Skip to main content

விடை 3468

விடை 3468
இன்று காலை வெளியான வெடி:
இறுதியற்ற மனிதனுக்குத் தலையில் இருப்பதும் நடுவில் இருப்பதும் (4)
இதற்கான விடை: முடிவிலா = முடி (தலையில் இருப்பது), விலா (உடல் நடுவில் இருப்பது)

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*_ஒத்த தலை_* _ராவணா_
_*பத்துதலை* ஆவுடா_
_ஒத்தையில_
_நிக்கிற வேங்கைடா_
_தில் இருந்தா_
_மொத்தமா வாங்கடா_ 🐅🐅🐅
***********************
*_அனந்தத்தை அறிந்தவன் (ராமனுஜன்)_*
அனந்தம் என்பது *முடிவிலாதது* , கணக்கிட முடியாதது; எல்லை அற்றது; என பொருள்படும்.
உலகம் நீர் சார்ந்தது, நிலம் சார்ந்தது. தாவரங்களுக்கான, பல கோடி உயிரினங்களுக்கான இவ்வுலகம் மனிதனுக்கான (Anthro centric) உலகமும் ஆகும். ஆனால், இம்மனிதனின் மனத்திற்குள்ளோ ஆயிரம் ஆயிரம் உலகங்கள். கணிதம், பௌதீகம், ரசாயனம் பொன்ற அறிவியல் மட்டுமன்றி, இசை, சிற்பம், ஓவியம், இலக்கியம் என்றெல்லாம் எண்ணிறந்த உலகங்கள்!
_கணித மேதை ராமானுஜனின் உலகமோ எண்கள் சார்ந்தது._ _பூஜ்யத்தில் தொடங்கி 1,2,3 என *இறுதியற்ற* கடைசி_ _எண்கள் (Infinity) வரை தேடல் கொண்ட கணித உலகம் அது._ _எண்களின் தோழன் கணித மேதை ராமானுஜன்._

வரலாற்று ஆசிரியர் ராபர்ட் கனிகல் (Robert Kanigel) என்பவர் கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை ‘ *அறிய இயலாத* *இறுதி எண்ணை அறிந்த மனிதன்* *(The man who knew infinity)* ’என்று நூலாக எழுதினார். இசைக்கு ஒரு மொசார்ட் (Mozart) போல, பௌதீகத்திற்கு ஒரு ஐன்ஸ்டைன் (Einstein) போல, கணிதத்திற்கு ஒரு ராமானுஜன் என்கிறது இந்நூல்!

இந்நூலை
_"அனந்தத்தை அறிந்தவன் (ராமனுஜன்)"_
எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் நாம் அனைவரும் அறிந்த புதிராசிரியர் *திரு பி.வாஞ்சிநாதன்* அவர்களே!💐
***********************
சிவபுராணம்
by மாணிக்கவாசகர் (79)
_ஆற்றின்ப வெள்ளமே_
_அத்தா மிக்காய் நின்ற_

ஆற்றின்ப வெள்ளமே =
சிவானந்தலஹரீ எனும் பரசிவசுகப்பெருவெள்ளமே!
அத்தா=
எனை ஈன்ற தந்தையே!
மிக்காய் நின்ற=
கழிக்க முடியாத பொருளாக *இறுதியற்ற நிலையே!*
💐🙏🏼💐
********************
_இறுதியற்ற மனிதனுக்குத் தலையில் இருப்பதும் நடுவில் இருப்பதும் (4)_

_மனிதனுக்குத் தலையில் இருப்பதும்_
= *முடி*

_மனிதனுக்கு நடுவில் இருப்பதும்_
= *விலா*

_இறுதியற்ற_
= *முடி+விலா*
= *முடிவிலா*
********************
ஆணின் *விலா* எலும்பிலிருந்து வந்தவள்தான் பெண். ஈசன் தன் உடம்பில் பாதியைக் கொடுத்தார் என்பதாக ஏராளமான நம்பிக்கைகளும் கதைகளும் ஆண் – பெண் பற்றி நம்மிடம் புழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதம் சார்ந்து – நம்பிக்கை சார்ந்து நிற்பவை.

*************************
கிச்சு கிச்சு மூட்டினால் *விலா* நோக சிரிக்க மாட்டோமா? 🤣

*************************
_தேரான் தெளிவும், தெளிந்தான்கண்_ _ஐயறவும்,_
_தீரா இடும்பை தரும் "_ என்பார் வள்ளுவர்.

ஆராயாமல் ஒருவரை (ஒரு கருத்தை) நம்புதலும், ஆராய்ந்தபின், எதை நம்பிச்
செயல்படத்துவங்கிவிட்டோமோ, அதன்பால், சந்தேகக்கண்களுடனேயே இருப்பதும்
*முடிவிலா* துன்பத்தைத் தரும்
********
_வாராய் நீ வாராய்_
_போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்_

_ஆஹா மாருதம்_ _வீசுவதாலே_
_ஆனந்தம் பொங்குதே_
_இதனினும் ஆனந்தம் அடைந்தே_
_இயற்கையில் கலந்துயர்_ _விண்ணினைக் காண்பாய் அங்கே_
......
_அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே_
_அழிவிலா மோன நிலையைத் தூவுதே_
........
_*முடிவிலா* மோன_ _நிலையை நீ_
_மலை *முடி* யில் காணுவாய்_ ⛰🏔
........
_வாராய் நீ வாராய்!_
_போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்_
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (53):
1) 6:01:48 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:18 இரா.செகு
3) 6:03:25 மீனாக்ஷி கணபதி
4) 6:03:26 வி ன் கிருஷ்ணன்
5) 6:04:39 முத்துசுப்ரமண்யம்
6) 6:04:46 ராதா தேசிகன்
7) 6:05:16 கேசவன்
8) 6:06:03 KB
9) 6:06:55 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:07:49 உஷா
11) 6:08:01 மைத்ரேயி
12) 6:08:27 சுந்தர் வேதாந்தம்
13) 6:08:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 6:09:02 ஆர். பத்மா
15) 6:10:13 ஆர்.நாராயணன்.
16) 6:11:18 ராமராவ்
17) 6:11:25 ரங்கராஜன் யமுனாச்சாரி
18) 6:18:46 பா நடராஜன்
19) 6:22:02 சுபா ஸ்ரீநிவாசன்
20) 6:22:35 மீ கண்ணன்
21) 6:27:54 சங்கரசுப்பிரமணியன்
22) 6:27:57 லதா
23) 6:29:42 பிரசாத் வேணுகோபால்
24) 6:30:55 ருக்மணி கோபாலன்
25) 6:35:43 மு க பாரதி
26) 6:39:21 மீனாக்ஷி
27) 6:40:42 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
28) 6:44:05 பூமா பார்த்த சாரதி
29) 6:46:01 வானதி
30) 6:48:42 ராஜா ரங்கராஜன்
31) 6:53:47 கலாராணி
32) 6:54:35 அம்பிகா
33) 6:58:48 K.R.Santhanam
34) 7:06:31 ரவி சுந்தரம்
35) 7:18:00 மீ.பாலு
36) 7:20:02 எஸ் பி சுரேஷ்
37) 7:24:17 Siddhan Subramanian
38) 7:26:30 மு.க.இராகவன்.
39) 7:29:35 தி. பொ. இராமநாதன்
40) 7:40:28 ஹரி பாலகிருஷ்ணன்
41) 8:08:22 பினாத்தல் சுரேஷ்
42) 8:10:45 பாலா
43) 9:30:41 சாந்தி நாராயணன்
44) 9:32:18 கு. கனகசபாபதி, மும்பை
45) 10:23:57 ராஜி ஹரிஹரன்
46) 10:44:10 கோவிந்தராஜன்
47) 14:22:19 ஏ.டி.வேதாந்தம்
48) 14:22:44 பத்மாசனி
49) 15:11:08 ரமணி பாலகிருஷ்ணன்
50) 15:29:59 ரவி சுப்ரமணியன்
51) 19:33:42 கி மூ சுரேஷ்
52) 20:04:21 ஸௌதாமினி
53) 20:50:48 விஜி துரை
**********************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்