இன்று காலை வெளியான வெடி: ஏகப்பட்ட அறிவுடன் பெறும் பரிசு (4) அதற்கான விடை: வெகுமதி = வெகு+ மதி மீண்டும் விடை கண்டவர்கள் எண்ணிக்கை அறுபதைத் தாண்டியுள்ளது. இதோ வெகுமதி: அறிவுடை மாந்தர் புதிரினில் ஆழ்ந்து செறிவுற்ற சிந்தனையால் கண்ட விடைகள் குறிதவறா வில்லாளன் கூர்கணையாய்ச் சாய்த்து த் தெறித்திட வைத்திடும் தேர்ந்து. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.