Skip to main content

விடை 3506

இன்று வெளியான வெடி:
முடியதில் விட்டுவிட்டு வெட்டிய முனை (3)
இதற்கான விடை:  முயல் = மு டி தி ல்

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
கட்டாயக் கடமைகளை *விட்டுவிட்டு* உபரி வணக்கங்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற நினைப்பது ஒருவகையில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான்.
*********************
பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால்
பாதைகள் மறுப்பு சொல்லப் போவதில்லை
பாதை வகுத்து நாம் *முயன்றால்*
பாரில் அனைத்தும் வென்றிடலாம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_முடியதில் விட்டுவிட்டு வெட்டிய முனை (3)_

_முடியதில் விட்டுவிட்டு வெட்டிய_
= *மு(டி)ய(தி)ல்*
= *முயல்* _( முயற்சி செய்_ )

_முனை_
= *முயல்* _( முயற்சி செய்)_
************************

_முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை_

_இன்மை புகுத்தி விடும்_ ._

விளக்கம் :
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
********
*முயல்*

கவலைகள் துரத்திடினும் கனவுகளை நோக்கி பயணியுங்கள்,
கடந்த பாதை மாறாவிடினும் காலம் மாறும் என்ற நம்பிக்கையில்.
🌺🌺🌺🌺🌺🌺🌺
*பேனா முனை*
🖋🖋🖋✒✒🖋🖋🖋
_ஏர் முனையாய் உலகை உழும்_
_கூர் முனையாம் பேனா முனை._
_யார் தடுத்தும் ஓயா முனை._
_தீர்வெடுக்கும் தீர முனை._
_மேலாடை கழற்ற நிர்வாணமாகும்_
__காலாடக் கசியும் கரு நாளம்,_
_நூலாடும் கருத்துச் சொல்லோவியம்_
_மேலோடிச் சமூக அழுக்ககற்றும்._
_
(வேதா. இலங்காதிலகம்.)
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (61):

1) 6:01:07 எஸ்.பார்த்தசாரதி
2) 6:01:12 முத்துசுப்ரமண்யம்
3) 6:01:21 இரா.செகு
4) 6:01:46 ரவி சுப்ரமணியன்
5) 6:01:53 லக்ஷ்மி ஷங்கர்
6) 6:02:13 அம்பிகா
7) 6:02:41 மும்பை ஹரிஹரன்
8) 6:03:24 ராமராவ்
9) 6:03:27 மீ பாலு
10) 6:03:28 ரவி சுந்தரம்
11) 6:03:35 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
12) 6:04:07 KB
13) 6:04:52 கி மூ சுரேஷ்
14) 6:05:39 ரமணி பாலகிருஷ்ணன்
15) 6:07:30 வி ன் கிருஷ்ணன்
16) 6:09:00 திருமூர்த்தி
17) 6:09:49 K.R.Santhanam
18) 6:09:54 ராஜா ரங்கராஜன்
19) 6:11:27 உஷா
20) 6:11:45 வானதி
21) 6:12:29 Suba Srinivasan
22) 6:20:12 நாதன் நா தோ
23) 6:24:29 லதா
24) 6:25:30 கேசவன்
25) 6:26:23 பா நடராஜன்
26) 6:32:03 ரங்கராஜன் யமுனாச்சாரி
27) 6:33:36 தி. பொ. இராமநாதன்
28) 6:34:41 ஸௌதாமினி
29) 6:36:16 ஹரி பாலகிருஷ்ணன்
30) 6:36:20 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
31) 6:38:32 விசீ சந்திரமௌலி
32) 6:39:45 ஶ்ரீவிநா
33) 6:40:12 நங்கநல்லூர் சித்தானந்தம்
34) 6:45:15 சதீஷ்பாலமுருகன்
35) 6:45:54 சுந்தர் வேதாந்தம்
36) 6:46:11 Siddhan Subramanian
37) 6:48:30 ஆர்.நாராயணன்.
38) 6:55:01 மீனாக்ஷி
39) 6:55:40 கலாராணி
40) 7:00:59 எஸ் பி சுரேஷ்
41) 7:03:53 மீ கண்ணன்
42) 7:09:01 வி. ஜயா
43) 8:02:56 மாலதி
44) 8:16:04 மு க பாரதி
45) 8:44:06 மீனாக்ஷி கணபதி
46) 9:07:04 மாதவ்
47) 9:11:43 கோவிந்தராஜன்
48) 9:15:25 ஏ.டி.வேதாந்தம்
49) 9:16:20 பத்மாசனி
50) 9:31:12 கு.கனகசபாபதி, மும்பை
51) 11:10:11 ருக்மணி கோபாலன்
52) 11:22:18 தேன்மொழி
53) 11:34:43 மு.க.இராகவன்.
54) 11:38:42 ஆர். பத்மா
55) 12:15:39 ராதா தேசிகன்
56) 13:19:53 பினாத்தல் சுரேஷ்
57) 13:20:27 ராஜி ஹரிஹரன்
58) 15:03:03 சங்கரசுப்பிரமணியன்
59) 16:53:09 சாந்தி நாராயணன்
60) 17:23:51 பா நிரஞ்சன்
61) 19:37:56 பாலா
**********************

"முனை" ஒரு நல்ல திசை திருப்பம்.
Raghavan MK said…
திசை திருப்பியும் 61 பேர் விடையளித்துள்ளனரே!
M k Bharathi said…
முயற்சிக்கு
முத்தாய்ப்பு தரும்
*முயல்* ஒன்று
புதிரிலிருந்து
புறப்பட்டு
மகிழ்வித்தது!
Partha said…
எப்போதோ படித்தது - 'வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும். முயலாமைதான் ஜெயிக்காது.'
உஷா said…

இன்னும் சற்றே அரிய சொற்களை முயன்று பார்க்கலாம்
Chittanandam said…
முனை விலங்கு என்று எப்போதோ படித்த ஞாபகம்.
Sundar said…
Clever! :-)
I am a fan of the American TV show The Simpsons. As per it's protagonist Homer Simpson, முயலாமை தோற்கவும் தோற்காது!

In an episode he tells his wife, "Marge, trying is the fist step to failure". You can't help laughing at his logic, which is still correct. :-)
Vanchinathan said…
கொஞ்சம் ஆசிரியர் பிரம்பை எடுக்கிறேன், முன்பே சொல்லியதாயிருக்கலாம்: முயல் என்பதை வினைச் சொல்லாக பயன்படுத்துவது குறைந்து ரொம்பவும் கஷ்டப்பட்டு "அவன் முயற்சித்தான்" என்று எழுதும் வழக்கம் பரவலாக இருக்கிறது. "அவன் முயன்றான்" என்பதுதான் சரி. "சுழல், சுழற்சி" என்பதுடன் "சுழன்றான்" என்பதுதான் சரியாக இருக்கும் "சுழற்சித்தான்" என்றால் சரியில்லை.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்