இன்று காலை வெளியான வெடி:
சுருக்கம், சுருக்கம், சுருக்கம், அடையாளம் (4)
இதற்கான விடை: முத்திரை = "மூன்று" திரை;
திரை = (தோலில் ஏற்படும்) சுருக்கம்);
சுருக்கம் கொண்ட துணி (நாடகத் திரை)
கடல் தண்ணீரின் பரப்பில் அலையாய் ஏற்படும் சுருக்கம் = திரை
முத்திரை = அடையாளம்.
(இந்தப் பாடலில் ஏ ஆர் ரஹ்மானின் முத்திரையைக் காணலாம்)
சுருக்கம், சுருக்கம், சுருக்கம், அடையாளம் (4)
இதற்கான விடை: முத்திரை = "மூன்று" திரை;
திரை = (தோலில் ஏற்படும்) சுருக்கம்);
சுருக்கம் கொண்ட துணி (நாடகத் திரை)
கடல் தண்ணீரின் பரப்பில் அலையாய் ஏற்படும் சுருக்கம் = திரை
முத்திரை = அடையாளம்.
(இந்தப் பாடலில் ஏ ஆர் ரஹ்மானின் முத்திரையைக் காணலாம்)
Comments
1) 6:01:19 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:05:07 எஸ்.பார்த்தசாரதி
3) 6:07:51 ரங்கராஜன் யமுனாச்சாரி
4) 6:09:03 பானுமதி
5) 6:10:30 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:15:28 முத்துசுப்ரமண்யம்
7) 6:16:42 கி மூ சுரேஷ்
8) 6:18:43 ஆர்.நாராயணன்.
9) 6:24:46 சங்கரசுப்பிரமணியன்
10) 6:30:08 ஸௌதாமினி
11) 6:34:28 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
12) 6:52:25 Siddhan Subramanian
13) 7:10:17 சாந்தி நாராயணன்
14) 7:55:57 மு க பாரதி
15) 8:31:50 மீனாக்ஷி
16) 8:34:07 கு.கனகசபாபதி, மும்பை
17) 9:00:17 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 9:02:22 மாலதி
19) 9:27:31 மீ கண்ணன்
20) 9:27:56 எஸ் பி சுரேஷ்
21) 11:32:29 தேன்மொழி
22) 11:39:08 வி_ஜயா
23) 12:05:02 கேசவன்
24) 14:03:47 மைத்ரேயி
25) 14:52:54 K.R.Santhanam
26) 15:11:41 கோவிந்தராஜன்
27) 16:51:25 மு.க.இராகவன்.
28) 18:18:17 லக்ஷ்மி மணியன்
29) 20:26:16 அம்பிகா
**********************
*************************
*_நரை திரை மூப்பு_ .*
வயதானால் உடலில் ஏற்படக்கூடிய புறத்தோற்ற மாற்றங்களைக் குறிக்குங்கால் இம்மூன்று சொற்களையும் சேர்த்தே சொல்லுவர்...
*நரை* என்றால் கறுத்த தலைமுடி வெண்மையாதல்,
*திரை* என்றால் தோலில் விழும் சுருக்கங்கள்,
*மூப்பு* என்றால் கூடும் வயதால் ஏற்படும் கூன் போடுதல் போன்ற மாற்றங்களும் முதிர்ந்த தோற்றமுமாகும்.
*************
பொருள் புதைந்து, பரந்து வரியும் கருத்தோடு கலந்த சொற்களின் *சுருக்கம்* கவிதை. எந்த ஒளிப்பும் மறைப்பும் இன்றி, நடைமுறையை இலகு மொழியில் எளிமையாக எடுத்துவரக்கூடியது புதுக்கவிதை.
*********
_நான்கே அடிகளில் இராமாயணம் *சுருக்கம்*_
இராமாயணக்கதையை நான்கு அடிகளில் ‘ ஏகவிருத்த ராமாயணம் ’ என்ற தலைப்பில் *சுருக்கித்தந்திருந்த* பாடல் ஒன்றைத் ‘தமிழ்ப்புலவர் சரித்திரம்’ என்ற நூலில் காண நேர்ந்தது. இந்நூல் யாழப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவரால் இயற்றப்பட்டது. கம்பரைப் பற்றிச் சொல்லுமிடத்து இந்தப் பாடலை எடுத்தாளும் இவர் “ ஒரு சுலோகத்தில் வடநூலார் கூறிய இராமாயணத்தையும் , ‘ஏக விருத்த ராமாயணம் ’ என மொழிபெயர்த்திருக்கிறோம்“ எனக் கூறுவதில் இருந்து, இவ்விருத்தம் இவரது மொழியாக்கமாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
பாடல் இதுதான்,
தாதையார் சொலராமன் காடு போதல்
சார்ந்துளபொன் மானெனுமா ரீசன் சாதல்
சீதையார் பிரிவெருவை மரணம் பானு
சேயொடுநட் புக்கோடல் வாலி வீடல்
ஓதநீர்க் கடற்பரப்பை அநுமன் தாண்டல்
உயரிலங்கை நகரெரியால் வேகக் காண்டல்
பாதகராம் அரக்கரெலாம் இறக்கத் தாக்கல்
பாக்கிய ராமாயணச்சீர் காதை யீதே!
*மிகச்சுருக்கமாக* இராமயணம் இப்படிக் கூறப்பட்டுவிட்டது.
*************************
_சுருக்கம், சுருக்கம், சுருக்கம், அடையாளம் (4)_
_சுருக்கம்_ = *திரை*
_[திரை --பொருள்_:
_உடல் தோலின் சுருக்கம்_ ]
_சுருக்கம், சுருக்கம், சுருக்கம்_
= _3 சுருக்கம்_
= _3 திரை_
= *முத்திரை*
_அடையாளம்_
= *முத்திரை*
[முத்திரை :
சின்னம் அடையாளப்படுத்தும் குறியீடு.
ஒருவருடைய செயல், படைப்பு போன்றவற்றில் வெளிப்படும் தனித்துவத்தின் அடையாளம்.]
*************************
*_முத்திரை_*
*முத்ரா* என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின் போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸம்ஸக்ருத அகராதிகளில் காணக்கிடைக்கிறது.
முத்ரா என்ற சொல் ஒரு காரணப் பெயர். *முத்* என்ற வினைச் சொல் மகிழ்வூட்டும், மனநிறைவளிக்கும் என்று பொருள்படுவது. *த்ரா* என்ற பதத்துக்கு விரைந்து வெளியேற்றுதல் என்று பொருள். எனவே, தேவதைகளுக்கு மகிழ்வையும் மன நிறைவையும் அளிப்பதுவும், விரைவாகப் பாவங்களை அகற்றுவதும் ஆன கிரியைக்கு *முத்ரா* என்பதாகக் காரணப் பெயர் அமைந்துள்ளது.
*முத்திரைகளின்* பெருமையை விளக்கிக் கூறும் ச்லோகங்கள் இவ்வாறு கூறுகின்றன: எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும், பாவத் தொடர்பைப் போக்குவதாலும் அவை *முத்திரை* என்று பெயர் பெறுகின்றன.
*********
சங்க காலத் தமிழ்வேந்தர்களான சேரர் எய்கணை வில்லையும், சோழர் பாயும் புலியையும், பாண்டியர் கயல்மீனையும் தங்களின் அடையாள முத்திரைகளாகப் பயன்படுத்தினர். இவை அக்கால அரசுமுத்திரைகள்.
*************************
விழித்திரை திறந்தபோது
சுருக்கமாய் வந்தப் புதிர்
ஆசிரியர் திறமைக்கு
முத்திரைப் பதித்தது.