Skip to main content

விடை 3505

இன்று காலை வெளியான வெடி:
வளம் பெருகி இறந்து மன்னன் சென்ற கோழியுடன் புதைக்கப்பட்டுள்ளான் (4)  
இதற்கான விடை: செழித்து = வளம் பெருகி  =  செத்து  + (கோ) ழி

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (58):

1) 6:00:23 அம்பிகா
2) 6:00:58 நாதன் நா தோ
3) 6:01:10 லட்சுமி சங்கர்
4) 6:01:17 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
5) 6:01:28 எஸ்.பார்த்தசாரதி
6) 6:01:58 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:02:16 முத்துசுப்ரமண்யம்
8) 6:03:05 இரா.செகு
9) 6:03:44 ரவி சுப்ரமணியன்
10) 6:03:56 ரவி சுந்தரம்
11) 6:04:22 எஸ் பி சுரேஷ்
12) 6:04:24 ருக்மணி கோபாலன்
13) 6:04:30 கி மூ சுரேஷ்
14) 6:04:38 suba srinivasan
15) 6:05:16 ஆர். பத்மா
16) 6:07:26 திருமூர்த்தி
17) 6:09:26 பிரசாத் வேணுகோபால்
18) 6:09:37 ராஜா ரங்கராஜன்
19) 6:10:38 ராமராவ்
20) 6:12:03 சங்கரசுப்பிரமணியன்
21) 6:13:33 பா நடராஜன்
22) 6:15:01 மும்பை ஹரிஹரன்
23) 6:17:05 லதா
24) 6:19:30 KB
25) 6:22:16 மு.க.இராகவன்.
26) 6:26:16 வி.ஜயா
27) 6:28:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
28) 6:31:05 கேசவன்
29) 6:31:44 கலாராணி
30) 6:33:07 ஆர்.நாராயணன்.
31) 6:34:16 ராஜி ஹரிஹரன்
32) 6:37:27 மீனாக்ஷி
33) 7:03:12 சுந்தர் வேதாந்தம்
34) 7:03:46 சாந்தி நாராயணன்
35) 7:05:19 Siddhan Subramanian
36) 7:15:09 ரமணி பாலகிருஷ்ணன்
37) 7:19:27 மாதவ்
38) 7:20:58 தேன்மொழி
39) 7:23:24 ஹரி பாலகிருஷ்ணன்
40) 7:24:23 ராதா தேசிகன்
41) 7:25:33 மு க பாரதி
42) 7:29:15 தி. பொ. இராமநாதன்
43) 7:29:41 கு.கனகசபாபதி, மும்பை
44) 7:42:28 மடிப்பாக்கம் தயானந்தன்
45) 7:59:12 மீனாக்ஷி கணபதி
46) 8:12:43 உஷா
47) 8:55:11 மாலதி
48) 8:59:51 வானதி
49) 9:01:05 திருக்குமரன் தங்கராஜ்
50) 9:13:34 பினாத்தல் சுரேஷ்
51) 10:30:34 பாலா
52) 10:32:02 சந்திரசேகரன்
53) 11:17:42 ஶ்ரீவிநா
54) 12:14:52 ஸௌதாமினி
55) 13:12:00 ஏ.டி.வேதாந்தம்
56) 13:12:23 பத்மாசனி
57) 14:41:36 K.R..Santhanam
58) 20:30:09 சதீஷ்பாலமுருகன்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
_கோயில் திருவிழாவில்_ _இரண்டு_ _ஊர்களுக்கு இடையே_
_சண்டை மூண்டது._

*கோழி* அறுப்பதா?
ஆடு வெட்டுவதா என்று,

கோழியும், ஆடும் உயிரோடிருக்க
வெட்டிக் கொண்டு செத்தனர்
இரண்டு ஊர்களிலும் ஆறுபேர்.
*******
*கோழி*
காலையில்
கொக்கரக்கோ என்றேன்
மலையில் குக்கருக்குள்
வந்தேன்
***********
*திருவெம்பாவை*

_*கோழி* சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்_
_ஏழில் இயம்ப இயம்பும்வெண்_ _சங்கெங்கும்_
_கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை_
_கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ_

_வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்_
_ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ_
_ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை_
_ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்._

விளக்கம் : *கோழி* கூவுதலும், பறவைகள் ஒலித்தலும், இசைக்கருவிகள் இசைத்தலும், வெண்சங்கு முழங்குதலும் பொழுது புலர்வதை அறிவிப்பன. ஆனால், முன்னையவை கோயிலின் புறத்தேயும் பின்னையவை கோயிலின் உள்ளேயும் நிகழ்வன. இனி, வெளியே நிகழ்வது இயற்கைக் காட்சி; உள்ளே நிகழ்வது செயற்கைக் காட்சியாதலின், ‘ _*கோழி* சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்’_ என்றும், ‘ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்’ என்றும் பிரித்துக் கூறினார். இறைவனது புகழ், பொருள் சேர் புகழாதலால், ‘விழுப்பொருள்கள்’ என்றதற்குப் புகழ்களை எனப் பொருள் கொள்ளப்பட்டது. வாழி - இகழ்ச்சிக் குறிப்பு. ' _திருமாலும் பாற்கடலில் உறங்கித்தான் சிவபெருமானிடம் அன்பு கொண்டானோ!’_ என நகைமொழியாகக் கூறுதற்கு, _‘ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?’_ என்றனர்.

இதனால், உறக்கம் இறைவனிடத்தில் அன்பு செய்வதற்குத் தடையாகும் என்பது கூறுப்பட்டது.
************************
_வளம் பெருகி இறந்து மன்னன் சென்ற கோழியுடன் புதைக்கப்பட்டுள்ளான் (4)_
_இறந்து_ = *செத்து*

_மன்னன் சென்ற கோழியுடன்_
= *கோழி- கோ*
= *ழி*
_புதைக்கப்பட்டுள்ளான்_
= *செத்து* க்குள் புதைக்கப்பட்ட *ழி*
= *செழித்து*
= _வளம் பெருகி_
🌸🌸🌸🌸🌸🌸🌸
_சின்னச் சின்ன வெத்தலையாம்_ _சிங்கார வெத்தலையாம்_
_செவ்வாழைத் தோட்டத்திலே *செழித்து* வந்த வெத்தலையாம்_

_வண்ண வண்ண சேலைக்காரி வந்து_ _இலை வெட்டையிலே_
_மண்ணு பட்டா_ _தோசமுன்னு மடியில் வெச்ச வெத்தலையாம்_

_சேலத்து மானுக்கு தான் சீரு வந்த_ _வெத்தலையாம்_
_சீரு வந்த வெத்தலையும் சீமைக்கெல்லாம் பத்தலையாம்_

_செவ்வாழைத் தோட்டத்திலே_ _*செழித்து* வந்த வெத்தலையாம்!_
🌱🌱🌱🌱🌱🌱🌱
குஞ்சு மிதித்து
முட‌மான கோழிக‌ள்--
முதியோர் இல‌ல‌ம்.
~~~
கோழி மிதித்து
முட‌மான குஞ்சுக‌ள்--
குழந்தைக‌ள் காப்ப‌க‌ம்.
🐣🐣🐣🐣🐣🐣🐣🐣

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்