Skip to main content

Posts

Showing posts from March, 2018

Solution to Krypton 17

The puzzle for today: It is rejected from civilized part of magnet (4) Solution: POLE  ( pol(it)e )   6:03:01    S P Suresh      6:06:34    S,Parthasarathy      6:15:28    K.BALASUBRAMANIAN      6:19:47    Ravi subramanian       6:29:48    R. Ravishankar.      6:32:21    Kesavan      6:36:14    Ramarao      6:39:44    Vijaya Ravishankar      7:02:22    NT NATHAN       7:28:05    S.R.BALASUBRAMANIAN       8:25:08    Ravi Sundaram       9:18:28    Rukmani Gopalan    9:28:22    Siddhan      12:16:24    Ambika      12:16:39    Suba Srinivasan      13:01:48    M.K.RAGHAVAN   15:40:08    R. Padma      20:53:43  Sundar Vedantham

விடை 3263

இன்று (31/03/2018) காலை வெளியான வெடி மாமாங்கத்திற்கு ஒரு முறை கனியுணவு உண்பவர் சற்று முன்பே பிறந்திருந்தால் துலாராசிக்காரர்  (6) இதன் விடை:  விருச்சிகர் . மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடப்படும் இவர் பன்னிரண்டாண்டுகளுக்கு.  ஒரு முறை நாவல் பழத்தை மட்டும் சாப்பிடுவார். (சற்று முன்பே பிறந்திருந்தால், விருச்சிகத்திற்கு முந்தையராசியான  துலாம் ராசி. ) அவ்வாறாக நாவற்கனியைத் தயாராக வைத்துவிட்டு  அவர்  குளத்தில் குளித்துக்  கொண்டிருந்தபோது அவ்வழி வந்த காயசண்டிகை கவனமின்றி அதை மிதித்து உருக்குலைத்துவிட்டாள்.  அதனால் அடுத்த பன்னிரு ஆண்டுகள் தான் பசியாக இருக்கையில் காயசண்டிகையும் அடங்காப் பசியால் துன்புற வேண்டும் என்று சாபமிட்டார். (இந்தக் காப்பியப் புத்தகத்தை நான் எடுத்துப் படித்ததில்லை. கும்பகோணம் பாணாதுறைப் பள்ளியில் என்னுடைய தமிழாசிரியர் எட்டாம் வகுப்புப்  பாடம் நடத்திய போது சொன்னது.) சரியான விடையளித்தவர்கள், மூன்று வகையாக:  ஒற்றை நட்சத்திரம்  பெற்றவர்கள் (1 பேர்) விடையை மட்டும் அனுப்பியுள்ளார்கள். இரண்டு நட்சத்திரம் பெற்றவர்கள் ( 4 பேர்)  ஓரளவு சரியான விளக்கம் அளித்துள்ளார்கள் ம

உதிரிவெடி 3263

இன்றைய (31/03/2018)  வெடி வாஞ்சிநாதன் *********************** To see today's English puzzle (Krypton 17 ) click here. வரும் ஏப்ரல் 22இல் உதிரிவெடிக்கு ஓராண்டு நிறைவு பெறும். அதை முன்னிட்டு ஆர்வமுள்ள சென்னைவாசிகள் ஓரிடத்தில் சந்திக்கலாமா?   அச்சமயத்தில் சிறப்பான பாராட்டு பெற சனி, ஞாயிறுகளில் அதிகமாகச் சோதிக்கும் புதிர்கள் வரும். போனவாரம் பு திராசிரியர் நான்கு விடை வருமாறு கொடுத்திருந்தேன். இன்றும் சோதனைதான். சரியான விளக்கம் தேவை: மாமாங்கத்திற்கு ஒரு முறை கனியுணவு உண்பவர் சற்று முன்பே பிறந்திருந்தால் துலாராசிக்காரர்  (6) Loading...

விடை 3262

இன்று (30/03/2018) காலை வெளியான வெடி அக்ரஹாரத்தில் சாம்பாருக்கு அடுத்தது   திரிந்து முற்ற   துறவி வெளியே சென்றார் (5)   இதன் விடை: சாற்றமுது   (பேச்சில் சாத்தமுது) =சாது + முற்ற இச்சொல்லில் இரண்டு கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்: அமுது என்று இருப்பதால் சாறு அமுது, ரசம்சாதமாக இருக்குமோ என்று கேட்டேன்.  இல்லை ரசத்துக்குதான் அப்படிச் சொல்வது என்கிறார்கள்.  பொதுவாக இசைக்கு பதில் சங்கீதம்,  தண்ணீருக்கு ஜலம்/தீர்த்தம், திருநீறுக்கு விபூதி என்று சம்ஸ்கிருதச் சொற்களைப்  புழங்குபவர்கள்,   ரசம் (ரஸ்) என்ற வடமொழி மூலங்கொண்ட  சொல் தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும்போது,   அதைவிட்டு அழகான தமிழ்ச்சொல்லான சாற்றமுதைப் பயன்படுவதுதான்!

உதிரிவெடி 3262

இன்றைய (30/03/2018) வெடி வாஞ்சிநாதன் *********************** அக்ரஹாரத்தில் சாம்பாருக்கு அடுத்தது   திரிந்து முற்ற   துறவி வெளியே சென்றார் (5)   Loading...

விடை 3261

இன்று (29/03/2018) காலை வெளியான வெடி: மெல்லிய நூல் சாம்பாருக்குத் தேவையானது மேஜையை சமமாக்க உதவும் (5) இதற்கான விடை: இழைப்புளி    தச்சர்கள் பயன்படுத்தும் கருவி. அதை மரப்பரப்பின் மேல் தேய்த்துச் (இழைத்துச்) சீராக்குவார்கள். சவரம் செய்வது போல்  அதன் கத்தி மரத்தின் மேற்பரப்பிலுள்ள  மேடுகளை உரித்துச் சுருளாக விழச் செய்யும்.

உதிரிவெடி 3261

இன்றைய (29/03/2018) வெடி வாஞ்சிநாதன் ********************* மெல்லிய நூல் சாம்பாருக்குத் தேவையானது மேஜையை சமமாக்க உதவும் (5) Loading...

விடை 3260

இன்று (28/03/2018) காலை வெளியான வெடி மணவாழ்க்கை ? (3) இதற்கான விடை:  வாசம் ( ஐந்தாண்டு  கனடா வாசத்தில் மல்லிகா   செண்பகப்பூ வாசத்தையே மறந்து போய் விட்டிருந்தாள் )

விடை 3259

இன்று (27/03/2018) காலை வெளியான வெடி பாதத்தில் வலி மிக தோல் வியாதி மற்றொன்றுக்கு ஆதாரமானது (5) இதற்கான விடை:  அடிப்படை = அடி  ப்   படை

உதிரிவெடி 3259

இன்றைய (27/03/2018) வெடி வாஞ்சிநாதன் ********************** பாதத்தில் வலி மிக  தோல்வியாதி  மற்றொன்றுக்கு  ஆதாரமானது (5) Loading...

விடை 3258

இன்று (26/03/2018) காலை வெளிவந்த வெடி: இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப் படும் வலிமைக்கு முன் வணங்கு (2, 3) இதன் விடை:  தொழு உரம் ;  தொழு = வணங்கு, உரம் = வலிமை. கால்நடைகளின் கழிவுகளை வயலுக்கு உரமாகப் பயன்படுத்தும் பாரம்பரிய முறை. மாடுகள் கட்டப்படும் தொழுவத்திலிருந்து பெறப்படுவதால் இப்பெயர் என்கிறார்கள்.   அப்படி என்றால் தொழுவ உரம் என்றுதான் இருக்க வேண்டும். பிற்பாடு தேய்ந்து விட்டது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. ஏழெட்டு பேருக்கு மேல் தழை உரம் என்ற விடையை அளித்திருக்கிறார்கள். தழை (இலை)யும் இயற்கையானது, உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. தழை என்பதன் பொருள்  கொஞ்சம் பணிவுக்கு அருகில் வருகிறது. ஆனால் வணங்கு என்ற பொருளுக்கு தொழு மிகவும் அருகில் இருக்கிறது. "தொழு உரம்" என்ற பயன்பாடு இருப்பது போல், "தழை உரம்" என்ற பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

உதிரி வெடி 3258

இன்றைய (26/03/2018)  வெடி வாஞ்சிநாதன் *********************** இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப் படும் வலிமைக்கு முன் வணங்கு (2, 3) Loading...

விடை 3257

இன்று  (25/03/2018) காலை வெளியான வெடி குண்டாக பஞ்சு மூலம் ஆட்டுக் கூட்டத்தை ஒழித்த மடந்தை இதற்கான விடை:  பருத்திட. இவ்வலைப்பதிவு தொடங்கிய நாள் முதல் ஓவ்வொரு முறையும் (சில சமயம் தவறாக இருந்த போதிலும்)  விடையை எப்போதுமே வி --> ளக்கத்துடன் அளித்து வருபவர், மும்பை கு. கனகசபாபதி.அவர் சரியாக இன்று அளித்த விளக்கத்தை அப்படியே இங்கே இடுகிறேன்: பருத்திட (குண்டாக); பஞ்சு மூலம் = பருத்தி +ஆட்டுக்கூட்டதை ஒழித்த மடந்தை = "ட "(மடந்தை--மந்தை )     --> --> --> --> --> --> -->

Solution to Krypton 16

Today's clue: Too much let inside  harp donor strummed (8) Solution: Plethora = Let + harp + O. Seems to be a dull day today for Krypton. Just  7 answers were submitted today.  Among them correct ones were found by S P Suresh and R Ravishankar.

உதிரி வெடி 3257

இன்றைய (25/03/2018) வெடி வாஞ்சிநாதன் **************** Click here for today's English clue குண்டாக பஞ்சு மூலம் ஆட்டுக் கூட்டத்தை ஒழித்த மடந்தை (5) Loading...

விடை 3256

இன்று (24/03/2018)  காலை வெளியான வெடி: புதிராசிரியர் முதல் குறுக்கெழுத்தில் எழுத்துகள் எண்ணிக்கை இரண்டுக்குச் சமம் (3) இதற்கு விடை: நான்கு = நான்+கு,   அதாவது எழுத்துகளின் எண்ணிக்கையில் "இரண்டு"க்கு இ,ர,ண்,டு என்று   நான்கு இருக்கிறதல்லவா? குனூத் புத்தகத்தில் இதுபோல் தற்சுட்டு உதாரணங்கள் (self-referential examples) நிறைய இருக்கும்.  அந்த வியாதிதான் இன்று கொஞ்சம் என்னைப் பிடித்து விட்டது.  சரியான விளக்கத்துடன் விடையளித்த ஒரே நபர்: எஸ்.பார்த்தசாரதி அவருக்குப் பாராட்டுகள். மற்றவர்கள் எல்லோரும் வெறும் விடை அல்லது தவறான விளக்கம்  அனுப்பியிருந்தனர். எஸ் பார்த்தசாரதிக்கு வேளச்சேரி வந்தால் அடையாறிலில்லா  ஆனந்தபவனில் பாராட்டி அல்வா அளிக்க உறுதியளிக்கிறேன். விடையளித்த மற்றவர்கள்: இரா.செகு      கேசவன்      ஆர்.நாராயணன்.      ராஜி ஹரிஹரன்      எஸ் பி சுரேஷ்      எஸ்.பார்த்தசாரதி       எஸ் பி சுரேஷ்      சங்கரசுப்பிரமணியன்      ரவி சுப்ரமணியன்       ரா. ரவிஷங்கர்..      . ரமணி பாலகிருஷ்ணன்       எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்      மீனாக்ஷி கணபதி      அம்பிகா  

Solution to Krypton 15

The clue today: Victory includes a smashing hit not crossing the boundary (6) Solution: WITHIN  ( win  hit) A few days ago newspapers flashed in the front page a thrilling victory with a six in the last ball of a cricket match.  After reading that I made this up. Hope cricketers who score in singles would like this! This clue has been solved by Ramarao    S.Parthasarathy    Meenakshi Ganapthi    Siddhan    K.BALASUBRAMANIAN    Kesavan    S.R.BALASUBRAMANIAN    S P Suresh    Bhuvana Sivaraman    Sankarasubramanian    Ravi subramanian     Ramani Balakrishnan    Rukmani Gopalan      Ambika    Sandhya    Sundar Vedantham     

உதிரிவெடி 3256

இன்றைய (24/03/2018) வெடி வாஞ்சிநாதன் *********************** எச்சரிக்கை: ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் கணிதம் மற்றும்  கணினி அறிஞர் டோனால்ட்  குனூத்   வடிவமைத்து உருவாக்கிய மென்பொருள் பற்றிய நூலில் (The TeXbook) உதாரணங்களையெல்லாம் ஒரு சூட்சுமத்துடன் விவரிப்பார்.    பல வருடங்களுக்குப் பிறகு அந்த நூலைத் தேடியெடுத்து இன்று கொஞ்சம் படிக்க வேண்டியிருந்தது.  இன்றைய புதிரில் அதன் தாக்கம் இருக்கும். ஜாக்கிரதை! இப்புதிருக்கு விடையுடன் சரியான விளக்கத்தை அளிப்பவர்களுக்கு விசேஷமான பாராட்டுகள் உண்டு! புதிராசிரியர் முதல் குறுக்கெழுத்தில் எழுத்துகள் எண்ணிக்கை இரண்டுக்குச் சமம் (3) Click here for the English clue of 24th March 2018, Krypton 15     Loading...

விடை 3255

இன்று (23/03/2018) காலை வெளிவந்த வெடி: ஒப்பந்தம் எழுதத் தேவையானது சொல்லும்போது மணி கொட்டினாள்  (7) இதன் விடை:  முத்திரைத்தாள்.  இதைச்  சொல்லும்போது முத்து இறைத்தாள் (மணி கொட்டினாள்) என்பது போல் ஒலிக்கிறது.

உதிரிவெடி 3255

இன்றைய (23/03/2018) வெடி  வாஞ்சிநாதன்   ********************* ஒப்பந்தம் எழுதத் தேவையானது சொல்லும்போது மணி கொட்டினாள்  (7) Loading...

விடை 3254

இன்று (22/03/2018) காலை வெளியான வெடி: கடைசியில் ஓர்ஆயுதம் முன்னே சூடு (4) இதற்கான விடை:   முடிவில் = முடி + வில்;  முடி = சூடு, அதாவது சூடிக்கொள் (பூமுடித்து பொட்டுவைத்து ) வில் = ஓராயுதம்

விடை 3253

இன்று (21/03/2018) காலை வெளியான வெடி:  இன்று முதல் சுழலும் சூறாவளி குணம் (4) இதற்கான விடை: இயல்பு = இ + புயல்

விடை 3252

இன்று (20/03/2018) காலை வெளியான வெடி: இதற்கு முன்னே விடு புதிர், பின்னே விடு புளுகு (2) இதற்கான விடை: கதை   (விடுகதை - புதிர்;  கதைவிடு - புளுகு)

உதிரிவெடி 3252

இன்றைய (மார்ச் 20, 2018) வெடி வாஞ்சிநாதன் ******************* இதற்கு முன்னே விடு புதிர், பின்னே விடு புளுகு (2) Loading...

விடை 3251

இன்று (19/03/2018) காலை வெளியான வெடி எட்டு முறை முத்தமிடத் தேவையானது (4)  இதற்கான விடை: அதரம்   (உதடு) = அ + தரம். சிலர் அனுப்பியுள்ள கன்னம் என்ற விடை பொருத்தமானதில்லை. முத்தம் பெறுவதற்குத்தான் கன்னம் வேண்டும், இடுவதற்குத் தேவையல்ல. சிலர் அவசிய என்ற விடையை அளித்திருக்கிறார்கள். நிறைய முத்தம் கொடுக்க ஆசை இருந்தால் போதாதோ? ஏன் வசியம் எல்லாம் செய்ய வேண்டும்?

விடை 3250

 இன்று காலை (18/03/2018) வெளியான வெடி வியாழனுக்குப் பின் வியாழன் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைக்கும் இயல்புடையது (3) இதற்கான விடை: குருவி   = குரு + வி ( யாழன்)

Solution to Krypton 14

Today's clue: She covered passion  to encase in a tight manner (7) Solution:  Sheathe  (Heat inside She) For about half an hour initially the clue wrongly mentioned the length of the solution as  6 letters. I hope the early correction was in time to clear the confusion. Solved by the following 14 persons: Kesavan    K.BALASUBRAMANIAN    R. RAVISHANKAR.    R.Narayanan    Meenakshi Ganapathi    Siddhan    Dr. B. Chandramouli    Ravi Subramanian     S P Suresh      Suba Srinivasan    Maithreyi       S.R.BALASUBRAMANIAN    M.K.RAGHAVAN.        Senthil Sowrirajan    

உதிரிவெடி 3250 மற்றும் மற்றும் பழைய‌ வெடி குறித்த தகவல்

 மார்ச் 17, 2018  வெடி வாஞ்சிநாதன் ******************* Click here for Sunday's English clue, Krypton 14 இன்றைய புதிருக்குப் போகும் முன் முந்தாநாள் தோசை வார்த்த விஷயம் குறித்து கருத்துரையாக‌ ரங்குடு என்னும் வாசகர் ஒரு  தமிழ் ஆங்கில சொல் விளையாட்டைக் கூறியதைப் பற் றி . அதையும் அதற்கான என்னுடைய பதிலையும் எத்தனை பேர் பார்த்தீர்களென்று தெரியவில்லை. அதனால் இந்த ஞாயிறன்று அதைப் படித்து மகிழ இங்கே மீண்டும் இடுகிறேன்: ரங்குடு அளித்த துணுக்கு: தமிழில் போர் என்றால் ஆங்கிலத்தில் வார் (war). ஆங்கிலத்தில் போர் (pour) என்றால் தமிழில் வார்( ஊற்று).  தமிழோடு ஆங்கிலப் புதிரும் வெளிவரும் நாளான இன்று அதை நான் இரண்டு குறட்பாக்களாக்கியுள்ளேன்:   போரென்று  கேட்டால்வா ளேந்திப் புறப்படாதே வாரென் ற‌கத்தினில் வை.   வாரென்று சொன்னால்நீ ரூற்றிட வந்திடாதீர் போரென்று கொள்வீர் புரிந்து இன்றைய வெடி: வியாழனுக்குப் பின் வியாழன் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைக்கும் இயல்புடையது (3)  Loading...

Solution to Krypton 13

The clue of this morning (Krypton 13): Tens changed with a coin deposit (8)  Its solution:  Sediment = tens + dime Solved by the following 18 persons: S.Parthasarathy    Meenakshi Ganapathi    Kesavan    R.Narayanan.    S.R.BALASUBRAMANIAN    Ravi Subramanian     Lakshmi Shankar    ravi sundaram    S P Suresh    கோவிந்தராஜன்    Siddhan    K.BALASUBRAMANIAN    Ambika    Sandhya    Dr. B. Chandramouli    M. K. RAGHAVAN.      NT NATHAN    Sundar Vedantham    ~

விடை 3249

 இன்று காலை வெளியான வெடி ஒரு நட்சத்திரம் ஓரங்களில் நிற்பவர் பின் வர எதுவும் மிஞ்சாத அழிவு (5 ) இதற்கான விடை: நிர்மூலம் = நிர் + மூலம்

உதிரிவெடி 3249

இன்றைய (மார்ச் 17, 2018) வெடி வாஞ்சிநாதன் ******************* ஒரு நட்சத்திரம் ஓரங்களில் நிற்பவர் பின் வர எதுவும் மிஞ்சாத அழிவு (5) Click here for  today's English clue  Loading...

விடை 3248

இன்று (16/03/2018) காலை வெளியான வெடி: அய்யர் வீட்டில் தோசை சுட்டு மூன்றாவது நபர் ஒரு பறவைக்குத் தந்தார் (4) இதற்கான விடை:  வார்த்து = (நப) ர் + வாத்து ஓட்டலிலும் பெரும்பாலான வீடுகளிலும் தோசையை சுட்டுத் தருவார்கள். ஆனால் அய்யர் வீடுகளில் மாவைத் துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவோ என்னவோ துப்பாக்கியைப் பயன்படுத்தாமல் வார்த்துக் கொடுப்பார்கள்.

உதிரிவெடி 3248

இன்றைய (மார்ச் 16, 2018) வெடி வாஞ்சிநாதன் ******************* அய்யர் வீட்டில் தோசை சுட்டு மூன்றாவது நபர் ஒரு பறவைக்குத் தந்தார் (4) Loading...

விடை 3247

இன்று (15/03/2018) காலை வெளியான வெடி வான் முழக்கமின்றி இரண்டாம் படி  நிலை குலைய‌ மடத்துத் துறவி (5) இதற்கான விடை: பண்டாரம்  இரண்டாம்படி என்பதில் வான் முழக்கமான "இடி" போக எஞ்சிய  "ரண்டாம் ப" என்ற எழுத்துகளின் கலைந்த வடிவம்.

உதிரிவெடி 3247

இன்றைய (15/03/2018) வெடி வாஞ்சிநாதன்   ******************************************************** வான் முழக்கமின்றி இரண்டாம் படி  நிலை குலைய‌ மடத்துத் துறவி (5) Loading...

விடை 3246

இன்றைய (14/03/2018) வெடி: வென்றிடாத  எவருக்கும் கடைசியாக வந்து கண்ணுக்குத் தெரிவது  (4) இதற்கான விடை: தோற்றம் = தோற்ற + (எவருக்கு) ம் முதலில் வந்து என்ற சொல் இல்லாமல்தான் இவ்வெடியை அமைத்தேன். அதைச் சேர்த்தால் எந்த வார்த்தையின் கடைசி எழுத்து  என்று கொஞ்ச அதிக நேரம் குழப்பலாம் என்ற நல்ல எண்ணத்தில் பிறகு மாற்றினேன்.

உதிரிவெடி 3246

இன்றைய(14/03/2018) வெடி   வாஞ்சிநாதன் ******************* வென்றிடாத  எவருக்கும் கடைசியாக வந்து கண்ணுக்குத் தெரிவது  (4) Loading...

விடை 3245

இன்று (13/03/2018) காலை வெளியான வெடி: எல்லோருக்கும் பிடுங்கல்களை ஏற்றுக் கொண்டு வணங்கு (4) இதற்கான விடை: கும்பிடு . புதிரிலேயே விடை ஒளிந்துள்ளது. எல்லோருக் கும் பிடு ங்கல்களை ... (இன்று காலை சுமார் 15 நிமிடங்களுக்கும் மேல் தாமதமாக புதிர் வெளியிட்டேன். மறக்காமல் நம்பிக்கையுடன் எட்டிப் பார்த்த எல்லோருக்கும் நன்றி. ஆஸ்கார் பரிசளிக்கும் விழாவில் ஜிம்மி கிம்மெல் கூறியது போல்  ஒரு எச்சரிக்கை அளிக்கிறேன். புதிர் சரியான நேரத்தில் வந்தாலும் மீண்டும் ஒருமுறை ஏழு மணிக்கு மேல் எட்டிப் பார்க்கவும். ஏதேனும் தவறு செய்திருந்தால் திருத்தியிருப்பேன்!)

உதிரிவெடி 3245

இன்றைய (13/03/2018) வெடி வாஞ்சிநாதன் ******************  எல்லோருக்கும் பிடுங்கல்களை ஏற்றுக் கொண்டு வணங்கு (4)  Loading...

விடை 3244

இன்று (12/03/2018) காலை வெளியான வெடி ஒரு தானியம்  ஈரத்தைப் பிழிந்த மிடுக்கான தோற்றம்    (3) இதற்கான விடை: கம்பு  = கம்பீரம் - ஈரம் (கம்பீரம் என்பதே கம்பு ஈரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்!)

உதிரிவெடி 3244

இன்றைய (12/03/2018) வெடி வாஞ்சிநாதன் ******************** ஒரு தானியம்  ஈரத்தைப் பிழிந்த மிடுக்கான தோற்றம்    (3) Loading...

Solution to Krypton 12

Clue for today: Many struggle with US, UN and more (8) Solution:  Numerous , anagram of  US, UN more Solved by tbe following 25 persons: K.BALASUBRAMANIAN    S.Parthasarathy    Meenakshi Ganapathi    Suba Srinivasan    Ambika    S.Parthasarathy    Maithreyi Sivakumar     Muthusubramanyam    M K RAGHAVAN    R. Ravishankar NT Nathan    Lakshmi Shankar    Ramani Balakrishnan     Kesavan    Siddhan      S P Suresh    R.Narayanan.    Rukmani Gopalan    Senthil Sowrirajan    Sandhya    R. Padma      Srivina    Raji Hariharan    Radha Desikan    BhuvanaSivaraman    

விடை 3243

இன்று (11/02/2018) காலை வெளியான வெடி: செய்யுள் ஆக்குவது போன்ற நடிப்பு? (3) இதற்கான விடை: பாவனை = பா + வனை

உதிரிவெடி 3243

இன்றைய (11/03/2018) வெடி வாஞ்சிநாதன் ********************* செய்யுள் ஆக்குவது போன்ற நடிப்பு? (3) Click here for Sunday's English clue, Krypton 12  Loading...  

Solution to Krypton 11

Today's clue:  Drafted again in blood colour, green and finally cyan (7) Solution:   Redrawn = Red raw  n Solved by 11 persons: Srivina    K.BALASUBRAMANIAN    Kesavan    Ravi sundaram     Ambika    Suba Srinivasan    Maithreyi Sivakumar     NT Nathan    Rukmani Gopalan    S P Suresh    R.Narayanan.   

விடை 3242

இன்று (10/03/2018) காலை வெளியான வெடி: நெய்வேலி மக்கள் காட்டும் அக்கறை? (5) இதற்கான விடை: கரிசனம் = கரி + சனம்

உதிரிவெடி 3242

இன்றைய (10/03/2018) வெடி வாஞ்சிநாதன் ********************** நெய்வேலி மக்கள் காட்டும் அக்கறை? (5) Click here for this Saturday's English clue, Krypton 11 Loading...

விடை 3241

இன்று (09/03/2018) காலை வெளியான வெடி: உயர்ந்த வயல் நடு முன்னே தாங்க முடியாத வாசனை (3) இதற்கான விடை: நெடிய = நெடி + ய (நடு வயல்)  இன்று  ஆறு பேர் "நாற்று" என்ற விடையை அளித்துள்ளார்கள்

விடை 3240

இன்று (08/03/2018) காலை வெளியான வெடி: அடிக்கு உதவாதவன் என்றாலும் அவன் ரமாவைச் சுற்றி ஆடியது  மிகவும் அருமை (5) இதற்கான விடை: பிரமாதம் = ரமா + தம்பி   அடி உதை உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்று ஒரு பழமொழி இருக்கிறது.  அதில் வரும் அண்ணனைக் கழட்டிவிட்டு தம்பியை மட்டும் பிடித்துக் கொண்டு இந்தமாதிரி  வெடி வருவதெல்லாம் புதிர் உலகில்  சகஜம். இன்று பல விதமான தவறான விடைகள் வந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஓரளவு நியாயம் இருக்கும். ஆனால் முழுதும் புதிரை விளக்காது என்று தெரிகிறது. அப்படி வந்த தவறான விடைகள்: லக்ஷ்மணன,  சகோதரன், தரமானது, தம்பிரான் --> இந்த மார்ச் 8ஆம் தேதி  பிள்ளையாரைச் சுற்றாமல் எல்லாப்  பெண்களுக்கும் பிரதிநிதியாகக் கருதி ரமாவைச் சுற்றி வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்று தம்பி இக்காரியத்தைச் செய்திருக்கிறான். அதை உங்களுக்குத் தெரிவிக்கவே இன்றைய வெடி.

உதிரி வெடி 3240

இன்றைய (08/03/2018) வெடி வாஞ்சிநாதன் ****************** அடிபோல் உதவாதவன் என்றாலும் அவன் ரமாவைச் சுற்றி ஆடியது மிகவும் அருமை (5) Loading...

விடை 3239

இன்று காலை வெளியான வெடி: சாமி முதலில் ஜகன்னாதன் ஊருக்கு வந்தாலும் அவருடைய வரத்தைத் தடை செய்பவர்! (3) இதற்கான விடை: பூசாரி = பூரி + சா  (பூரி = ஜகன்னாதன் ஊ ர் ; சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டார் என்பது ஒரு பேச்சு வழக்கு)  

உதிரி வெடி 3239

இன்றைய (07/03/2018) வெடி வாஞ்சிநாதன் ****************** நேற்றைய புதிரில் (உதிரி வெடி 3238) களி என்ற  உணவை இனிப்பு என்று குறிப்பிட்டிருந்தேன். அது பொருட்குற்றம் என்கிறார் தி பொ ராமநாதன். பிறகு அதைப் பற்றி விசாரித்ததில் உப்புக் களியும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.  சிறையில் இருப்பவர்களை ப் பரவலாக‌க் கம்பி எண்ணுபவர்கள் என்று கூறுவது போலவே,  களி சாப்பிடுபவர்கள் என்றும் கூறுகிறார்கள். இதிலிருந்து நான் உஷாராகியிருக்க வேண்டும். தவறைச் சுட்டிக் காட்டியவர்க்கு நன்றி. சரி இன்றைய ஆட்டத்திற்கு வருவோம்: சாமி முதலில் ஜகன்னாதன் ஊருக்கு வந்தாலும் அவருடைய வரத்தைத் தடை செய்பவர்! (3) Loading...

விடை 3238

இன்று (06/03/2018) காலை வெளியான புதிர்; ஓர் இனிப்புப் பதார்த்தத்தைப் பெற யானை கடைசிக் கன்று இழந்தது  (2) இதற்கான விடை: களி = களிறு - று

உதிரி வெடி 3238

இன்றைய (06/03/2018) வெடி வாஞ்சிநாதன் ****************** ஓர் இனிப்புப் பதார்த்தத்தைப் பெற யானை கடைசிக் கன்று இழந்தது  (2) Loading...

விடை 3237

இன்று (05/03/2018) காலை வெளியான வெடி: ஒரு மரம் பழுதுபார்க்குமிடத்தில் முத்து உதிர்ந்தது (2) இதற்கான விடை:  பனை = பணிமனை - மணி

உதிரிவெடி 3237

இன்றைய (05/03/2018) உதிரிவெடி  வாஞ்சிநாதன் ************************** ஒரு மரம் பழுதுபார்க்குமிடத்தில் முத்து உதிர்ந்தது (2) Loading...

விடை 3236

இன்று (04/03/2018) காலை வெளியான வெடி: எய்யப்படுவதில் ஒரு பாதிதான் வந்திருக்கிறது, இனிமேல்தான் மலரும் (4) இதற்கான விடை:  அரும்பு = அம்பு  + ரு

Solution to Krypton 10

Today's clue: Sad, moody and  distressed about  the  time of judgement  (8) Its solution: Doomsday (anagram of sad, moody) Solved by: S.R.Balasubramanian      Lakshmi Shankar    K.BALASUBRAMANIAN    Meenakshi Ganapathi    R.Narayanan.    Kesavan    NT Nathan    Kalyani Desikan       Ambika    Srivina    Sandhya    Raji Hariharan    Sankarasubramanian    Rukmani Gopalan    M K RAGHAVAN    M Balu    Bhuvana Sivaraman    Siddhan R. Padma S.P.Suresh

உதிரிவெடி 3236

இன்றைய (04/03/2018) வெடி வாஞ்சிநாதன் ********************** எய்யப்படுவதில் ஒரு பாதிதான் வந்திருக்கிறது, இனிமேல்தான் மலரும் (4)  Click here for Sunday's English clue Loading...

Krypton 10

Krypton 10 (04/02/2018 ) Vanchinathan ************** Sad, moody and  distressed about  the  time of judgement  (8) Yesterday's list of solvers missed out  the name of Meenakshi Ganapathi. My sincere apologies. . . . .

Solution to Krypton 9

This morning's clue: Heartfelt, because  comes with the purest heart (7) Solution:  SINCERE = since + re ( pu re st heart ) The list of solvers will be published as a comment to this after 10.30 pm.

விடை 3235

இன்று (03/03/3018) காலை வெளியான வெடி மென்மையான உடல் பக்கத்தில்  வாசிக்கப் படுவது  (6)  இதற்கான விடை:  மிருதங்கம்  = மிருது + அங்கம் ('பக்க' வாத்தியமாக வாசிக்கப்படுவது).

உதிரிவெடி 3235

இன்றைய (03/03/2018) வெடி 3235:  வாஞ்சிநாதன் *********************   மென்மையான உடல் பக்கத்தில்  வாசிக்கப் படுவது  (6)  Click here to see this Saturday's English clue Loading...

விடை 3234

இன்று (02/03/2018)  காலை வெளியான வெடி: அவசரமில்லை  பல்லவிக்கு முன் வருவது நிஷாதத்துக்குப் பின் வரட்டும்  (4)  இதற்கான விடை:  நிதானம் = நி (நிஷாதம்) + தானம்  ( ராகம், தானம், பல்லவி)

உதிரிவெடி 3234

இன்றைய (02/03/2018) வெடி 3234:  வாஞ்சிநாதன் *********************   அவசரமில்லை  பல்லவிக்கு முன் வருவது நிஷாதத்துக்குப் பின் வரட்டும்  (4)  Loading...

விடை 3233

இன்று (01/03/2018) காலை வெளியான வெடி: சுடத் தொடங்கிய காயத்தின் அடையாளம், இல்லை நடந்த அடையாளம் (3) இதற்கான விடை: சுவடு = சு + வடு விடையளித்தவர்கள் பட்டியல் 9.30மணிக்கு

உதிரி வெடி 3233

இன்றைய (01/03/2018) வெடி வாஞ்சிநாதன் ****************** சுடத் தொடங்கிய காயத்தின் அடையாளம், இல்லை நடந்த அடையாளம் (3) Loading...