Skip to main content

Posts

Showing posts with the label Laburnum

கோடையில் மழை வரும்?

கோடை தகிக்க ஆரம்பித்துவிட்டது.  ஆனால் மரங்களுக்கு சென்னையில் இப்போதுதான் கொண்டாட்டம்.  ஒதியமரம் (Indian Ash tree, Lannea coromandelica)  இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு பச்சையாகப் பூக்களைக் முடிந்துவிடாதக் கூந்தல் போல் சரிய விட்டுக் கொண்டிருக்கிறது.   அரக்குநிறக் காய்களைக் கொண்ட copperpod என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மயில் கொன்றை தரையெங்கும் பூக்களைக் கொட்டி இறைத்துள்ளது. கொய்யா, நெல்லி இவற்றைவிட நோஞ்சானாக இருக்கும் சரக்கொன்றை (Cassia Fistula, Indian Laburnum, Amaltas) மரம் கோடையில் மட்டும்தான்  பூப்பேன் என்று  பூத்துக் குலுங்குகிறது. பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன் எப்போதும் பொன்னார் மேனியனே என்று சிவனைக் கொன்றை அணிந்தவன் என்ற விவரிக்கும் பாடலைப் பாடுவான். ஆனால் அதைவிட சுவாரசியமான தகவல்கள் சங்கப்பாடல்களில் இருக்கின்றன.    தலைவி  வெளியூர் சென்ற தலைவன் திரும்புவதற்காகக் காத்திருக்கிறாள். கார்காலத்தில் திரும்பி வருவதாக வாக்களித்துச் சென்றவன், இன்னும் வரவில்லை. கொன்றைகளோ பூத்துக்  கார்...