Skip to main content

விடை 3805

இன்று காலை வெளியான வெடி:
இனிமை மது கொட்டி உள்ளே ஒழுக வெளியே தெரியாதது (5)

இதன் விடை : ரகசியம்
டாஸ்மாக் கடைக்குப் போய் சரக்கை  வாங்கி, பிளாஸ்டிக் பையில் எடுத்து
வருவதுதான் சரியாக இருக்கும். கண்ணாடி பாட்டில், வழியில் எங்கேயாவது இடித்தாலும்  மது உள்ளே கொட்டி ஒழுகுவது, வெளியே தெரியாமல் இருக்கும். இப்படி வாழ்க்கைக்கு முக்கியமான தத்துவத்தை அடக்கிய இன்றைய வெடியை விளக்கி ஒரு மூன்றடி வெண்பா.

ஒழுகாப்பை  உள்வைத்த  ஓர்சரக்கு காப்பாம்
விழுந்தால் கசிந்து வெளிக்கொட்டும்  பையால்
இழுக்குண்டு கெட்டார் குடி.

 
இந்த ஒப்பரிய தத்துவத்தைப் புரிந்து விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*************************
_மதுரத்தில் மது கொட்டியும் மிஞ்சியது ....._

*_ரம் (RUM)!_* 🍷🤔
************************ 
நல்ல புதிர், அதனினும் நல்ல விளக்கம்.
Muthu said…
டாஸ்மாக்குக்கும் சரக்குக்கும் எனக்கும் வெகு தூரம் - கி.மீ அளவிலும், மனத்தளவிலும். என் போன்றோர் பலர் இருப்பது பலரும் "மறைந்தது" என்று விடையளித்திருப்பதிலிருந்து தெரிய வருகிறது. நானும் மறைந்தது, மசிந்தது, மறைத்தது எல்லாம் நினைத்துப் பார்த்து (மது அருந்தாமலே) குழம்பினேன். இனிமை என்பதற்கு மதுரம் என்ற சொல்லும், ஒழுக என்பதற்குக் கசியவும் வடிய மிகவும் சிரமப் பட்டேன். கடைசியில் ரகசியம் வெளி வந்தது! ஒப்பரிய வெண்பாவும், மது கொட்டிய பின்னும் "ரம்" இல் கசிய வைத்த ரகசியமும் அருமை!
Vanchinathan said…
ஐயா முத்து அவர்களே: மனத்தால் மிகவும் "கசிந்துருகி" செய்த புதிர் இன்று.

மு க ராகவனின் த"ரம்" வாய்ந்த கண்டுபிடிப்பு மதுரம்!
Muthu said…
காதலாகிக் கசிந்திருகி புதிர் செய்ய வாழ்த்துகள்!

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
உதிரிவெடி தனை உடைத்தெறிந் துய்க்கவும்
போது விடிந்ததும் புண்ணியம் சேர்க்கவும்
'நாதன் நட்பு நமக்கு வாய்த்ததே.
(தமிழ்ப் புலவோரும், சம்பந்தரும் மன்னிப்பர்களாக)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.