தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு
வாஞ்சிநாதன்
இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன்.
நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்!
விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம்.
இதோ அந்த புதிர் விளையாட்டு:
ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான தெய்வத்தின் ஊரிலுள்ள (A) தன் சொந்த வீட்டில் பிறந்தநாளைக் (B) கொண்டாட அவன் பளபளக்கும் ஆடையணிந்து (C) மிடுக்குடன் நடந்து வந்த போது அவன் ஓரு அக்பரின் பட்டம் (D) போல் இருந்தான் என்பதில் கொஞ்சங்கூட (E) சந்தேகமில்லை.
Comments
சுவாரஸ்யமாக உள்ளது.
தீபபாவளி Special உண்மையிலேயே
அதி ரசமாய்
இருந்தது! நம்பிக்கையுடன் விடையனுப்பியுள்ளேன்
ஐந்து சொற்களுக்கும் ஒற்றுமை கண்டு !
My guess is purposely it is not given
அனுப்பிவிட்டேன். பார்ப்போம்..