Skip to main content

விடை 3784

இன்று காலையில் வீசப்பட்ட வெடி:

சந்திரனில்  முதல் மூன்று அடி வைத்து நடப்பதெல்லாம் சாதாரணம் (4)

சில நாட்களாக அடிக்கடி சந்தியான் விண்கலம் பற்றிய செய்திகள் வந்த வண்ணமாய் இருக்கிறது: இன்று அதன் சுற்றுப் பாதை உயர்த்தப்பட்டது, இன்று பூமியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு சந்திரனை வட்டமிடத் தொடங்கிவிட்டது, இன்று தரையிறங்கும் கலம் பிரிக்கப்பட்டது ... இப்படி.  அதைத் தொடர்ந்து இன்றைய புதிர்.  மூன்றடிவைத்து  பிரபஞ்சத்தையே அளந்த வாமனன் கதை பேசப்படும் நாட்டில்  நமது இஸ்ரோ விரைவில் சந்திரனில் நடப்பதை சாதாரண நிகழ்ச்சியாக்கும்படி முன்னேறும்.

 இன்றைய வெடிக்கான  விடை:  சகஜம் = ச(ந்திரனில்)  + கஜம் (3 அடி)

சகஜம் = சாதாரணமாய் நடைபெறுவது.

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இப்பக்கத்தில் காணலாம்.

Comments

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்