Skip to main content

விடை 3262

இன்று (30/03/2018) காலை வெளியான வெடி
அக்ரஹாரத்தில் சாம்பாருக்கு அடுத்தது   திரிந்து முற்ற   துறவி வெளியே சென்றார் (5)  
இதன் விடை: சாற்றமுது  (பேச்சில் சாத்தமுது) =சாது + முற்ற

இச்சொல்லில் இரண்டு கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:
அமுது என்று இருப்பதால் சாறு அமுது, ரசம்சாதமாக இருக்குமோ என்று கேட்டேன்.  இல்லை ரசத்துக்குதான் அப்படிச் சொல்வது என்கிறார்கள்.

 பொதுவாக இசைக்கு பதில் சங்கீதம்,  தண்ணீருக்கு ஜலம்/தீர்த்தம், திருநீறுக்கு விபூதி என்று சம்ஸ்கிருதச் சொற்களைப்  புழங்குபவர்கள்,   ரசம் (ரஸ்) என்ற வடமொழி மூலங்கொண்ட  சொல் தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும்போது,   அதைவிட்டு அழகான தமிழ்ச்சொல்லான சாற்றமுதைப் பயன்படுவதுதான்!

Comments

Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (32):

1) 6:11:51 முத்துசுப்ரமண்யம் சாத்தமுது
2) 6:12:38 லக்ஷ்மி ஷங்கர் சாற்றமுது
3) 6:19:01 ரவி சுப்ரமணியன் சாற்றமுது
4) 6:21:50 மைத்ரேயி சாத்தமுது
5) 6:29:49 எஸ்.பார்த்தசாரதி சாற்றமுது
6) 6:54:25 சாந்திநாராயணன் சாத்தமுது
7) 7:23:41 வீ.ஆர். பாலகிருஷ்ணன் சாத்தமுது
8) 7:31:14 அம்பிகா சாற்றமுது
9) 7:38:23 ரா. ரவிஷங்கர்.. சாத்துமது
10) 7:40:06 நங்கநல்லூர் சித்தானந்தம் சாற்றமுது
11) 7:45:37 மரு.ப.சந்திரமொளலி சாற்றமுது
12) 7:58:25 சுபா ஸ்ரீநிவாசன் சாத்தமுது
13) 8:01:47 ருக்மணி கோபாலன் சாற்றமுது
14) 8:41:24 ஆர். பத்மா சாத்தமுது
15) 8:51:24 கி. பாலசுப்ரமணியன் சாற்றமுது
16) 9:06:08 மீனாக்ஷி கணபதி சாற்றமுது
17) 9:53:00 ராதா தேசிகன் சாற்றமுது
18) 10:30:26 விஜயா ரவிஷங்கர் சாத்தமுது
19) 10:58:24 வானதி சாத்தமுது
20) 11:11:14 மைத்ரேயி சிவகுமார் சாற்றமுது
21) 11:23:43 மு.க.இராகவன். சாத்தமுது
22) 11:57:01 தேன்மொழி சாற்றமுது
23) 12:39:17 ஸௌதாமினி சாதஂதமுது
24) 16:50:04 கோவிந்தராஜன் சாற்றமுது
25) 17:05:25 சுந்தர் வேதாந்தம் சாற்றுமுது
26) 18:20:25 ஏ.டி.வேதாந்தம் சாற்றமுது
27) 18:21:01 பத்மாசனி சாற்றமுது
28) 18:57:59 சுபா ஸ்ரீநிவாசன் சாற்றமுது
29) 19:13:08 Thi Po Ramanathan Saa T(R) Ra Mu Thu
30) 19:29:56 எஸ் பி சுரேஷ் சாற்றமுது
31) 20:28:01 ஶ்ரீதரன் சாற்றமுது
32) 20:59:40 கி மூ சுரேஷ் சாற்றமுது
************************
Vanchinathan said…
எஸ் பி சுரேஷ் அனுப்பிய கருத்து: சாற்றமுது விளக்கம் - முற்ற என்பதன் திரிபு ற்றமு! அதற்கு வெளியே சாது! ஐயங்காராக இல்லாததால் விடைகாண வெகு நேரம் ஆயிற்று! எல்லோரும் உண்பதுதானே ரசம், ஐயர்கள் மட்டும் உண்பது என்ன என்று நெடு நேரம் குழம்பி, இறுதியில் இரவு ஒரு விசேஷ சாப்பாட்டில் ரசம் சாதம் உண்கையில் விடை கிடைத்தது!
நான் திரிந்த முற்ற என்றவுடன் இது ஏதோ இலக்கண சமாசாரம் என்று விட்டு விட்டேன். ரசத்திற்கு இப்படிப்பட்ட வார்த்தை இருப்பதும் தெரியவில்லை. ரசமான புதிர் .
Ambika said…
நேற்று சாம்பார், இன்று சாம்பாருக்கு அடுத்த ரசம், நாளை என்ன தயிரா🤔
Sridharan said…
ரசமான புதிரை பற்றி கேள்விபட்டுள்ளோம். ஆனால் ரசமே புதிரானது. புதுமைதான்.
சாம்பார், ரசம் அடுத்து தயிரா?!
Vanchinathan said…
நாளைக்குத் தயிர் இல்லை, பழ ஆகாரம். மேலும் விவரங்களை அறிய நாளை காலை 6 மணிக்கு வரவும்

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்