Skip to main content

விடை 3807

திரிசுரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-1876

தன்னுடைய ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் கவிதை எழுதும் திறமையை வியந்து உவேசா குறிப்பிடும் பல நிகழ்ச்சிகளில் ஒன்று இது. யாரோ ஒருவருக்கு அவர்கள் ஊர் கோயில் சிறப்பை விவரித்து தல புராணம்  எழுதித் தருவதாக ஆசிரியர் வாக்களித்திருந்தார். மாயுரத்திலிருந்து கிளம்பி 20கிமீ தூரத்திலுள்ள திருவாவடுதுறை   மடத்துக்குச் செல்கிறார்கள்.  மாட்டு வண்டியில் போகும்போதே அவர் இயற்றிவிட்டாராம். உவேசாவின் வார்த்தைகளில் "மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல் அவர் பாடல்களை சொல்லிக் கொண்டே வந்தார்". அதைக் கேட்டு எழுதிக் கொள்ள உவேசா சிரமப்பட்டார். இவ்வாறாக அவர் தன்னுடைய வாழ்நாளில்  லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.   ஏன் அப்பாடல்கள் நாம் அதிகம் கேள்விப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது.  மீ.சு.பிள்ளை எழுதிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்ற நூல் கிடைத்தது. அதில் ஒரு பக்கம்:




அவர் இறந்த ஐந்தாண்டு கழித்து எட்டயபுரத்தில்  பிறந்த ஒருவர்  வாழ்நாள் முழுதும் எழுதியதை 400 பக்கத்துக்குள் அடக்கிவிடலாம். அதிலிருந்து ஒரு பாடல்.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


ஏன் தன்னை அவர் பெருமையாக சொல்புதிது,  சுவை புதிது என்று கூறிக்கொண்டார் என்று இதில் தெரிந்து கொள்ளலாம்.  மீசுபிள்ளைக்குத் திறமைம் கற்பனையும்  இருந்த அளவுக்கு புதிய சிந்தனை இல்லை. அதனால் அவர்  ஆழ்ந்த சிவபக்தியோடு எழுதியதை  மற்ற  பக்தர்கள் கூட கொண்டாடிப் படிப்பதாகத் தெரியவில்லை..

 ஆதிசங்கரரின் தத்துவத்தை எண்ணித் தான் சிந்தித்ததை, வடமொழி மாயை என்றும் ஆங்கிலம் illusion என்றும் கூறியதை அவர் தோற்றமயக்கம், காட்சிப்பிழை என்று புதிதாகச் சொல் படைத்து பாரதி செய்த புதுமைதான் இன்ற்றை கவிஞர் தாமரை யையும் வசீகரித்துள்ளது.
 அக்காட்சிப்பிழையிலும், கடல் மணலிலும்  சிப்பி புதைந்துள்ளதுதான் எனக்குத் தெரிந்தது.
அதை இன்று சில உதிரிவெடி வாசகர்கள்  கவனமாகத் தேடியெடுத்துவிட்டார்கள்.

Comments

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்