(ஒரு முக்கிய வேலையை முடித்து விட வேண்டியிருந்ததால் இப்போதுதான் விடையை வெளியிட முடிந்தது)ப்.
இன்று காலை வெளியான புதிர்:
நகர் உள்ளே கிழக்கே போகும் உவேசா தேடியது ஓயாமல் ஒலிப்பது (2,2)
அதற்கான விடை: அலை ஓசை = அசை + ஓலை.
அசைதல் = நகர்தல்; ஓலை = உவே சா தேடியது. அது "லை ஓ" என்று கிழக்கிலிருந்து வருமாறு எழுதப்பட வேண்டு. தவறுதலாக கிழக்கே போகும் என்று எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் குறுக்கெழுத்துப் புதிரில் misdirection அதாவது திசை திருப்பி விடுவது என்பார்கள். நான் தப்பாக எழுதித் திசை திருப்பி விட்டேன். ஆனாலும் என்னுடைய குழப்பத்தால் தடுமாறாமல் பலரும் சரியாக விடையளித்து விட்டீர்கள்.
இன்றைய வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
இன்று கல்கியின் பிறந்தநாள் என்பதால் அவர் தான் எழுதிய கதைகளில் பெரிதும் பெருமைப்பட்ட "அலை ஓசை" விடையாக அமைத்தேன். உவேசாவும் எதிர்பாராமல் வந்து சேர்ந்துவிட்டார்.
Comments