ணன்
53) 20:35:16 மைத்ரேயி
**********************
Raghavan MK said…
தமிழ் இறைச்சி யின் அர்த்தம்
*இறைச்சி* பெயர்ச்சொல்
1 . *ஊன்* .
உணவாகும் (ஒருசில விலங்குகளின், பறவைகளின், மீன்களின்) சதைப் பகுதி; கறி.
2 .(பழந்தமிழ் இலக்கியத்தில்) *_வெளிப்படையாகக் கூறப்படாமல் உணர்த்தப்படும் பொருள்._*

தமிழின் இலக்கண நூலான இறையனார் களவியல் நூலில் *இறைச்சி* என்ற சொல்லாடல் மிகுந்து வரும். இறைச்சி என்பதற்கு *உட்பொருள்* என்று பொருள்.

_இறைச்சி_ என்னும் சொல் *_‘இறு’_* என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. _‘தங்குதல்_ ’ என்னும் பொருள் உடையது.
கவிஞர்கள், தாம் கூறும் சொற்களுக்கு அடைமொழியாகக் கூறப்படும் பிற சொற்கள் தமது ஆற்றலால் பிறிதொரு பொருளைக் குறிப்பால் புலப்படுத்தி நிற்கும். _அத்தகைய சொல் திறனை - புரிந்து - அறிந்து - உணர்ந்து கொள்ளும் நுட்பம் இறைச்சி எனப்படுகிறது._ உள்ளுறையைப் போலவே இறைச்சிக்கும் கருப்பொருளே அடிப்படையாக அமைகிறது. இதனை _*_கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே*_ (_ 240) என்று நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார். சொல்லின் பொருள், அதனால் பெறப்படும் குறிப்புப் பொருள், இரண்டுக்கும் மேலாக மேலும் ஒரு குறிப்புப் பொருள் புலப்படுமாயின் அதுவே இறைச்சி என்றும் அறிஞர் விளக்கம் கூறுவர்.
உதாரணம்: _அரும்பெறல் அமிழ்தம்_ _ஆர்பத மாகப்_ _பெரும்பெயர் உலகம்_ _பெறீஇயரோ அன்னை தம்இல் தமதுண் டன்ன_ _சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவின்_ _ஓங்குமலை_ _நாடனை வரும்என்_ _றோளே_ *(குறுந்தொகை, 83)*

விளக்கம்:
இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து:
இனிமை தரும் சுளைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று செவிலி கூறினாள் என்பது.

தோழி உணர்த்த விரும்பும் கருத்து:

உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான். தலைவன் என்பது, தோழிகூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும் பொருள் அமைப்பு உள்ளது.
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்