Skip to main content

Posts

Showing posts from 2024

திரிவெடி 5

திரிவெடி 3 (13/04/2024)   வாஞ்சிநாதன்     இதில்  ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றில்   நான்கு சொற்களுக்கு ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத ஐந்தாவது சொல் எது என்று கண்டுபிடிப்பதும்தான் உங்கள் வேலை. குறுக்கெழுத்துப்புதிர் போல் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு இருக்கலாம். அல்லது பொது  அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம். இன்றைய திரிவெடி:   மலேயா, வியட்நாம், பர்மா,  சயாம், கம்பூசியா இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 424

Yesterday's clue Highly skilled performer indeed catches a wild boar (7) Solution: ACROBAT = ACT + BOAR ACT = deed TROBA = 'wild' boar, in deed (act) Statutory warning: Wild boars are caught by highly trained and skilled people. Others are requested not to the same! Visit this page to see all the solutions received.

விடை 4290

நேற்றைய வெடி: உள்ளுக்குள்ளே வாட்டும் காற்று எதிர்ப்புறமாய் வீச வெட்டுவது (4) அதற்கான விடை: உடைவாள் இதற்கு விடை கண்ட அனைவரும் சரியான விளக்கத்தை அளித்திருக்கின்றனர். பிரசாத் வேணுபோபால் விவரமாக விள‌க்கத்தை எழுதியுள்ளார். அதை அப்படியே இங்கே இடுகிறேன்: உள்ளுக்குள்ளே = உள் என்பதின் நடுவே, வாட்டும் காற்று = வாடை , எதிரே = வாடை திரும்பி டைவா என மாறி உள் என்பதன் நடுவே வர உடைவாள். ஒரு வெட்டும் கருவி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். <b

திரிவெடி 4 விடைகள்

நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் பிரம்மபுத்ரா, காவிரி, கங்கை, தீஸ்தா, கோதாவரி இதில் சேராதது, பிரம்மபுத்ரா : நதிகளின் பெயர்கள் பெண்களின் பெயராக இருக்கும், இது மட்டும் விதிவிலக்காக இருக்கிறது.   இதே விடைக்கு நான் எதிர்பாராமல் வாசகர்கள் கண்டுபிடித்த சரியான வேறொரு விளக்கம்: பிரம்மபுத்ரா  மட்டும்  சீன நாட்டில் உற்பத்தியாகும் நதி, மற்றவை இந்தியாவிலேயே உற்பத்தியாகின்றன. பெரியவர்கள் எல்லோரும் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தியதால் இதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்!   விடையைக் காண இங்கே சொடுக்கவும். நாளை மீண்டும் வரவும்.

உதிரிவெடி 4290

உதிரிவெடி 4290 ( ஏப்ரல் 21, 2024) வாஞ்சிநாதன் ************************* உள்ளுக்குள்ளே வாட்டும் காற்று எதிர்ப்புறமாய் வீச வெட்டுவது (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 4

திரிவெடி 2 (20/04/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   பிரம்மபுத்ரா, காவிரி,  கங்கை, தீஸ்தா,  கோதாவரி உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

உதிரிவெடி 4289 விடைகள்

நேற்று உதிரிவெடியில் கருத்துரையில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைப் புதிர் வடிவில் சௌம்யா தெரிவித்து அத்தொட்ர்பை அளித்திருந்தார். அவருக்கு நன்றி. ஆங்கிலத்தில் திக்குமுக்காடவைக்கும் புதிரளிக்கும் சௌம்யா தமிழிலும் அதுபோல் செய்து மகிழ்விக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். திரிவெடி 3 இன் விடையில் நேற்று "புதுமைப்பெண்" என்ற விதிவிலக்கு பற்றி கேட்டிருந்தேன். பலரும் அதைப் படிக்காமல் நேரே விடைப்பட்டியலைக் காணச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழறிஞர்களிடம் கேட்டாவது கருத்திடுங்கள். நேற்று காலை வெளியான வெடி மாலையில் காலைமுதல் போட்ட சாப்பாடு (4) அதற்கான விடை ஆகாரம் = ஆரம் (மாலை) + கா (லை) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 423

Krypton 423 (14th April, 2024) ****************** The act of giving shape to a scarf, or mat, I once held together (9) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4289

உதிரிவெடி 4289 (ஏப்ரல் 14 , 2024) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் மாலையில் காலைமுதல் போட்ட சாப்பாடு (4) விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 3 விடைகள்

 இன்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:  உண்மை, புதுமை, கூர்மை, இளமை, செம்மை.   தனது கூர்வாளை ஏந்தி அந்த இளவயதினள் செம்மரங்கள் அடர்ந்த  காட்டில் சென்றது புதுவெள்ளம் புரண்டோடியது போலிருந்தது என்றால் அது மிகையாகாது, உண்சொல்லே.  சாண்டில்யன் கதை போல் தொடங்கிய இந்த வாக்கியத்தில் கடைசியாக ஏதோ இடிப்பது போல் இருக்கிறதா? அதுதான் இன்றைய திரிவெடியில்  அடங்கிய பிணைப்பு.  கூர்மை (கூர்), இளமை (இள), செம்மை(செம்), புதுமை (புது) என்பவை பண்புப்பெயர்கள்,  மையையிழந்து பெயரடையாகும். ஆனால் உண்மையோ பல்லையிளிக்கும் (அல்லது உண்ணென்று சொல்லி  வாயைத் திறக்க வைக்கும்). மீ. கண்ணன், அகிலா ஸ்ரீ தரன், ராமகிருஷ்ண ஈஸ்வரன் இம்மூவரும் சரியாக‌ இதைக் கண்டறிந்து விடையளித்திருக்கிறார்கள்.   ஒரு சந்தேகம். சுற்றி எதுவும் இல்லாமல் தனிமையில் இருக்கும்  மரம் "தனிமரம்", வெண்மையாக வானில் மிதந்து வருவது "வெண்மேகம்" என்றால் , எங்கேயிருந்து இந்த "புதுமைப்பெண்" வந்தாள்? தெரிந்தவர்கள் விளக்கவும்.  இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.     

திரிவெடி 3

திரிவெடி 3 (13/04/2024)   வாஞ்சிநாதன்     இதில்  ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றில்   நான்கு சொற்களுக்கு ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத ஐந்தாவது சொல் எது என்று கண்டுபிடிப்பதும்தான் உங்கள் வேலை. குறுக்கெழுத்துப்புதிர் போல் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு இருக்கலாம். அல்லது பொது  அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம். இன்றைய திரிவெடி:   உண்மை, புதுமை, கூர்மை, இளமை, செம்மை இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 2 விடைகள்

நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் ஆடு, நண்டு, படகு, தராசு, மீன் இதில் ஆடு(மேஷம்), நண்டு (கடகம்), தராசு (துலாம்), மீன் (மீனம்) இவையெல்லாம் சோதிடத்தில் கூறப்படும் ராசிகள் என்பதால் தொடர்புடைய சொற்கள். படகு இதில் சேராதது. வேறு சில தொடர்புகள்: ஆடு, நண்டு, படகு, தராசு இவை உகரத்தில் முடிபவை, மீன் மெய்யெழுத்தில். ஆடு, நண்டு, படகு, மீன் போலில்லாமல் தராசு ஒரே இடத்தில் இருப்பது. அவை அவ்வளவு பலமாக இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் உங்கள் கற்பனைகளில் ஏதாவது நான் எண்ணிய தொடர்பை விடச் சிறந்ததாக இருக்கலாம். அனுப்பிக் கொண்டிருங்கள். இந்த புதுவித விளையாட்டில் வெறும் சொல் திறமை மட்டுமின்றி, பொது அறிவின் அடிப்படையிலும் தொடர்புகள் அமையும் என்பதை இனி வரும் நாட்களில் நினவு கொள்ளுங்கள். இனிமேல் சனிக்கிழமைதோறும் திரிவெடி. விடையைக் காண இங்கே சொடுக்கவும். நாளை மீண்டும் வரவும்.

திரிவெடி 2

திரிவெடி 2 (11/04/2024)   வாஞ்சிநாதன்     இதில் ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கைத் திரித்தால் ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத சொல் எது என்று கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. உதாரணம்:  அகலம், அதரம், அவலம், அங்கம் இதில் எதை ஒதுக்கினால் மிச்சத்தில் கயிறு திரிக்கலாம்? அங்கம் என்பது எனது விடை. அதைத் தவிர  மற்ற சொற்கள் எல்லாவற்றிலும் முதலெழுத்தை நீக்க, கலம், தரம், வலம் என்று பொருளுள்ள  சொற்கள் கிடைக்கின்றன. இன்றைய திரிவெடி: பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு சொற்கள் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராத சொல்?   ஆடு, நண்டு, படகு, தராசு, மீன் உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

திரிவெடி 1 விடை

உதிரவெடி தேய்ந்து 'உ' விழுந்து திரிவெடியாகியது என்று நினைக்காமல் இப்புதுவகைப் புதிரை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். அதற்கு நன்றி. இந்த வாரம் ர‌ம்ஜான் விடுமுறை வியாழக்கிழமை வருவதால் அன்றும் இன்னொரு திரிவெடி வெளிவரும். அதன் பிறகு சனிக்கிழமைதோறும் திரியும், ஞாயிறுகளில் உதிரியும் வெளியிடத் திட்டம். இன்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்: தாரம், நேசம், காயம், பாசம், காரம் இவற்றில் நான்கு சொற்கள் முன்பு "ஆ" என்ற‌ எழுத்தை ஒட்ட ஆதாரம், ஆகாயம், ஆபாசம், ஆகாரம் என்ற சொற்களைப் பெறலாம். நேசம்தான் இடிக்கிறது. அதுவே மற்றவையோடு சேராத சொல். இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். அடுத்த திரியில் சொல்லின் பொருளையும் பயன்படுத்தி விடையை அடையுமாறு அளிக்கிறேன்.

விடை 4288

நேற்றைய வெடி: கோபங்கொண்டு சத்துள்ள வேட்டைக்காரன் மாட்டைத் துரத்தினான் (7) அதற்கான விடை: ஆவேசத்துடன் = ஆ+ வேடன் + சத்து இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். <b

உதிரிவெடி 4288

உதிரிவெடி 4288 ( ஏப்ரல் 7, 2024) வாஞ்சிநாதன் ************************* கோபங்கொண்டு சத்துள்ள வேட்டைகாரன் மாட்டைத் துரத்தினான் (7) புதுமையான திரிவெடி ஆரம்பிச்சாச்சு. இங்கே போய் எட்டிப்பாருங்கள். விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Krypton 422

Krypton 422 (April 7th, 2024) ****************** Gentle blow to a bird structure (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

திரிவெடி 1

திரிவெடி 1 (07/04/2024)   வாஞ்சிநாதன்     நியூயார்க் டைம்ஸ் வெளியிடும் கனெக்ஷன்ஸ் புதிரைத் தழுவியமைக்கப்பட்டது இந்த வெடி. இதில் ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இழைகள் பலவற்றைத் திரித்து கயிறு உருவாக்குதல் போல இதில் நான்கைத் திரித்தால் ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத சொல் எது என்று கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. உதாரணம்:  அகலம், அதரம், அவலம், அங்கம் இதில் எதை ஒதுக்கினால் மிச்சத்தில் கயிறு திரிக்கலாம்? அங்கம் என்பது எனது விடை. அதைத் தவிர  மற்ற சொற்கள் எல்லாவற்றிலும் முதலெழுத்தை நீக்க, கலம், தரம், வலம் என்று பொருளுள்ள  சொற்கள் கிடைக்கின்றன. நான் புதிரை ஒருவிடையை மனதில் கொண்டே அமைப்பேன். என்னையறியாமல் சரியான விளக்கத்துடன் மற்றொரு விடை பொருந்தினாலும் எற்றுக்கொள்வேன்.  வேண்டுமென்றே 5 வயதுக் குழந்தைகள் கண்டுபிடிக்கும் தொடர்பும் வருமாறும் சொற்கள் இருக்கலாம். ஆனால் சற்றே ஆழமான பிணைப்பே சரியான விடையாக இருக்கும்.  நான் குறுக்கெழுத்துப்புதிரிலிருந்து வருவதால் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு இருக்கலாம். அல்லது பொது  அறிவை

விடை 4289

நேற்று உதிரிவெடியில் கருத்துரையில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைப் புதிர் வடிவில் சௌம்யா தெரிவித்து அத்தொட்ர்பை அளித்திருந்தார். அவருக்கு நன்றி. ஆங்கிலத்தில் திக்குமுக்காடவைக்கும் புதிரளிக்கும் சௌம்யா தமிழிலும் அதுபோல் செய்து மகிழ்விக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். திரிவெடி 3 இன் விடையில் நேற்று "புதுமைப்பெண்" என்ற விதிவிலக்கு பற்றி கேட்டிருந்தேன். பலரும் அதைப் படிக்காமல் நேரே விடைப்பட்டியலைக் காணச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழறிஞர்களிடம் கேட்டாவது கருத்திடுங்கள். நேற்று காலை வெளியான வெடி மாலையில் காலைமுதல் போட்ட சாப்பாடு (4) அதற்கான விடை ஆகாரம் = ஆரம் (மாலை) + கா (லை) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 421

Krypton 421 (31st March, 2024) ****************** Attempt by specialist to keep me covered within (10) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4287

உதிரிவெடி 4287 (மார்ச் 31, 2024) வாஞ்சிநாதன் ************************ மத்யமம் இல்லாத ஸ்வரத்தால் பெரிய தட்டுப்பாடு (4) விடைகள் தாமதமாக நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4286

நேற்றைய வெடி: புயலாக இடை வெளியில் இது வர சாத்தியமில்லை (4) அதற்கான விடை: இயலாது = இது + யலா யலா = 'புயலாக" என்பதன் இடை அதற்கு வெளியே "இது" இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். <b

Solution to Krypton 420

Yesterday's clue India's urban mass leaders behind financial identity and partial demonitization caused chaotic condition (11) Solution: PANDEMONIUM = PAN + DEMON + IUM PAN = Permanent Account Number, identity for financial transcations DEMON = partial demonitisation IUM = India's Urban Mass leaders DISCLAIMER: Any implied allusion to an Indian leader or reference to a specific event of November 2016 are purely a result of author's clever wordplay! To derive any further entertainment you are encouraged to read more than what it seems. Did not Thriruvalluvar say "நவில்தொறும் நூல்நயம்போலும்" ? Visit this page to see all the solutions received.

Krypton 420

Krypton 420 (March 24th, 2024) ****************** India's urban mass leaders behind financial identity and partial demonitization caused chaotic condition (11) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4286

உதிரிவெடி 4286 (மார்ச் 24, 2024) வாஞ்சிநாதன் ************************* புயலாக இடை வெளியில் இது வர சாத்தியமில்லை (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4285

நேற்று காலை வெளியான வெடி வடக்கே சூரியனை மறைத்த அந்த கடைசித் தருணம் மலரும் தாமரை (6) அதற்கான விடை அரவிந்தம் = அந்த + ரவி + (தருண) ம் ரவி = வடக்கே(வட மொழியில்) சூரியன் அரவிந்தம் = தாமரை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 419

Yesterday's clue Dancing hall where nude dance with tin is put to an end (12)) Solution: DISCONTINUED = DISCO + NTI + NUED Discontinued = put to an end DISCO = dancing hall NTI, NUED = anagrams of tin, dance Visit this page to see all the solutions received.

Krypton 419

Krypton 419 (17th March, 2024) ****************** Dancing hall where nude dance with tin is put to an end (12) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4285

உதிரிவெடி 4285 (மார்ச் 17, 2024) வாஞ்சிநாதன் ************************ தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் நாட்களை அறிவித்துவிட்டது. உதிரிவெடியிலும் தேர்தல் சூடு பிடித்துக் கொண்டது. உங்கள் வாக்கு எந்த சின்னத்துக்கு என்று முடிவு செய்து விட்டீர்களா? வடக்கே சூரியனை மறைத்த அந்த கடைசித் தருணம் மலரும் தாமரை (6) விடைகள் தாமதமாக நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4284

நேற்றைய வெடி: பரத்தை மெய்நீக்கி விதியுடன் போராடிய வட குலமகள் (5) அதற்கான விடை: பதிவிரதை = பரத்தை ‍- த் + விதி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். <b

Krypton 418

Krypton 418 (March 10th, 2024) ****************** Fight for a business degree lying in where one lies (6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4284

உதிரிவெடி 4284 (மார்ச் 10, 2024) வாஞ்சிநாதன் ************************* பரத்தை மெய்நீக்கி விதியுடன் போராடிய வட குலமகள் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4283

நேற்று காலை வெளியான வெடி வமுதிர் முத்து முனை வைத்து குற்றமுடைய‌து (3) அதற்கான விடை பழுது = பழு + து முதிர் = பழு முத்து முனை = து இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 417

Krypton 417 (3rd March, 2024) ****************** Tilt around rotating beam and return (8) SOLUTION will be delayed and appear on Monday night 9pm Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4283

உதிரிவெடி 4283 (மார்ச் 3, 2024) வாஞ்சிநாதன் ************************ முதிர் முத்து முனை வைத்து குற்றமுடைய‌து (3) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 416

Yesterday's clue Meat of the thigh with what is left from the foot almost mixed to provide care of the head (7) Solution: SHAMPOO = HAM + SPOOR - R HAM = meat of the thigh SPOOR = footprint (of an animal) Visit this page to see all the solutions received.

விடை 4282

நேற்றைய வெடி: வேடப்பெண்ணையும் வேழப்பெண்ணையும் கைப்பிடித்த நட்சத்திரக்காரன் (7) அதற்கான விடை: சகார்த்திகேயன் = முருகன், வள்ளி தெய்வானை இருவரையும் மணந்தவன் வேடப்பெண் = வள்ளிக்குறத்தி வேழப்பெண் = தெய்வானை (வேழம் = யானை) மனதில் தோன்றுவது சிந்தனை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். <b

Krypton 416

Krypton 416 (25th February, 2024) ****************** Meat of the thigh with what is left from the foot almost mixed to provide care of the head (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4282

உதிரிவெடி 4282 (பிப்ரவரி 25, 2024) வாஞ்சிநாதன் ************************* வேடப்பெண்ணையும் வேழப்பெண்ணையும் கைப்பிடித்த நட்சத்திரக்காரன் (7) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Solution to Krypton 415

Yesterday's clue Eternal final act in one that is not right (8) Solution: IMMORTAL = IMMORAL + T iMMORTAL = Eternal Final act = T Here 'one' refers to 'act'. One that is not right is 'immoral'. Visit this page to see all the solutions received.

விடை 4281

நேற்று காலை வெளியான வெடி வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) அதற்கான விடை கரும்பால் = கரும்+ பால் கரும்பால் = கரும்பினால் வேழம் = க‌ரும்பு எருமையானாலும் அதன் பால் வெண்ணிறம்தான். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 415

Krypton 415 (18th February, 2024) ****************** Eternal final act in one that is not right (8) SOLUTION will be delayed and appear on Monday night 9pm Click here and find the form to fill in your solution

விடை 4280

நேற்றைய வெடி: மனதில் தோன்றுவது வந்தது இடைவெளியில் உறுப்பு (4) அதற்கான விடை: சிந்தனை = சினை + ந்த‌ இடைவெளியில் என்பதை இடை, வெளியில் என்று பிரிக்கவும். ந்த = வந்தது இடை சினை = வெளியில் சினை (சினை = உறுப்பு) மனதில் தோன்றுவது சிந்தனை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். <b

Krypton 414

Krypton 414 (11th February, 2024) ****************** Niche area for postal covers, envelops (6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4280

உதிரிவெடி 4280 (பிப்ரவரி 11, 2024) வாஞ்சிநாதன் ************************* மனதில் தோன்றுவது வந்தது இடைவெளியில் உறுப்பு (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4279

நேற்று காலை வெளியான வெடி ஒரு பாதி கொண்ட குன்று ஓரம் (4) அதற்கான விடை மருங்கு = மங்கு + ரு மங்கு = குன்று (வினைச் சொல்) ரு = ஒரு பாதி வழி நெடுக சாலையின் இரு மருங்கிலும் புளிய மரங்கள். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 413

Krypton 413 (4th February, 2024) ****************** Highly valued object obtained when urea is mixed with the others (8) ) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4279

உதிரிவெடி 4279 (பிப்ரவரி 4, 2024) வாஞ்சிநாதன் ************************ ஒரு பாதி கொண்ட குன்று ஓரம் (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Updated Solution to Krypton 412

Yesterday's clue seems to have been more difficult than usual as the number of submissions is just 6. Among them ony 3 of them have given the correct answers. Even there I find, in my opinion, the explanation missing one crucial poit, though the split has been given. Congratulations to the three solvers, A Joseph Amirtharaj, S R Balasubramanian and Arunthathi I'd extend the deadline to tonight 10 pm with an additional hint. The clue should be split as "He does not defend" and " War hiding in a stream". (sidestepping the usual decoy of misleading punctuation). Revisit this same page after 10 pm to see the solution. Sometimes we get it right immediately, sometimes we need a dictionary and occasionally we need an additional hint, it is all in the game! Update: The clue: He does not defend war, hiding in a stream (7) The solution: FORWARD = FORD + WAR Ford = a stream (one that can be crossed by wading through it) FORWARD, as a noun means (in fo

விடை 4278

நேற்றைய வெடி: உள்ளுக்குள் ராஜ நியாயத்திற்கடங்காப் போக்கு (5) அதற்கான விடை: அராஜகம் = அகம் + ராஜ‌ அகம் = உள் "ராஜ", அதனுள் (அகத்திற்குள்) வர அராஜகம். இது நியாயமில்லைதான். இந்த ராஜ குற்றத்தைச் செய்த‌ 27 பேருக்கும் பாராட்டுகள்! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 412

Krypton 412 (28th January, 2024) ****************** He does not defend war, hiding in a stream (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4278

உதிரிவெடி 4278 (ஜனவரி 28, 2024) வாஞ்சிநாதன் ************************* உள்ளுக்குள் ராஜ நியாயத்திற்கடங்காப் போக்கு (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4277

நேற்று காலை வெளியான வெடி ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) அதற்கான விடை பரிதி = பதி + ரி பதி = ஊர் ரி = ஊரின் மையம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 411

Krypton 411 (21st January, 2024) ****************** To some extent he gives confidential information on her (6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4276

நேற்றைய வெடி: கூலியின்றித் தின்பதில் கடைப்போளி அழகுக்கு அடையாளமாகாது (6) அதற்கான விடை: கரும்புள்ளி = கரும்புள்ளி கரும்பு = கூலியின்றித் தின்பது கரும்புள் = கூலியின்றித் தின்பதில் ( கரும்பின் உள்ளே) ளி = கடைப் போளி போகி தினத்தில் சாப்பிடும் போளியும், கரும்பும் இடம் பெற்ற இப்புதிர் பொங்கலில் ஏகப்பட்ட அழகுடன் இருப்பதால் கண் பட்டுவிடக்கூடாது என்று இதை வைத்து விடுவோம்: • இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

பொங்கல் புதிர் 4276

உதிரிவெடி 4276 (ஜனவரி 15, 2024) வாஞ்சிநாதன் ************************* கூலியின்றித் தின்பதில் கடைப்போளி அழகுக்கு அடையாளமாகாது (6) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4275

br> இரு பாதங்களையும் சேர்த்துத் தாக்கினாள்! (5) இதற்கான விடை பாவனி = பாரதி ‍- ரதி + வ + னி அடித்தாள் = அடி + தாள் அடி, தாள் இரண்டும் பாதத்தைக் குறிக்கும் சொற்கள். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 410

Krypton 410 (14th January, 2024) ****************** Horryfying apparition killing host on French streets is nothing to the setter (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4275

உதிரிவெடி 4275 (ஜனவரி 14, 2024) வாஞ்சிநாதன் ************************ இரு பாதங்களையும் சேர்த்துத் தாக்கினாள்! (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். நாளைக்கும் பொங்கலை முன்னிட்டு உதிரிவெடி உண்டு! உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4274

நேற்றைய வெடி: மாலையில் தைத்த தரு வானிலே சிமிட்டும் (5) அதற்கான விடை: அருந்ததி = அந்தி + தரு அந்தி = மாலை அருந்ததி = நட்சத்திரம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 409

Krypton 409 (6th January, 2024) ****************** An open area found to contain air and greener borders (10) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4274

உதிரிவெடி 4274 (ஜனவரி 7, 2024) வாஞ்சிநாதன் ************************* மாலையில் தைத்த தரு வானிலே சிமிட்டும் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Solution to Krypton 408

Yesterday's clue Inferior bus overturned with key bird from the sea (9) Solution: SUBALTERN = SUB + ALT + ERN SUB = bus, overturned ALT = a key found in computer keyboards ERN = sea eagle Even though TERN is a bird and is part of the solution, this clue makes no references to that bird by intention. Unintentional refrences are always additional features and welcome decoys! WISH YOU ALL A HAPPY 2024 Visit this page to see all the solutions received.

விடை 4273

நேற்று காலை வெளியான வெடி: சங்கீத மாணவர்கள் கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளது (5) இதற்கான விடை உருப்படி உருப்படியான காரியம் என்றால் பயனுள்ள காரியம். சங்கீத மாணவர்கள் கற்றுக் கொள்ளும் பாடத்தை ஒரு உருப்படி கற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள். எல்லோருக்கும் இந்த 2024ஆம் ஆன்டு மகிழ்ச்சிகரமாகத் தொடங்கி, மகிழ்ச்சிகரமாகச் செல்ல‌ வாழ்த்துகள். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.