Skip to main content

விடை 3796

இன்று காலை வெளியான புதிர்:
நிறம்  கால்வாசி போனாலும் மீதி பாதி என்பது உறுதி (4)  
அதற்கான விடை: திண்ணம் = வண்ணம் - வ + தி.
வ = 1/4, அல்லது "வண்ணம்" என்ற நாலெழுத்துச் சொல்லில் கால்வாசி!
தி = "மீதி" என்பதில் பாதி.
கால்வாசி போனால் மிச்சம் இருப்பது பாதி, கணக்கு புரியவில்லையென்றால் பிஜி வுட்ஹவுஸின்  பெர்ட்ராம்  வூஸ்டரைக் கேட்கவும்: "This proves the well-known fact that half the world does not know what the rest of the three quarters is doing"

இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

Comments

Muthu said…
<<"This proves the well-known fact that half the world does not know what the rest of the three quarters is doing">> எங்கேயோ படித்தது: "There are three kinds of people in this world. Those who know how to count and those who do not know how to count!"
Sundar said…
Equivalent joke for CS (Computer Science) geeks is that there are 10 types of people in the world. Those who know binary and those who don't. :-)
மீதி பாதி, கால்வாசி போன வண்ணம்(நிறம்) முன் வர வேண்டும் என்னும் குறிப்பு புதிரில் இல்லாதது போலத் தெரிகிறதே ஐயா...
Vanchinathan said…
ஆமாம், பிரசாத். முன்னே இட வேண்டும் என்ற தகவல் குறிப்பில் இல்லாதது ஒரு குறைபாடுதான்.
Vanchinathan said…
@சுந்தர்: நேற்று இந்த 10 பேர் நகைச்சுவையை வீட்டில் பேசிக் கொண்டிருந்தேன். நீங்களும் சொல்லிவிட்டீர்கள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்