Skip to main content

விடை 3485

இன்றைய (சீர்திருத்தப்பட்ட வெடி):

தைரியம் உடையவன் இல்லாமல் போக கடைசியாய் இருக்கிறான் (3) 
 
தைரியம், மன வலிமை உடையவன் இல்லாமல் போக மன நீக்கத்தால் இருக்கிறான் (3)  

இதற்கான விடை: தீரன்  = தீர +  (இருக்கிறா) ன்

இந்த விடையைக் கண்டுபிடித்தவர்கள். (1+17 பேர்)

1    கேசவன்
2    KB
3    மு க பாரதி
4    தேன்மொழி
5    சாந்திநாராயணன்
6    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
7    நங்கநல்லூர் சித்தானந்தம்
8    நாதன் நா தோ
9    கி மூ சுரேஷ்
10    ராதா தேசிகன்
11    வி ன் கிருஷ்ணன்
12    மு.க.இராகவன்.
13    ராமராவ்
14    ரவி சுப்ரமணியன்
15    எஸ்.பார்த்தசாரதி
16    மீ கண்ணன்
17    மீனாக்ஷி
18    ராஜி ஹரிஹரன்



Comments

Raji said…

ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு பாஸ்... ஆத்தா நான் பாஸாயிட்டேன் moment.
Raghavan MK said…
இன்றைய (சீரமைத்த) புதிரின் விளக்கம்
*************

_தைரியம் உடையவன் இல்லாமல் போக கடைசியாய் இருக்கிறான் (3)_

_இல்லாமல் போக_
= *தீர*
_கடைசியாய் இருக்கிறான்_
= *ன்*

_தைரியம் உடையவன்_ = *தீர+ன்*
= *தீரன்*
***********************
Aside......👇🏽

_தீரன் சின்னமலை_

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1756ஆம் ஆண்டு கொங்குநாட்டைச் சேர்ந்த ஈரோடு அருகே உள்ள காங்கேயம், மேலைப்பாளையத்தில் _தீர்த்தகிரி சர்க்கரை_ என்பவர் பிறந்தார். இவர் வளரும் போதே போர் கலைகளான வில்வித்தை, சிலம்பாட்டம், வாள் பயிற்சி, மல்யுத்தம் ஆகிய அனைத்திலும் கைதேர்ந்தவராக திகழ்ந்தார். அப்போது கொங்குநாடு, மைசூர் அரசரான ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹைதர் அலியின் திவான் முகமது அலி கொங்கு நாட்டில் உள்ள பொது மக்களிடம் வரிப்பணம் வசூல்செய்து, மைசூர் அரசரிடம் கொடுத்து வந்தார். பொது மக்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் வரியின் அளவு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அளவுக்கு இருந்துள்ளது. கோபமடைந்த தீர்த்தகிரி இதற்கு ஒரு வழிசெய்ய வேண்டுமென்று, வசூலித்த வரியை சங்ககிரி மலை வழியாக மைசூருக்கு எடுத்துச்செல்லும்போது அதை வேட்டையாடி ஏழை மக்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டார். திட்டம் போட்டதுபோன்றே பல மாட்டு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மக்களின் வரிப்பணத்தை தனது நண்பர்களுடன் வேட்டையாடினார் தீர்த்தகிரி. அப்போது திவான் முகமது அலி," யார் நீ?" என்று தீர்த்தகிரியிடம் கேட்க, அதற்கு அவரோ,
_"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும்_ _இடையே ஒரு *சின்னமலை* பறித்ததாக மைசூர் மன்னன் ஹைதர் அலியிடம் போய் சொல்"_
என்று கூறியுள்ளார். அத்தருணத்திலிருந்து கொங்கு நாடு முழுவதும் மக்களுக்கு பரிச்சயமான பெயர்தான் சின்னமலை. அன்றே அவர் கூறியதாகச் சொல்லப்படும் இந்த வாக்கியம் இன்றும் தமிழகமெங்கும், முக்கியமாக கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்றது. பெற்றோரால் தீர்த்தகிரி சர்க்கரை என்று வைக்கப்பட்ட பெயர்
*தீரன் சின்னமலை* யாக மாறியது இந்த சங்ககிரிமலை கோட்டையில்தான்!
💐🙏🏼💐
Ramiah said…
திருத்தப்படாத புதிரும் புரிந்துவிட்டது. (தைரியம், மன வலிமை உடையவன் )
என்பது விளக்கச் சொல். இல்லாமல் போக = தீர
இருக்கிறான் = உள்ளன் , மன = உள்ள
உள்ளன் - உள்ள = ன்
ஒரே குழப்பமாகிவிட்டது.
Vanchinathan said…
நன்றி. அந்த குழப்படியான வெடியையும் போஸ்ட்மார்டம் செய்து பார்த்துவிட்டீர்கள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்