ராபர்ட் கனிகல் (www.robertkanigel.com) என்ற அமெரிக்கர் விஞ்ஞானியில்லை, அவர் ஓர் எழுத்தாளர். பல ஆய்வுகள் செய்து அறிவியல் தொடர்பான செய்திகள் கொண்ட புத்தகங்கள் பல எழுதியுள்ளார். இந்தியாவின் கணித மேதை ராமனுஜன் சரிதையை 1991ல் அவர் The Man Who Knew Infinity என்ற 400 பக்கங்களுக்கும் மேற்பட்ட நூலாக எழுதினார். அது பிரெஞ்சு, ஜெர்மனி, இதாலி, கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து நாட்டினர் மொழிகளில் மொழிபெயர்த்து பெரிதும் போற்றப்பட்டது. (இரண்டாண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்தது). ஐந்து வருடங்களுக்கு முன் இந்திய மொழிகள் பத்திலாவது (அஸ்ஸாமி, ஒதிஷா, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்கம் , தமிழ் ...) மொழிபெயர்க்கப்பட்டது. தமிழாக்கம் செய்யும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. எல்லா மொழிகளிலும் நேஷனல் புக் ட்ரஸ்ட் என்னும் அரசு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இப்போது பச்சையப்பன் கல்லூரி எதிரேயுள்ள பள்ளியில் நடை பெற்று வரும் சென்னைப் புத்தக்கக் கண்காட்சியில் அதை வாங்கலாம். கடை எண் 207,208. ஜனவரி 22 வரை....
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.