Skip to main content

Posts

Showing posts with the label அமெரிக்கா

அமெரிக்க தேசத்து ஆச்சரியங்கள் - 1

ரவிசுந்தரம் உதிரிவெடியில் பல நாட்களாக ஆர்வத்துடன் பங்கேற்பதுடன் விடைகளைப் பற்றி வாட்ஸப் குழுவில் பல விதமான தொடர்பான கருத்துகளை அளித்து வருவார். தன்னுடைய நண்பர்கள், உறவினர்களை என்று பலரையும் இப்புதிர்களைப் பற்றிக் கூறி வரவழைத்திருக்கிறார். மின்னஞ்சல் மூலமாகவே பழக்கமான இவர் அமெரிக்கா வரும்போது தன்னுடைய வீட்டிற்குக் கட்டாயம் வரவேண்டும் என்று கூறியதன்பேரில்  அவர் வசிக்கும் பிட்ஸ்பர்க் நகருக்கு  மூன்று நாட்கள் சென்றேன். அவருடன் பேசினால் பல விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம். ரவி சுந்தரம் அமெரிக்க வரலாற்றைப் பற்றிப் பேசும்போது ஜார்ஜ் வாஷிங்டன் மனைவியின் தந்திரங்கள் பற்றிச் சொல்கிறார். ஸ்பெயின் நாட்டு வரலாற்றுடன் வண்டிவாஷ் போர் (வந்தவாசிப் போர்), ஆங்கிலேயர்கள் அடையாற்றில் 18ஆம் நூற்றாண்டில் தூப்ளேயை முறியத்தது எல்லாம் எப்படித் தொடர்புடையவை என்று கூறுகிறார். டெஸ்லா காரை ஓட்டிக் கொண்டு என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற போது  தாமஸ் ஆல்வா எடிசன்  எப்படிக் கயமையுடன்  நிகொலாஸ் டெஸ்லாவையும் ஆல்டெர்நேடிங் கரண்ட் பற்றியும் பல அவதூறுகளைப் பரப்பினார் என்று சொன்னார். ...