Skip to main content

விடை 3447

இன்று காலை வெளியான வெடி: 
உருக்குலைந்த வழி பிறக்கும் சமயம் வெளியே எண்ணம் நிறைவேறவில்லை (4)

இதற்கான விடை:  சிதைந்த = தை + சிந்த (னை)


 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (45):

1) 6:01:52 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:02:04 ராமராவ்
3) 6:03:39 மீனாக்ஷி கணபதி
4) 6:03:41 திருமூர்த்தி
5) 6:04:50 எஸ்.பார்த்தசாரதி
6) 6:05:53 ரவி சுப்ரமணியன்
7) 6:06:58 V.R. Balakrishnan
8) 6:07:46 ராதா தேசிகன்
9) 6:08:38 ஆர்.நாராயணன்.
10) 6:10:49 K.R.Santhanam
11) 6:22:47 வானதி
12) 6:25:03 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
13) 6:25:27 ரவி சுந்தரம்
14) 6:26:07 சுந்தர் வேதாந்தம்
15) 6:28:25 லதா
16) 6:31:02 மு.க.இராகவன்.
17) 6:32:22 KB
18) 6:32:22 சாந்தி நாராயணன்
19) 6:33:07 சுபா ஸ்ரீநிவாசன்
20) 6:34:13 நங்கநல்லூர் சித்தானந்தம்
21) 6:38:00 ராஜா ரங்கராஜன்
22) 6:53:31 கு.கனகசபாபதி, மும்பை
23) 6:55:22 லட்சுமி மீனாட்சி, மும்பை
24) 7:00:24 கேசவன்
25) 7:04:56 முத்துசுப்ரமண்யம்
26) 7:12:42 வி ன் கிருஷ்ணன்
27) 7:18:19 பாலா
28) 7:27:43 மு க பாரதி
29) 7:36:21 அம்பிகா
30) 7:48:26 மீனாக்ஷி
31) 7:56:09 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
32) 8:30:21 தேன்மொழி
33) 8:32:35 கோவிந்தராஜன்
34) 8:42:43 ஆர். பத்மா
35) 8:46:06 மாலதி
36) 9:11:39 உஷா
37) 9:29:28 ராஜி ஹரிஹரன்
38) 11:06:07 சங்கரசுப்பிரமணியன்
39) 12:21:54 ஸௌதாமினி
40) 12:34:33 விஜி துரை
41) 17:34:46 மடிப்பாக்கம் தயானந்தன்
42) 19:13:36 சதீஷ்பாலமுருகன்
43) 19:19:09 திருக்குமரன் தங்கராஜ்
44) 19:32:16 பிரசாத் வேணுகோபால்
45) 20:51:52 பூமா பார்த்த சாரதி
**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
**********************
_*உருக்குலைந்து* ... நீ மழையாக இருந்தால்...அதில்_ _நனைந்து உருகி உருக்குலைந்து போகவும் தயார் நான்..!_
************************
*_தை_* பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்_
_தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்_
_ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்_
_ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்_
(படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்)
*******
_எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ_
_கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தைதானோ_  _ஆசைதான் மீறுதே யாரிடம் சொல்வேன்_
_எவ்விதம் அவன் உள்ளம் நான்தான் அறிவேன்_ 
_எண்ணாத_
*_எண்ணம்_* _எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன்_
_எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ_
(படம் -கணவனே கண்கண்ட தெய்வம் )
*********
*சிவனே எக்காலம்*

மாயா உடம்பெடுத்து மண்ணுக்கிரை ஆகாமல்
மாயாண்டி ஈசனுக்கு தொண்டு செய்வது எக்காலம்.
ஓயாமல் பொய்யுரைத்து உன் பக்தனாய் வாழாமல்
சீரார் பெருந்துறையை சேருவது எக்காலம்.

*எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி* வாடாமல் கண்ணார கண்டு
உன்னை கைதொழுவது எக்காலம். பண்ணோடும் பாட்டோடும் பலபேரை புகழாமல் உன்னோடு நான் சேர்ந்து ஒன்றாவது எக்காலம்.

எக்காலம் சிவனே எக்காலம்!
🌺🌺🌺
"எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாக செய்தது இனிப் போதும் பராபரமே.."
- *தாயுமானவர்*

💐🙏🏼🌺
*************************
_உருக்குலைந்த வழி பிறக்கும் சமயம் வெளியே எண்ணம் நிறைவேறவில்லை (4)_

_வழி பிறக்கும் சமயம்_ = *தை* (மாதம்)

_எண்ணம் நிறைவேறவில்லை_
= *சிந்த(னை)*

_வெளியே_ = *சிந்த* வெளியே *தை* ₹உள்ளே
= *சி+தை+ந்த*
= *சிதைந்த*
= _உருக்குலைந்த_
********************
முருகனை மனமாரத் துதிக்கும் எளிய தமிழ்ப்பாடல்

*சிந்தனை* செய் மனமே தினமே சிந்தனை செய் மனமே –
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை சிந்தனை செய் மனமே –
….. சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை ஆதலினால் இன்றே

அருமறை பரவிய சரவணபவ குகனை ஷண்முகனை *சிந்தனை* செய் மனமே
💐🙏🏼💐
உஷா said…

சரியான விடை க்ளிக் ஆனதும் பரவசமாக உணர்ந்தேன். வெகு அழகாகப் பின்னப்பட்ட(ஆனால் சிதையாமல்) புதிர்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்