Skip to main content

விடை 3489

இன்று காலை வெளியான வெடி:

கட்டு இடை ஒடிய சேவை (2)

இதற்கான விடை: தொடு = தொ(ண்)டு

பூக்கட்டுதல் = பூத்தொடுத்தல்

இன்று வந்த விடைகள் 45, சரியான விடைகள் 17. பத்து விதமான விடைகள் வந்துள்ளன. அதிகம் வந்த தவறான விடைகள்: பணி, தொகை, அமை, இடு, படை...

Comments

Raghavan MK said…
_*புதிருக்குள் புகுவோம்*_
*********************
சிக்கமான புதிர் , நான்கே வார்த்தைகள். விடையோ இன்னும் இளைத்து இரண்டே எழுத்துக்கள்!

நாமும் சிக்கனமாக ஒரு சபாஷ் போடுவோம் 👏🏼

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

_கட்டு இடை ஒடிய சேவை (2)_

_சேவை_
= *தொண்டு*

_இடை ஒடிய சேவை_
= *தொண்டு - ண்*
= *தொடு*
_கட்டு_ = *தொடு*

**********************

*_சேவை_*
பெயர்ச்சொல்

1 மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி.

2 (பெற்றோர், குரு போன்றோருக்குச் செய்யும்) *தொண்டு* .

‘பெற்றோருக்குச் சேவை செய்வதைப் புண்ணியமாகக் கருதினார்’
🌹🌹🌸🌸🌺🌺🌹🌹
*தொடு*
வினைச்சொல்

தொட, தொட்டு, தொடுக்க, தொடுத்து, கட்டு
(சரம் அல்லது மாலை ஆக்குவதற்காகப் பூக்களை) தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் வகையில் நாரில் அல்லது நூலில் முடிச்சிட்டு இணைத்தல்.

‘‘பூத் தொடுத்துத் தருகிறாயா?’ என்று அக்கா கேட்டாள்’
( ‘உதிரிப் பூ வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறாள்’ )
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (17):

1) 6:20:49 ரவி சுந்தரம்
2) 6:36:46 மு.க.இராகவன்.
3) 6:40:20 வானதி
4) 6:42:16 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
5) 6:43:24 தேன்மொழி
6) 7:05:31 மு க பாரதி
7) 7:29:09 பாலா
8) 7:45:00 நாதன் நா தோ
9) 7:59:15 திருமூர்த்தி
10) 8:17:25 ஆர்.நாராயணன்.
11) 8:49:36 மாதவ்
12) 9:14:57 மீனாக்ஷி கணபதி
13) 10:30:03 ஸௌதாமினி
14) 11:04:12 கேசவன்
15) 13:37:36 ஆர். பத்மா
16) 16:47:27 சுந்தர் வேதாந்தம்
17) 17:24:07 அம்பிகா
**********************
இன்று பதிலளித்தோர் பட்டியலில் இடம் பெற இயலவில்லை. தொகை என பதில் அளித்திருந்தேன்.

சேவை - தொழுகை

இடை ஒடிய - தொகை

கட்டு - புல்லுக்கட்டு போன்று சேர்ந்திருத்தல் - தொகுத்திருத்தல் - தொகை என்னும் பொருளில்.

குறைவான வார்த்தைகள், குறைவான எழுத்தாலான விடை, ஆனால் செறிவான புதிர்.
உஷா said…

இதுவும் பொருந்துகிறதே
சுற்றி வளைத்து ஒரு மாதிரியாகப் பொருந்துகிறது எனலாம்.

கட்டு = தொடு மிகச்சரியாக அமைகிறது, பூ கட்டுதல் என்னும் பொருளில். அதனால் ஆசிரியரின் தீர்ப்பை முழுமனதாக ஏற்கிறேன்.
Raghavan MK said…
[11/13, 15:52] ‪+91 83558 85900‬: Yesterday clue would have made finding a solution easier “சேவை இடை ஒடிய கட்டு (2)” Nevertheless great quizzing - Kudos Vanchi


[11/13, 16:15] M K Raghavan:

The intention of the author may be, it shouldn't be easy as a cakewalk!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்