மார்ச் 17, 2018 வெடி
வாஞ்சிநாதன்
*******************
Click here for Sunday's English clue, Krypton 14
இன்றைய புதிருக்குப் போகும் முன் முந்தாநாள் தோசை வார்த்த விஷயம் குறித்து கருத்துரையாக
ரங்குடு என்னும் வாசகர் ஒரு தமிழ் ஆங்கில சொல் விளையாட்டைக் கூறியதைப் பற்றி. அதையும் அதற்கான என்னுடைய பதிலையும் எத்தனை பேர் பார்த்தீர்களென்று தெரியவில்லை. அதனால் இந்த ஞாயிறன்று அதைப் படித்து மகிழ இங்கே மீண்டும் இடுகிறேன்:
ரங்குடு அளித்த துணுக்கு:
தமிழில் போர் என்றால் ஆங்கிலத்தில் வார் (war).
ஆங்கிலத்தில் போர் (pour) என்றால் தமிழில் வார்( ஊற்று).
தமிழோடு ஆங்கிலப் புதிரும் வெளிவரும் நாளான இன்று அதை நான் இரண்டு குறட்பாக்களாக்கியுள்ளேன்:
போரென்று கேட்டால்வா ளேந்திப் புறப்படாதே
வாரென் றகத்தினில் வை.
வாரென்று சொன்னால்நீ ரூற்றிட வந்திடாதீர்
போரென்று கொள்வீர் புரிந்து
இன்றைய வெடி:
வியாழனுக்குப் பின் வியாழன் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைக்கும் இயல்புடையது (3)
Comments