Skip to main content

விடை 3263

இன்று (31/03/2018) காலை வெளியான வெடி
மாமாங்கத்திற்கு ஒரு முறை கனியுணவு உண்பவர் சற்று முன்பே பிறந்திருந்தால் துலாராசிக்காரர்  (6)
இதன் விடை:  விருச்சிகர். மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடப்படும் இவர் பன்னிரண்டாண்டுகளுக்கு.  ஒரு முறை நாவல் பழத்தை மட்டும் சாப்பிடுவார்.
(சற்று முன்பே பிறந்திருந்தால், விருச்சிகத்திற்கு முந்தையராசியான  துலாம் ராசி.
)
அவ்வாறாக நாவற்கனியைத் தயாராக வைத்துவிட்டு  அவர்  குளத்தில் குளித்துக் 
கொண்டிருந்தபோது அவ்வழி வந்த காயசண்டிகை கவனமின்றி அதை மிதித்து உருக்குலைத்துவிட்டாள்.  அதனால் அடுத்த பன்னிரு ஆண்டுகள் தான் பசியாக இருக்கையில் காயசண்டிகையும் அடங்காப் பசியால் துன்புற வேண்டும் என்று சாபமிட்டார். (இந்தக் காப்பியப் புத்தகத்தை நான் எடுத்துப் படித்ததில்லை. கும்பகோணம் பாணாதுறைப் பள்ளியில் என்னுடைய தமிழாசிரியர் எட்டாம் வகுப்புப்  பாடம் நடத்திய போது சொன்னது.)

சரியான விடையளித்தவர்கள், மூன்று வகையாக:  ஒற்றை நட்சத்திரம்
 பெற்றவர்கள் (1 பேர்) விடையை மட்டும் அனுப்பியுள்ளார்கள். இரண்டு நட்சத்திரம் பெற்றவர்கள் ( 4 பேர்)
 ஓரளவு சரியான விளக்கம் அளித்துள்ளார்கள்
மூன்று நட்சத்திரம் பெற்றவர்கள் (10 பேர்) முழுதும் சரியான விளக்கத்தை அளித்துள்ளார்கள்

   6:05:27 ரங்கராஜன் யமுனாச்சாரி **    
   6:17:35 ரவி சுப்ரமணியன்      ***
   7:28:48 அம்பிகா ***   
   7:34:20 ராஜி ஹரிஹரன் ***               
   7:44:37 கு.கனகசபாபதி ***
   7:56:18 வானதி ***
   8:04:56 லதா    **
   8:16:26 ரவி சுந்தரம்  **           
  10:06:58 கி. பாலசுப்ரமணியன்     ***
  11:32:30 சுபா ஸ்ரீநிவாசன் ***
  13:23:38 மீனாக்ஷி கணபதி    ***
  15:05:04 மைத்ரேயி சிவகுமார்  *           
  20:00:45 விஜயா ரவிஷங்கர் *
   20:19:58 ரா. ரவிஷங்கர் ***
  20:25:37 ருக்மணி கோபாலன் **
  20:45:55 சுந்தர் வேதாந்தம் ***

-->

Comments


இருவர் ஒரு நட்சத்திரம் பெற்றுள்ளனர். மொத்தம் 16 பெயர்கள்
Muthu said…
இண்டர்மீடியட்டில் மணிமேகலை கொஞ்சம் இருந்தது. காயசண்டிகையின் தீராப்பசி தெரியும். ஆனால் இந்த விருச்சிகர் வியவஹாரம் படித்ததில்லை!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.