நேற்றைய திரிவெடியில் பின்வரும் சொற்கள் வெளிவந்தன:
ஈட்டி, வேல், அம்பு, வாள், சூலம்
இம்முறை பொருத்தமான ஆனால் வெவ்வேறான விடைகள் வந்துள்ளன. அதைப் படிப்பது சுவாரசியமாக இருப்பதுடன் எப்படி மற்றவர்களின் சிந்தனை தர்க்கரீதியாக வேறு வழியில் செல்கிறது என்று அறிந்து கொள்ள எனக்கு உதவுகிறது.
நான் எண்ணிய விடை: வாள். இது மட்டுமே வெட்டும் (அல்லது பிளக்கும்) ஆயுதம் மற்றவை குத்துபவை.
இதே விடைக்கு வேறொரு பொருத்தமான காரணத்தையும் வாசகர்கள் அளித்திருக்கிறீர்கள்: வாள் சண்டையின்போது கையில் ஏந்திய படியே இருக்கும், மற்றவற்றை எறிய வேண்டும்!
இன்னொரு விடை, அம்பு. மற்றவற்றை வெறும் கையால் பயன்படுத்த இதற்கு மட்டும் வேறொரு கருவி (வில்) வேண்டும்!
சூலம். இதன் முனை மூன்றாக இருக்கும் மற்றவை ஒரே முனையுடன் இருக்கும்.
நன்றி
இதற்கு விடையனுப்பியர்வர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments